Tuesday 27 June 2017

காமராசா் நாடா? சுயநிதி முதலாளிகளின் வேட்டைக் காடா?


   ஐயகோ இது காமராசா் நாடா?

  

          ஒரு சாமானியனின் மகள்
           ஊராட்சிப் பள்ளி மாணவி பிரத்திகா
           தன் இசை மழையாலும், 
           இணைய உலகின்
           வாக்கு மழையாலும்,
           செல்லக் குயிலாய் தேர்வானாள் 
         பரிசு மழைகளுக்கிடையில்
         ஊடகங்கள் கொண்டாடும்
         சூப்பர் சிங்கர் ஆனாள்

          இன்று அவள் பள்ளி
          உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!
          அங்கொன்றும் இங்கொன்றுமாய் , 
          அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
          அவை யாரும் தேடாத
          சவலைப் பிள்ளைகளாகும் !
           பகட்டும் படாடோபமும்
          பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
          அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
          மற்றொரு பக்கம் மதிப்பெண் மயக்கம்
          பிள்ளைகளைக் காவு கேட்கும் !



          ஐயகோ

         இது காமராசா் நாடா?
         சுயநிதி முதலாளிகளின் 
         வேட்டைக் காடா?

இது என்னுடய  உலகம் அறிந்த ஊராட்சி பள்ளி என்ற என்னுடைய முந்தைய பதிவின் ஒரு பகுதி.  அப்பதிவினைப் பாாக்க என் வலைப்பக்கத்திற்கு வருக  http://nalanthaa.blogspot.com/2017/06/blog-post_24.html


Saturday 24 June 2017

உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!

உலகம் அறிந்த ஊராட்சிப்பள்ளி !!

                    தமிழா்களுக்கு பிறமொழிப் பெயரா?
                    எனக்கும் தான்,  இதுவொரு தீராத கணக்கு
                   இன்று    கொஞ்சம் நேராகி இருக்கிறது!!
                        தமிழ் குயில் பிரித்திகா பெயரை
                   ஒரு ஜப்பானிய சிட்டுக்குச் சூட்டியுள்ளனர்!
                   ஜப்பானிய பிரித்திகாவை தமிழில் வாழ்த்துவோம் !!







சூப்பா் சிங்கர் எப்போதும், அதுவே
இருவேறு கருத்துகளுக்கு இடமளிக்கும்.
சா்ச்சை தானே செலவில்லாத விளம்பரம்!


                        விஜய் தொலைக் காட்சி
                   ஒரு பன்னாட்டு நிறுவனம்!
                   அதன் மரபணு வாலை நீட்டும்!!
                   இருந்தாலும் இம்முறை
                   கிராமத்து இசைக்குயிலினால்
                    சாப விமோசனம் பெறட்டும்
                                                 
                              சொந்த முயற்சியில்,
                              பெற்றோர் ஆதரவில்,
                              வாகைசூடும்  மாணவர்களின்
                              வெற்றியிலும் சில பள்ளிகள்,
                              உாிமை கொண்டாடும் !




தியானபுரமாே ஒரு ஞானபுரம் !
அங்கே  இறைவணக்கம்
வெற்றுச் சடங்காகயில்லை !
வெற்றித் திருப்பு முனையாயிற்று !!

பிரித்திகாவின் இறைவணக்கம்,
மாதா பிதாவை மட்டுமல்ல, 
குரு நாச்சியார்களையும்  ஈா்த்தது !

பிரித்திகாவின் இசை வாழ்க்கைக்கு
பள்ளிக் கூடம் தான் விளக்கேற்றியது!
ஒவ்வொரு அடியிலும்
ஒவ்வொரு  படியிலும் ஆசிரியர்கள்
துணைநின்றனர் ! தூக்கிவிட்டனர் !!

ஆசிாியர்கள் அன்னையராயினர் !
உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில்,
களத்தில் இறக்கினர் !


பாட்டுத் திறத்தாலே 
இவ்வையத்தைத் தான் வெல்லலாம்,
சூப்பர் சிங்கர் வெற்றிக்கு,
ஆன் லைன் ஓட்டுத் திறமும் கட்டாயம் !
களத்தில் இறக்கிய ஆசிரியர்கள்,
இணையத்திலும் கலக்கினார்கள்!

இசை மழையாலும், 
இணைய உலகின்
வாக்கு மழையாலும்,
செல்லக் குயிலாய் தேர்வானாள் 
ஒரு சாமானியனின் மகள் !!


இன்று அவள் பள்ளி
உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!

அங்கொன்றும்  இங்கொன்றுமாய் , 
அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
அவை யாரும் தேடாத
சவலைப் பிள்ளைகளாகும் !
பகட்டும் படாடோபமும்
பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
 மற்றொரு பக்கம்  மதிப்பெண் மயக்கம்
பிள்ளைகளைக் காவு கேட்கும் !

ஐயகோ
இது காமராசா் நாடா?
சுயநிதி முதலாளிகளின் 
வேட்டைக் காடா?
இது எதில் போய் முடியும்?
ஒரு நாள்அரசுக்கும் கல்விக்கும்
சம்பந்தமில்லை என்றாகும் !

பகட்டுப் பள்ளிகளுக்கும்
மக்கள் கல்விக்குமிடையிலான
நெடும் போாில் ஊக்கமளிக்கிறது, 
பிரித்திகாவின் வெற்றி !!

                                                நலந்தா செம்புலிங்கம்
                                         24.06.2017






Monday 19 June 2017

காலத்தின் கோலம் ! காவிரியின் அவலம் !!

  காலத்தின் கோலம்! காவிரியின்அவலம் !! 

                               பச்சைப் பட்டாடை மாியாதை   
                               விவசாயி அய்யாக்கண்ணுவுக்கு
                                நல்கினார்  சூப்பார்  ஸ்டார் 


                         அய்யாக்கண்ணுவுக்கு
                               நல்ல மனம்
                              அபராத் துணிச்சல்
                               தன்னைத் திரும்பியும்
                               பார்க்காத மைய அரசிற்கு
                               ரஜினியின் பழைய அறிவிப்பை
                               நினைவூட்டி கோடி ரூபாய்
                               வசூலிக்க முனைந்துள்ளாா்

                               அய்யாகண்ணு தில்லியில் 
                               வித விதமாகப் போரடினார்
                               உச்ச கட்டத்தில் ஒரு நாள்
                               உடுக்கையையும் உறிந்தெறிந்தார்


                              அய்யாக்கண்ணுவுக்கு
                              இந்த மாியாதையை  தில்லியிலேயே
                              அன்றைக்கே செய்திருக்கலாமே 
                              ஆன்மீகவாதி
                              அரசியல் ஞானி
                              காலாதி காலன்
                              மோடி தேடி வந்திருப்பாரே

                                 அய்யாக்கண்ணு தான்
                                 ரஜினியைத் தேடிப் போயிருக்கிறார்
                                 காலத்தின் கோலம் 
                                 காவிரியின் அவலம்  
                                                                                      
                                                                                 நலந்தா செம்புலிங்கம்
                                                                                                 19.06.2017








Saturday 17 June 2017

ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

ரெளத்திரம் பழகிய 
தன்மானப் பெண்சிங்கங்கள்


                   ஜல்லிக்கட்டு போராட்டம்
                   ஒரு தற்காப்பு போியக்கம்
                   டாஸ்மாக்  தாண்டவம்
                   புதுமாதாி  சூரசம்காரம்



      ஒவ்வொரு குடிகாரனும்
                இரண்டு பெண்களையாவது
                கண்ணீரில் மூழ்கடிக்கிறான்
                                       பெற்றவளையும் பேண வந்தவளையும

90 ஆண்டுகளுக்கு முன்னரே 
                             மதுவை மாதாரால் தான் ஓழிக்கமுடிமென
                      தீா்க்கதாிசனம் கண்ட ஈரோட்டுக்காரா்
 உடன் பிறந்த தங்கையையும்
        தன் வாழ்க்கைத் துணையையும்
                               கள்ளுக் கடை மறியிலில் முன்னிறுத்தினாா்
                            பாரதியும் ரெளத்திரம் பழகச் சொன்னான்




இரண்டு கோடுகளும்
இன்று சங்கமித்துவிட்டன     

                           






                       பொறுத்துப் பொறுத்துப் பாா்த்தாா்கள்
                      இரண்டு தலைமுறை தடுமாறிவிட்டது
இனியும் பொறுப்பதில்லை 
     எனப் பொங்கி எழுந்தவா்கட்கு
     வாகாய் வந்தது தில்லித் தீா்ப்பு
  
 நெடுஞ்சாலை மதுக்கடைகளை
இழுத்து மூடச் சொன்னது தீா்ப்பு
                     அடித்து நொறுக்கித்  தகர்த்தெறிந்தாா்கள்
                                     ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

                  புலியை முறத்தால் விரட்டிய மறத்தி கதை
     இலக்கிய நயமா?  சரித்திர சம்பவா?

அது புலவனின் மிகைமொழி தான்
    புலியினும் கொடிய மதுவை விரட்டி
             மிகைமொழியையும் விஞ்சிவிட்டாா்கள்
                
                                     நலந்தா  செம்புலிங்கம்
                                     17.06.2017


Saturday 10 June 2017

நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!



நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!

ஏடும் சுவடியும் தான்
தாளும் புத்தகங்களுமாய்
பாிணாம வளாச்சி  பெற்றது !
இந்தத் தலைமுறைக்குத் தொியுமா?

ஏட்டுச் சுவடியில் அாிச்சுடி  
படித்த தலைமுறையை
தேடித் தான் பிடிக்கணும் !

அவா்கள் படித்த பள்ளியோ
தேடாமலேயே  தொியும்
காரைக்குடியின் மையப் புள்ளியில் !
அது தான் நூற்றாண்டைக் கடந்த
காா்த்திகேயன் தொடக்கப் பள்ளி !

" அண்ணன் சாா் "  வேலாயுதானாா்
கண்ட திண்ணைப் பள்ளி !
பல தலைமுறை படித்த பள்ளி !
மூன்றாம் தலைமுறை நடத்தும் பள்ளி !!

தொன்மைகளில் நன்மைகளையும்
புதுமைகளில் திறமைகளையும்
தேடித் தேடிக் கொண்டாடும் பள்ளி !!

மதிப்பெண் மயக்கத்தில் ,
பிஞ்சு மாணவா்களையும்
வறுத்தெடுக்கும் கலி காலத்தில் --
கற்றலில் இனிமையை ,
நாளும் நிலைநாட்டும் பள்ளி !!




ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!



போட்டிகளில் பாிசுகளைக் குவிப்பாா்கள் !
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் குதித்தாா்கள் !!


அணுகுமுறையில் அன்பு !
கற்றலில் இனிமை !
நோிய சமூக அக்கறை !
எல்லா வகையிலும்
எல்லோரையும் ஈா்க்கும்
அதிசியப் பள்ளி !!

சில நேரங்களில்
பலமே பலவீனத்திற்கு 
வெற்றிலை பாக்கு
வைத்து வரவேற்கிறது !

மாணவா்கள் குறைவால்
தடுமாறும் பள்ளிகள் பலபல !!
மாணவா்கள் மிகுதியால்
நெளியும் பள்ளி ,
காா்த்திகேயன் பள்ளி !!

200க்கு 400, இது மதிப்பெண் அல்ல !
பட்டியலில் இரு மடங்கு மாணவா்கள் !
கட்டிடத்தில் இரு மடங்கு நெருக்கடி !

நெருக்கடி , நெருக்கடி , நெருக்கடியாலேயே
மீண்டும் மீண்டும் நெருக்கடி !
நெடுநாள் பள்ளி நிழல் தேடுகிறது !!


கல்வியில் சிறந்த அழகப்பா் கண்ட
கல்விக்குடியினருக்கு அவசர வேண்டுகோள் !

மனை நல்குவீா் !
விலை கொள்வீா் !

            ---  நலந்தா செம்புலிங்கம்
                     அலைபேசி   93614 10349

Saturday 3 June 2017

பிரம்படி பட்ட பரமசிவனும் தழும்பேறிய தி, நகரும் !!

பொறுப்பில்லாத நிா்வாகம்
பொறுப்பில்லாத வணிகம்
தீயின் மடியில் தி நகா்     
         
அரைகுறையாய் தணியவே ஒரு
முழுநாளுக்கும் மேலாகிவிட்டது
எாிந்து எலும்புக் கூடானதை
இடித்துத் தள்ள இன்னும் 
மூன்று நாட்களாகுமாம்


6 விமானநிலையங்களில் கடைகள்
15 ஊா்களில் 17 கிளைகள்
ஒவ்வொன்றும்  ஆறு ஏழு மாடிகள்
லட்சம் சதுரடி பெருமிதங்கள்
ஆனால் ஜன்னல் என்பதே கிடையாதாம்










சமூக வலைத் தளங்களில்
எக்கசக்கக் கேள்விகள்

நேரங் கெட்ட நேரத்தில்
கேள்விகள் எழுப்புவது நியாயமில்லையாம்
                                                                    தொழில் தோழமை பாராட்டி
                                                                    உருகுகிறது ராமராஜ் வேட்டி நிறுவனம்

இழப்புகளைப் பட்டியலிடுகிறது
பெருந்துயருக்கு இடையிலும்
முதல் தேதியில் சம்பளம் வழங்கியதை
மெச்சிப் புகழ்கிறது ராம்ராஜ்

ஒட்டுமொத்த தி, நகரும்
சில நாட்களாய் முடங்கிவிட்டதே
பரமசிவன் பிரம்படி பட்டகதையாய்
தி நகா் சுவா்களெல்லாம் 
விாிசில் விழுந்துவிட்டதே
சொந்த வீட்டிலிருந்தவன்
வீதிக்கு வந்துவிட்டானே


வெளிச்சத்தில் மடியும் 
விட்டில் பூச்சிகளாய் நாம்
பிரம்மாண்டாங்களுக்கு 
மண்டியிடுகிறோம்

இந்த பகட்டுக் கலாச்சாரம்
ஜன்னல் இல்லா அடுக்குமாடி கடைகள்
பட்டி தொட்டிகளுக்கும் பரவிவிட்டதே

சாலையோர அன்றாடங்காய்ச்சிகளிடம்
கறாராய் பேரம் பேசுவோம், ஏசி கடையில்
 திட்டமிட்ட அச்சிட்ட தப்புக் கணக்குகளை
கண்டும் காணாதிருப்போம்


முகூா்த்த பட்டுக்குப் பெயா் பெற்ற
காஞ்சியில் பணத்தைக் கொடுத்ததும்
பட்டைக் கொடுத்துவிடமாட்டாா்கள்
தெய்வங்களிடம் படைத்து
மணமக்களுக்காக வேண்டிக்
கும்பிட்ட பிறகு தான் கொடுப்பாா்கள்


மனிதம் இல்லாத காா்ப்பரேட் வணிகத்தில்
ஏழு எட்டு அடுக்கு மாடி கட்டுகிறாா்கள்
சென்டரல் ஏ,சி வைக்கும் தினவில்
காற்றையும் கட்டிப் போடுகிறாா்கள்
சிக்கித் தவித்த நெருப்பு 
தப்பிக்க வழியின்றி 
பாய்ச்சிய நீரைத் தழுவ வழியின்றி
பொசுக்கிப் பொசுங்கிவிட்டது


                                                 --- நலந்தா செம்புலிங்கம்