பாராமுகமாகக் கீழடி!
மகுடத்தில் அகமதாபாத்!!
AHAMEDABAD |
மூத்த தமிழின் சீரிளமை
2500 ஆண்டு பழைமை தான்
அதற்கு 5000 சான்று பகர்கிறது கீழடி
கீழடி தமிழர் பெருமிதமா?
சிகப்பு நாடாக்களுக்குள் துயிலும்
மற்றுமொரு கோப்பு தானா?
வெறும் அறுநூறு ஆண்டு வரலாறு
அது தான் அகமதாபாதி்ன் துருப்புச் சீட்டு
600 பெரியதா? 2500 சிறியதா?
கீழடி புதிய தலைமுறையா?
அகமதாபாத் பழைய நாகரிகமா?
அந்த குஜராத் தலைநகர் தான்
உலகின் பாரம்பரிய நகராம்
யுநெஸ்கோ** மகுடம் சூட்டியுள்ளது
இது இந்தியாவிற்கே மகத்தான மகிழ்ச்சியாம்
இன்புறுகிறார் அந்த மண்ணின் மைந்தர் மோடி
வைகைக் கரையில் தோண்டியெடுத்த சான்றுகள்
இந்தப் பட்டயம் வெல்லும் போட்டியில்
தில்லியையும் மும்பையையும்
அகமதாபாத் நகரம் முந்திவிட்டதாம்
டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு சிலர்க்கிறது
மனுப் போட்டு பட்டயம் பெற்ற ரகசியம்
யுநெஸ்கோ இணைய தளத்திலேய இருக்கிறது
கீழடிக்கு மனுப்போடாதது பரவாயில்லை
மண் அள்ளிப் போடாதீர்கள்
நலந்தா செம்புலிங்கம்
15.07.2017
** யுநெஸ்கோ (UNESCO: The United Nations Educational, Scientific and Cultural Organization) ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம்
++ மைசூருவில் உள்ள மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கியில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்றன.
Indus valley ei Minjividum Kala kanippu. Mastery of Mud Technology displayed by our Ancestors that may date older than metal age.
ReplyDeleteகீழடியோடு ஒப்புநோக்கும் அளவு அகமதாபாத்தைக் கூறமுடியாது ஐயா. நம் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை. விட்டுவிடுவோம்.
ReplyDelete