Saturday, 15 July 2017

பாராமுகமாகக் கீழடி மகுடத்தில் அகமதாபாத்

பாராமுகமாகக் கீழடி! 
மகுடத்தில் அகமதாபாத்!!

AHAMEDABAD













மூத்த தமிழின் சீரிளமை 
2500 ஆண்டு பழைமை தான்
அதற்கு 5000 சான்று பகர்கிறது கீழடி 

கீழடி தமிழர் பெருமிதமா?
சிகப்பு நாடாக்களுக்குள் துயிலும் 
மற்றுமொரு கோப்பு தானா?

வெறும்  அறுநூறு ஆண்டு வரலாறு
து தான்  அகமதாபாதி்ன் துருப்புச் சீட்டு

600 பெரியதா? 2500 சிறியதா?
கீழடி புதிய தலைமுறையா?
அகமதாபாத் பழைய நாகரிகமா?
அந்த குஜராத் தலைநகர் தான்
உலகின் பாரம்பரிய நகராம்
யுநெஸ்‌கோ** மகுடம் சூட்டியுள்ளது



இது இந்தியாவிற்கே மகத்தான மகிழ்ச்சியாம்
இன்புறுகிறார் அந்த மண்ணின் மைந்தர் மோடி
வைகைக் கரையில் தோண்டியெடுத்த சான்றுகள்
மீண்டும் புதையலாக மைசுருக்குப்++  பயணிக்கின்றன

இந்தப் பட்டயம் வெல்லும் போட்டியில்
தில்லியையும்  மும்பையையும் 
அகமதாபாத் நகரம்  முந்திவிட்டதாம்
டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு சிலர்க்கிறது
மனுப் போட்டு பட்டயம் பெற்ற ரகசியம்
யுநெஸ்‌கோ இணைய தளத்திலேய இருக்கிறது

கீழடிக்கு மனுப்போடாதது பரவாயில்லை
மண் அள்ளிப் போடாதீர்கள்
                             
                               நலந்தா செம்புலிங்கம்
                               15.07.2017

** யுநெஸ்‌கோ (UNESCO: The United Nations Educational, Scientific and Cultural Organization)  ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் 

++  மைசூருவில் உள்ள மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கியில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்றன.

Tuesday, 11 July 2017

மீத்தேன் முதலாளிகளும் போராட வேண்டியிருக்கும்

காலம் மாறும , மீத்தேன் முதலாளிகளும்
தெருவில் வந்து போராட வேண்டியிருக்கும்





எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள்

BBC Tamil
about a week ago · 

மத்திய அரசு மாநில அரசு
வாக்குறுதிகளை நம்பித் தான்
மக்களை விரட்டினோம்
ஊரைச் சுடுகாடாக்கினோம்
நீர்நிலைகளை சின்னாபின்னமாக்கினோம்
வயல்களை ஒழித்தோம்    நிலங்களைப்   பிளந்தோம்
 பெட்ரோலுக்குச் சரியான மாற்று மித்தேன் தான்
என  உலகையே நம்ப வைத்தோம்
 நாங்களும் ஏனோ நம்பித் தொலைத்தோம்


கோடியாய் கோடியாய் 
கடன் வாங்கிக்  கொட்டினோம்
எங்கள் கைகளில் கறைபடியாமல்
மீத்தேனை எதிர்த்தவர்களை ஒடுக்கினோம் 

அந்த மதி மயக்கத்தில்
காற்றை மறந்தோம் கதிரவனை மறந்தோம்
மீத்தேனைக் கொள்வாரின்றி 
நடுத்தெருவில் நிற்கிறோம்

                                  ----  நலந்தா செம்புலிங்கம்

Saturday, 8 July 2017

அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்

அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்


போராட்டங்கள் ஓய்வதில்லை
இன்று கதிராமங்கலம்  நாளை ?
24 மணியும் நாளை தான்
24 ஆண்டும் நாளை தான்
அந்த தொலை நாளையில், 



தில்லித் தலை நகரில் 
கொளுத்தும் வெயிலில்
மீத்தேன் முதலாளிகள்
எதிர் நிலைப் போராட்டம்
இன்றே என் கண் முன் விரிகிறது




மத்திய அரசே மாநில அரசே
கொள்முதல் செய் கொள்முதல் செய்
மீத்தேனைக் கொள்முதல் செய்
அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
மின் சக்தியில் ஓட்டாதே
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
சூரிய சக்தியில் ஓட்டாதே
ஓட்டு ஓட்டு அரசு வாகனங்களை
மீத்தேனில் மட்டும் ஓட்டு





மத்திய அரசு மாநில அரசு
வாக்குறுதிகளை நம்பித் தான்
மக்களை விரட்டினோம்
ஊரைச் சுடுகாடாக்கினோம்
நீர்நிலைகளை சின்னாபின்னமாக்கினோம்
வயல்களை ஒழித்தோம்    நிலங்களைப்   பிளந்தோம்
 பெட்ரோலுக்குச் சரியான மாற்று மித்தேன் தான்
என  உலகையே நம்ப வைத்தோம்
 நாங்களும் ஏனோ நம்பித் தொலைத்தோம்

கோடியாய் கோடியாய் 
கடன் வாங்கிக்  கொட்டினோம்
எங்கள் கைகளில் கறைபடியாமல்
மீத்தேனை எதிர்த்தவர்களை ஒடுக்கினோம் 

அந்த மதி மயக்கத்தில்
காற்றை மறந்தோம் கதிரவனை மறந்தோம்
மீத்தேனைக் கொள்வாரின்றி  ***
நடுத்தெருவில் நிற்கிறோம்
                                  ----  நலந்தா செம்புலிங்கம்
                                          08.07.2017
                                          

***  2050 ஆம் ஆண்டில் பெட்ரோலே இருக்காது என்று அச்சுறுத்துகிறது ஒரு கணிப்பு.  உலகமே மாற்று எரிபொருட்களுக்கு மாறிவிடும் ஆகவே 2050 ஆம் ஆண்டில் பெட்ரோலுக்குத் தேவையே இருக்காது என்று நம்பிக்கையூட்டு இன்னொரு கணிப்பு

Sunday, 2 July 2017

சாலை விபத்துக்கள் சாதாரணம் ! விபத்துச் சாலைகள் ஏராளம் !!

                 இன்று வாகனம் ஒரு அத்தியாவசியம் 
                அதன் விலை   பெருமித அடையாளம்
                அதன் வேகம்   போதை ஊட்டும் பெருமிதம்

                                                                                                
                                                                                                 வேகத்திற்குத் தீனி போட
     அரசும் வழுக்குச் சாலைகளை
     நாடெங்கும் போடுகிறது
     அதற்கான நிறுவனம் NHAI
     அரசுத் துறை, நிறுவனமாகும் போது 
     ஊழலும் ஊதாரித்தனமும் 
     மற்ற கார்ப்பரேட் கலாச்சாரங்களும் 
       அதன்  ரத்தமும் சதையும் ஆகின்றன









இன்று   பெயர் பலகைகள் வழிகாட்டிகளுக்கே
தனியார்  ஸ்பான்ஸர்ஷிப் தேவைப்படும்போது
பல்லாயிரம்  கிலோ மீட்டர் சாலைகளை 
 NHAI நிறுவனமா போடும்? தனியாரிடம் ஒப்படைக்கும்

 
அவர்கள் சாலைகள் போடமாட்டார்கள்
ரப்பர் டயர்களுக்கு தாரினால் மெத்தை விரிப்பார்கள்
நகருக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
50 அடிசெங்குத்து  மேம்பாலம் கட்டுவார்கள்
பாலத்தைத் தவிர மற்றதெல்லாம் சிதையுறும்

ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 
பல கிலோ மீட்டர் ஆற்று மணல், செம்மண் 
 உவர்மண் என வகைவகையாய்வாரி இறைப்பார்கள் 
எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றுக்கு நாலாய்
மக்கள் தலையில் கட்டுவார்கள்

கார்பேரட்கள் கல்லாப் பெட்டியில் கண்ணாகயிருக்கும்
சாலைகள் அரசின் சாதனைகளாகப் பறைசாற்றப்படும்
இது விமான ஓடுதளமா? வெளிநாட்டுச் சாலையா?
விபத்துக்களை விலை கொடுத்து வாங்கும்
வாகனசாரிகள் புளகாங்கிதம் அடைவர்

NHAI நிறுவனம் அவ்வப்போது 
கட்டணங்களை உயர்த்தும்  அது
உடனுக்குடன் அன்று நள்ளிரவே
அமலுக்கு வந்து விடும்.  ஆனால் 
NHAI இணைய தளமோ 2005 திட்டத்தை **
நிகழாண்டு திட்டம் என்று சாற்றும்
சுங்கக் கட்டணங்களுக்கென தனி இணையதளம்
அது நாமக்கல் கரூர் திருச்சி நெடுஞ்சாலை **
மேற்கு வங்கத்தில் உள்ளதாய்ப் பகரும்

நாம் விரும்பித் தான்  கப்பம் கட்டுகிறோம்
கார்ப்பரேட் சாலை முதலாளிகள் 
கார் கம்பெனிகள்  கொழிக்கின்றன.
விபத்துக்களும் உயிர்பலிகளும் 
அவர்கள் திட்ட வரைவுகளில் இல்லை, நாமோ
எமனை வம்புக்கு இழுக்காமல் இருப்பதில்லை  
பளபளப்பான கார்கள் பறக்கும் சக்கரங்கள்
இடதிலும் வலதிலும் மட்டுமல்ல இடக்காவும்
 முன் செல்லும் வாகனத்தை முந்தலாம்
மிகைவேகம் ஒரு போதும் தண்டிக்கப்படாது 
ஏனெனில் நீங்கள் அந்தச் சாலை முதலாளியின்
முக்கியமான வாடிக்கையாளர்
வேகத்திற்கு சேவகம் செய்வது தான்
இவர்கள் பிறப்பின் நோக்கம்





சாலை விதிகள் ஓரம்கட்டப்படுகின்றன
காலனுக்கு ஓவா் டைம் வேலை கட்டாயமாகிவிடுகிறது.
சாலை விபத்துக்கள் சாதாரணமாகிவிட்டன
விபத்துச் சாலைகள் ஏராளமாகிவிட்டன

                    நலந்தா செம்புலிங்கம்
                                                 02.07.2017








Tuesday, 27 June 2017

காமராசா் நாடா? சுயநிதி முதலாளிகளின் வேட்டைக் காடா?


   ஐயகோ இது காமராசா் நாடா?

  

          ஒரு சாமானியனின் மகள்
           ஊராட்சிப் பள்ளி மாணவி பிரத்திகா
           தன் இசை மழையாலும், 
           இணைய உலகின்
           வாக்கு மழையாலும்,
           செல்லக் குயிலாய் தேர்வானாள் 
         பரிசு மழைகளுக்கிடையில்
         ஊடகங்கள் கொண்டாடும்
         சூப்பர் சிங்கர் ஆனாள்

          இன்று அவள் பள்ளி
          உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!
          அங்கொன்றும் இங்கொன்றுமாய் , 
          அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
          அவை யாரும் தேடாத
          சவலைப் பிள்ளைகளாகும் !
           பகட்டும் படாடோபமும்
          பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
          அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
          மற்றொரு பக்கம் மதிப்பெண் மயக்கம்
          பிள்ளைகளைக் காவு கேட்கும் !



          ஐயகோ

         இது காமராசா் நாடா?
         சுயநிதி முதலாளிகளின் 
         வேட்டைக் காடா?

இது என்னுடய  உலகம் அறிந்த ஊராட்சி பள்ளி என்ற என்னுடைய முந்தைய பதிவின் ஒரு பகுதி.  அப்பதிவினைப் பாாக்க என் வலைப்பக்கத்திற்கு வருக  http://nalanthaa.blogspot.com/2017/06/blog-post_24.html


Saturday, 24 June 2017

உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!

உலகம் அறிந்த ஊராட்சிப்பள்ளி !!

                    தமிழா்களுக்கு பிறமொழிப் பெயரா?
                    எனக்கும் தான்,  இதுவொரு தீராத கணக்கு
                   இன்று    கொஞ்சம் நேராகி இருக்கிறது!!
                        தமிழ் குயில் பிரித்திகா பெயரை
                   ஒரு ஜப்பானிய சிட்டுக்குச் சூட்டியுள்ளனர்!
                   ஜப்பானிய பிரித்திகாவை தமிழில் வாழ்த்துவோம் !!







சூப்பா் சிங்கர் எப்போதும், அதுவே
இருவேறு கருத்துகளுக்கு இடமளிக்கும்.
சா்ச்சை தானே செலவில்லாத விளம்பரம்!


                        விஜய் தொலைக் காட்சி
                   ஒரு பன்னாட்டு நிறுவனம்!
                   அதன் மரபணு வாலை நீட்டும்!!
                   இருந்தாலும் இம்முறை
                   கிராமத்து இசைக்குயிலினால்
                    சாப விமோசனம் பெறட்டும்
                                                 
                              சொந்த முயற்சியில்,
                              பெற்றோர் ஆதரவில்,
                              வாகைசூடும்  மாணவர்களின்
                              வெற்றியிலும் சில பள்ளிகள்,
                              உாிமை கொண்டாடும் !




தியானபுரமாே ஒரு ஞானபுரம் !
அங்கே  இறைவணக்கம்
வெற்றுச் சடங்காகயில்லை !
வெற்றித் திருப்பு முனையாயிற்று !!

பிரித்திகாவின் இறைவணக்கம்,
மாதா பிதாவை மட்டுமல்ல, 
குரு நாச்சியார்களையும்  ஈா்த்தது !

பிரித்திகாவின் இசை வாழ்க்கைக்கு
பள்ளிக் கூடம் தான் விளக்கேற்றியது!
ஒவ்வொரு அடியிலும்
ஒவ்வொரு  படியிலும் ஆசிரியர்கள்
துணைநின்றனர் ! தூக்கிவிட்டனர் !!

ஆசிாியர்கள் அன்னையராயினர் !
உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில்,
களத்தில் இறக்கினர் !


பாட்டுத் திறத்தாலே 
இவ்வையத்தைத் தான் வெல்லலாம்,
சூப்பர் சிங்கர் வெற்றிக்கு,
ஆன் லைன் ஓட்டுத் திறமும் கட்டாயம் !
களத்தில் இறக்கிய ஆசிரியர்கள்,
இணையத்திலும் கலக்கினார்கள்!

இசை மழையாலும், 
இணைய உலகின்
வாக்கு மழையாலும்,
செல்லக் குயிலாய் தேர்வானாள் 
ஒரு சாமானியனின் மகள் !!


இன்று அவள் பள்ளி
உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!

அங்கொன்றும்  இங்கொன்றுமாய் , 
அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
அவை யாரும் தேடாத
சவலைப் பிள்ளைகளாகும் !
பகட்டும் படாடோபமும்
பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
 மற்றொரு பக்கம்  மதிப்பெண் மயக்கம்
பிள்ளைகளைக் காவு கேட்கும் !

ஐயகோ
இது காமராசா் நாடா?
சுயநிதி முதலாளிகளின் 
வேட்டைக் காடா?
இது எதில் போய் முடியும்?
ஒரு நாள்அரசுக்கும் கல்விக்கும்
சம்பந்தமில்லை என்றாகும் !

பகட்டுப் பள்ளிகளுக்கும்
மக்கள் கல்விக்குமிடையிலான
நெடும் போாில் ஊக்கமளிக்கிறது, 
பிரித்திகாவின் வெற்றி !!

                                                நலந்தா செம்புலிங்கம்
                                         24.06.2017






Monday, 19 June 2017

காலத்தின் கோலம் ! காவிரியின் அவலம் !!

  காலத்தின் கோலம்! காவிரியின்அவலம் !! 

                               பச்சைப் பட்டாடை மாியாதை   
                               விவசாயி அய்யாக்கண்ணுவுக்கு
                                நல்கினார்  சூப்பார்  ஸ்டார் 


                         அய்யாக்கண்ணுவுக்கு
                               நல்ல மனம்
                              அபராத் துணிச்சல்
                               தன்னைத் திரும்பியும்
                               பார்க்காத மைய அரசிற்கு
                               ரஜினியின் பழைய அறிவிப்பை
                               நினைவூட்டி கோடி ரூபாய்
                               வசூலிக்க முனைந்துள்ளாா்

                               அய்யாகண்ணு தில்லியில் 
                               வித விதமாகப் போரடினார்
                               உச்ச கட்டத்தில் ஒரு நாள்
                               உடுக்கையையும் உறிந்தெறிந்தார்


                              அய்யாக்கண்ணுவுக்கு
                              இந்த மாியாதையை  தில்லியிலேயே
                              அன்றைக்கே செய்திருக்கலாமே 
                              ஆன்மீகவாதி
                              அரசியல் ஞானி
                              காலாதி காலன்
                              மோடி தேடி வந்திருப்பாரே

                                 அய்யாக்கண்ணு தான்
                                 ரஜினியைத் தேடிப் போயிருக்கிறார்
                                 காலத்தின் கோலம் 
                                 காவிரியின் அவலம்  
                                                                                      
                                                                                 நலந்தா செம்புலிங்கம்
                                                                                                 19.06.2017








Saturday, 17 June 2017

ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

ரெளத்திரம் பழகிய 
தன்மானப் பெண்சிங்கங்கள்


                   ஜல்லிக்கட்டு போராட்டம்
                   ஒரு தற்காப்பு போியக்கம்
                   டாஸ்மாக்  தாண்டவம்
                   புதுமாதாி  சூரசம்காரம்



      ஒவ்வொரு குடிகாரனும்
                இரண்டு பெண்களையாவது
                கண்ணீரில் மூழ்கடிக்கிறான்
                                       பெற்றவளையும் பேண வந்தவளையும

90 ஆண்டுகளுக்கு முன்னரே 
                             மதுவை மாதாரால் தான் ஓழிக்கமுடிமென
                      தீா்க்கதாிசனம் கண்ட ஈரோட்டுக்காரா்
 உடன் பிறந்த தங்கையையும்
        தன் வாழ்க்கைத் துணையையும்
                               கள்ளுக் கடை மறியிலில் முன்னிறுத்தினாா்
                            பாரதியும் ரெளத்திரம் பழகச் சொன்னான்




இரண்டு கோடுகளும்
இன்று சங்கமித்துவிட்டன     

                           






                       பொறுத்துப் பொறுத்துப் பாா்த்தாா்கள்
                      இரண்டு தலைமுறை தடுமாறிவிட்டது
இனியும் பொறுப்பதில்லை 
     எனப் பொங்கி எழுந்தவா்கட்கு
     வாகாய் வந்தது தில்லித் தீா்ப்பு
  
 நெடுஞ்சாலை மதுக்கடைகளை
இழுத்து மூடச் சொன்னது தீா்ப்பு
                     அடித்து நொறுக்கித்  தகர்த்தெறிந்தாா்கள்
                                     ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

                  புலியை முறத்தால் விரட்டிய மறத்தி கதை
     இலக்கிய நயமா?  சரித்திர சம்பவா?

அது புலவனின் மிகைமொழி தான்
    புலியினும் கொடிய மதுவை விரட்டி
             மிகைமொழியையும் விஞ்சிவிட்டாா்கள்
                
                                     நலந்தா  செம்புலிங்கம்
                                     17.06.2017


Saturday, 10 June 2017

நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!



நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!

ஏடும் சுவடியும் தான்
தாளும் புத்தகங்களுமாய்
பாிணாம வளாச்சி  பெற்றது !
இந்தத் தலைமுறைக்குத் தொியுமா?

ஏட்டுச் சுவடியில் அாிச்சுடி  
படித்த தலைமுறையை
தேடித் தான் பிடிக்கணும் !

அவா்கள் படித்த பள்ளியோ
தேடாமலேயே  தொியும்
காரைக்குடியின் மையப் புள்ளியில் !
அது தான் நூற்றாண்டைக் கடந்த
காா்த்திகேயன் தொடக்கப் பள்ளி !

" அண்ணன் சாா் "  வேலாயுதானாா்
கண்ட திண்ணைப் பள்ளி !
பல தலைமுறை படித்த பள்ளி !
மூன்றாம் தலைமுறை நடத்தும் பள்ளி !!

தொன்மைகளில் நன்மைகளையும்
புதுமைகளில் திறமைகளையும்
தேடித் தேடிக் கொண்டாடும் பள்ளி !!

மதிப்பெண் மயக்கத்தில் ,
பிஞ்சு மாணவா்களையும்
வறுத்தெடுக்கும் கலி காலத்தில் --
கற்றலில் இனிமையை ,
நாளும் நிலைநாட்டும் பள்ளி !!




ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!



போட்டிகளில் பாிசுகளைக் குவிப்பாா்கள் !
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் குதித்தாா்கள் !!


அணுகுமுறையில் அன்பு !
கற்றலில் இனிமை !
நோிய சமூக அக்கறை !
எல்லா வகையிலும்
எல்லோரையும் ஈா்க்கும்
அதிசியப் பள்ளி !!

சில நேரங்களில்
பலமே பலவீனத்திற்கு 
வெற்றிலை பாக்கு
வைத்து வரவேற்கிறது !

மாணவா்கள் குறைவால்
தடுமாறும் பள்ளிகள் பலபல !!
மாணவா்கள் மிகுதியால்
நெளியும் பள்ளி ,
காா்த்திகேயன் பள்ளி !!

200க்கு 400, இது மதிப்பெண் அல்ல !
பட்டியலில் இரு மடங்கு மாணவா்கள் !
கட்டிடத்தில் இரு மடங்கு நெருக்கடி !

நெருக்கடி , நெருக்கடி , நெருக்கடியாலேயே
மீண்டும் மீண்டும் நெருக்கடி !
நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!


கல்வியில் சிறந்த அழகப்பா் கண்ட
கல்விக்குடியினருக்கு அவசர வேண்டுகோள் !

மனை நல்குவீா் !
விலை கொள்வீா் !

            ---  நலந்தா செம்புலிங்கம்
                     அலைபேசி   93614 10349

Saturday, 3 June 2017

பிரம்படி பட்ட பரமசிவனும் தழும்பேறிய தி, நகரும் !!

பொறுப்பில்லாத நிா்வாகம்
பொறுப்பில்லாத வணிகம்
தீயின் மடியில் தி நகா்     
         
அரைகுறையாய் தணியவே ஒரு
முழுநாளுக்கும் மேலாகிவிட்டது
எாிந்து எலும்புக் கூடானதை
இடித்துத் தள்ள இன்னும் 
மூன்று நாட்களாகுமாம்


6 விமானநிலையங்களில் கடைகள்
15 ஊா்களில் 17 கிளைகள்
ஒவ்வொன்றும்  ஆறு ஏழு மாடிகள்
லட்சம் சதுரடி பெருமிதங்கள்
ஆனால் ஜன்னல் என்பதே கிடையாதாம்










சமூக வலைத் தளங்களில்
எக்கசக்கக் கேள்விகள்

நேரங் கெட்ட நேரத்தில்
கேள்விகள் எழுப்புவது நியாயமில்லையாம்
                                                                    தொழில் தோழமை பாராட்டி
                                                                    உருகுகிறது ராமராஜ் வேட்டி நிறுவனம்

இழப்புகளைப் பட்டியலிடுகிறது
பெருந்துயருக்கு இடையிலும்
முதல் தேதியில் சம்பளம் வழங்கியதை
மெச்சிப் புகழ்கிறது ராம்ராஜ்

ஒட்டுமொத்த தி, நகரும்
சில நாட்களாய் முடங்கிவிட்டதே
பரமசிவன் பிரம்படி பட்டகதையாய்
தி நகா் சுவா்களெல்லாம் 
விாிசில் விழுந்துவிட்டதே
சொந்த வீட்டிலிருந்தவன்
வீதிக்கு வந்துவிட்டானே


வெளிச்சத்தில் மடியும் 
விட்டில் பூச்சிகளாய் நாம்
பிரம்மாண்டாங்களுக்கு 
மண்டியிடுகிறோம்

இந்த பகட்டுக் கலாச்சாரம்
ஜன்னல் இல்லா அடுக்குமாடி கடைகள்
பட்டி தொட்டிகளுக்கும் பரவிவிட்டதே

சாலையோர அன்றாடங்காய்ச்சிகளிடம்
கறாராய் பேரம் பேசுவோம், ஏசி கடையில்
 திட்டமிட்ட அச்சிட்ட தப்புக் கணக்குகளை
கண்டும் காணாதிருப்போம்


முகூா்த்த பட்டுக்குப் பெயா் பெற்ற
காஞ்சியில் பணத்தைக் கொடுத்ததும்
பட்டைக் கொடுத்துவிடமாட்டாா்கள்
தெய்வங்களிடம் படைத்து
மணமக்களுக்காக வேண்டிக்
கும்பிட்ட பிறகு தான் கொடுப்பாா்கள்


மனிதம் இல்லாத காா்ப்பரேட் வணிகத்தில்
ஏழு எட்டு அடுக்கு மாடி கட்டுகிறாா்கள்
சென்டரல் ஏ,சி வைக்கும் தினவில்
காற்றையும் கட்டிப் போடுகிறாா்கள்
சிக்கித் தவித்த நெருப்பு 
தப்பிக்க வழியின்றி 
பாய்ச்சிய நீரைத் தழுவ வழியின்றி
பொசுக்கிப் பொசுங்கிவிட்டது


                                                 --- நலந்தா செம்புலிங்கம்