Wednesday 23 May 2018

தருநாடகாவில் நடந்தது என்ன? பகுதி 4

தருநாடகாவில் நடந்தது என்ன?  பகுதி  4
(பகுதி 3, 22.05.2018 அன்று வெளியிடப்பட்டது) 

--------
அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர் -------

அறிமுகப் படலம்
~~~~       ~~~~~     ~~~~~
ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் யாவும் உண்மையே.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.

இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக எழுதப்படவில்லை.
^^^^^       ^^^^^     ^^^^^
இத்தொடரைப் படிக்க வாசகர்கள்
ஒப்புக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம் வழங்க மாட்டேன்

இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
^^^^^       ^^^^^     ^^^^^
பகுதி  4

தருநாடக திருவிழா 

முடிவுகள் சொல்ல

மிஷின்கள் வாய் திறந்தன!

முதல் சுற்றுக்களிலேயே

மெல்ல முணு முணுத்தன!

நடந்தது இருமுனைப் போட்டியல்ல!

மும்முனைப் போட்டி!!

^^^^^^     ^^^^^      ^^^^^    ^^^^

காவிரி வள்ளல் அமாரசாமி

குட்டி மீன் பட்டயத்தையும்

பாதுஷா தளபதி

பக்த சோமையா அணி
பெரிய மீன் பரிசையும்

செம்படைத் தளபதி

படையூராப்பா அணி

சுறா மீன் கோப்பையையும்

முறையே வென்றனர்!


^^^^^^     ^^^^^      ^^^^^    ^^^^ 

மக்களை மறைந்தனர்

மக்கள் பிரதிநிதிகளே

எல்லாம் ஆயினர்

அணிகளுக்குள் அணிகள்

சாதி சமய பேதங்கள் 

பெருமிதமாயின மீசை முறுக்கின

தொடைக் கறிக் கோரி

 பேரங்கள்  அரங்கேறின

^^^^^^^      ^^^^^^^     ^^^^^^^^

குட்டி மீனைத் தேடி

பெரிய மீன் வந்தது

கை கட்டி நின்றது

சுறா மீனை ஓரங்கட்ட

^^^^^^^      ^^^^^^^     ^^^^^^^^ 
முடிசூட முனைந்த 

வேளையில் தான்

சுறா மீனிற்குத் தெரிந்தது

சில துடுப்புகள் குறைந்தது

அதனை முட்டுக் கொடுக்க

ஒரு சிற்றணி தேவைப்பட்டது

^^^^^^^      ^^^^^^^     ^^^^^^^^  

சிற்றணி சேர்க்க உள்ளுர் பூசாரி 

ஒரு அவகசாசம் கொடுத்தார்

துலாக் கோல் சாமி ஒட்ட வெட்டினார்

சுறாமீன்   விரைந்து பின் வாங்கியது !

பெரிய மீனின் கணக்குத் தப்பாயிற்று !!

^^^^^^^      ^^^^^^^     ^^^^^^^^ 

மணி முடியோ குட்டி மீனுக்கு

துடுப்புப் போடுவதோ பெரிய மீன்

அவசரக் கணக்கு! அதிசய முடிவல்ல !!

அரசியலில் இது சாதாரணம்! கூட்டணியில் ?

 சகித்துத்தான் கொள்ளவேண்டும் !!

(என் பதிவு நிறைவடைகிறது ::

 தருநாடகாவில்  இதுவரை நடந்தது முன் தகுதித் தேர்வு தான், அதில் நடந்தை சொல்ல விழைந்தேன்.   அதனால்  என் பதிவு இத்துடன் நிறைடைகிறது.

        தருநாடகாவில்  தன்னலவாதிகளின் வேடிக்கை விநோத ஆதாய விளையாட்டுக்கள் தொடரத் தான் செய்யும், இனிமேல் தான் பெரிய பரிசுத் தொகை SUPER LEAGUE சூடுபிடிக்கும்.)
  
                                                     நலந்தா செம்புலிங்கம்
                                                       23.05.2018


Tuesday 22 May 2018

தருநாடகாவில் நடந்தது என்ன? பகுதி 3

தருநாடகாவில் நடந்தது என்ன?  பகுதி  3
(பகுதி 1 & 2, 21.05.2018 அன்று வெளியிடப்பட்டது) 

-------- அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர் -------

அறிமுகப் படலம்
~~~~       ~~~~~     ~~~~~

ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் யாவும் உண்மையே.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.

இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக எழுதப்படவில்லை.

                                                                 ~~~~       ~~~~~     ~~~~~

இத்தொடரைப் படிக்க வாசகர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள்

~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம் வழங்க மாட்டேன்

இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
~~~~       ~~~~~     ~~~~~
பகுதி  3



               தருநாடகவில் அண்மை நடந்த  பிச்சை எடுக்கும் திருவிழாவில் 

               1.  செங்கோட்டை பாதுஷா தரேந்திர ரோடியின் தளபதி  படையூராப்பா அணி     

               2. பரம்பரை  பாதுஷா குடும்ப வாரிசு தாகுல் சாந்தியின் தளபதி பக்த சோமையா அணி

                3. மாயாஜால  பாதுஷா ஞான செளடா வின் மகன்  அமாரசாமி அணி

ஆகிய மூன்று அணிகள் களத்தில் இறங்கின.

             தருநாடக மாநிலம் கணிப்பொறி  தொழிலில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் மாநிலம். அங்கே நடக்கும் பிச்சை எடுக்கும் திருவிழாவில் சில்லரை எண்ணும் மிஷின்கள் பயன்படுத்தபட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  

            ஆனால் திருவிழா தொடங்குவதற்கு முன்னரே அந்த மிஷின்களின் நம்பத்தன்மை பற்றி சர்ச்சைகள் எழுந்துவிட்டன 
                   

             பக்த சோமையா அணி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என ஒரு பக்கம் மார்தட்டினாலும், மற்றொருபுறம் செங்கோட்டை செல்வாக்கினால் தரேந்திர ரோடி சில்லரை எண்ணும் மிஷனில் மோசடி செய்துவிடுவார் என்று தீவரமாகக் குற்றம் சாட்டினர்.  

மேலும் 

                சில்லரை எணணும் மிஷனில் மோசடி செய்தாவது வெற்றி பெறுவோம் என தரேந்திர ரோடி அணியின் அடிமட்டத் தொண்டர்கள் ரகசியமாக மகிழந்தனர்.

           அமாரசாமி இருதலை கொள்ளி எறும்பானார்.  சில்லரை எண்ணும் மிஷின் மோசடி பற்றிய சர்ச்சைகள் அமாரசாமி வயிற்றில் புளியைக் கரைத்தன. தரேந்திர ரோடியின் செங்கோட்டை செல்வாக்கு உலகம் அறிந்தது தான் அதைவிட அச்சுறுத்தியது தரேந்திர ரோடியின் மனசாட்சியான சமித் தான்.  சமித் எடுத்த எந்தக் காரியத்தையும் எந்த விலை கொடுத்தேனும் அல்லது விலை கொடுக்காமல் கூட முடிப்பதில் வல்லவர், அவருடைய ரகசிய திட்டங்களை தரேந்திர ரோடியே ஊகிக்க முடியாது, அமாரசாமி என்ன செய்வார்?

           அதே சமயம் பரம்பரை பாதுஷா தாகுல் சாந்தி வகையினரும் லேசுப்பட்டவர்கள் அல்லர்.  இப்போது சில்லரை எண்ணும் மிஷன்களை இயக்கும் இன்ஜினியர்கள் எல்லாம் பரம்பரை பாதுஷா குடும்ப ஆட்சியிலும் வேலை பார்த்தவர்கள் தானே, அவர்களில் பலருக்கு ராஜ விசுவாசம் ரத்தில் ஒடிக்கொண்டுதானே இருக்கிறது.

      
              பக்த சோமையா அணிக்கும் படையூரப்பா  அணிக்குமிடையே கடுமையான போட்டி பிச்சை எடுப்பதில் மட்டுமல்ல, சில்லரை மிஷினை வைத்து மோசடி செய்வதிலும் சரியான போட்டடி என்பது அமாரசாமிக்கு புரிந்துவிட்டது.  இரண்டு பேரும் சில சில ஊர்களில் அவரவருக்கு வேண்டிய இன்ஜனியரை வைத்து மோசடி செய்தாலோ ஒருவரே மோசடி செய்தாலும் துண்டு விழப்போவது நம்முடைய கணக்கில் தான் என்பது அமாரசாமிக்கு தெளிவாகிவிட்டது.

             
               பக்த ராமையா அணிக்கும் அமாரசாமி அணிக்கும் நேரடிப் போட்டி இவர்களுக்கிடையே நடக்கும் இழுபறியில் அமாரசாமி அணி சிறிதளவு வெற்றி பெற்றாலும் அந்த அணி தான் நிதான் செளதா பரிசை நிர்ணயிக்கும் அணியாக இருக்கும் என  முன்று அணியினருக்கும்  திருவிழாவிற்கு முன்னரே வெட்டவெளிச்சமாகிவிட்டது  திருவிழா  நிபுணர்களும் அதனை ஆமோதித்தனர். 

                 தொங்கு நிதான் செளதா நிலை ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.  பக்த சோமையாவிற்கு நிலை மேலும் சிக்கலாகிவிட்டது.. திருவிழா போட்டி முடிவுகள் வெளிவந்த பிறகு அமாரசாமியிடம் நேரடியாக ஆதரவு கேட்டால் அவர் கைகேயி கேட்ட வரங்கள் கூனி கேட்காத வரங்களை எல்லாம் சேர்த்துக் கேட்பாரே, அதற்கு முன்னரே காய் நகர்த்திடுவிடுவோம் என முடிவு செய்தார்.   முதலில் அமாரசாமி படையூராப்பாவுடன் கூட்டணி சேராமலிருக்க ஒரு கட்டையைப் போடுவோம் என ஒரு போடு போட்டார் . அமாரசாமியின் அணியே தரேந்திரா ரோடியின் பினாமி அணி தான் என்று மற்றொரு  குற்றம் சாட்டை வீசினார்.

                     அமாரசாமிக்கு திறந்திருந்த இருவழிப் பாதை ஒருவழிப்பாதையாக சுருங்கிவிட்டது.  ஆனால் அவர் அதற்காகக் கவலைப்படவில்லை,  எதிர் தாக்குதலில் இறங்கினார்

         அமாரசாமி  அணி  படையூராப்பா அணியோடு கூட்டணி வைக்கலாமா?  வேண்டாமா? என முடிவெடுக்கும் முன்பு அதைக் கெடுக்கும் நோக்கில் பக்த சோமையா வேறு அமார சாமியை தரேந்திர ரோடியின் பினாமி அணி என்று குற்றம் சாட்டிவிட்டார்.  தரேந்திர ரோடியுடன் கூட்டணி சேர வேண்டி வந்தால், அதற்கு இடையூராக இருக்கும்  பினாமி அணி பழியை இப்போதே தீர்த்துவிட வேண்டும் என முடிவுக்கு வந்தார்.  போட்டாரே ஒரு போடு முடிவு எப்படி இருந்தாலும் சரி எக்காரணம் கொண்டும் பக்த சோமையா அணியோடு கூட்டணி இல்லை என்றார்.  

                   அமாரசாமியும் அவரது தந்தையாரும்  இதற்கு முன்னரும் சின்ன சீட்டாக இருந்தாலும் துருப்புச் சீட்டாக இருந்து கோட்டை கொடியேற்றிய அனுபவம் பெற்றவர்கள்.

                 அமாரசாமிக்கு எப்போதும் குழப்பத்தில் தான் எளிதாக மீன் பிடிக்கும் ராசி உண்டு.  என்ன தான் ராசி இருந்தாலும்  அணி சேர அணி மாற சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமே?

                 
                  இவையெல்லாம் சில்லரை எண்ணும் மிஷன் திறக்கப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்பு இருந்த நிலவரம். ஒரு நல்ல மூகூர்த்த நாளில் சில்லரை எண்ணும் மிஷினும் திறக்கப்பட்டது.

                    அப்புறம் என்ன நடந்தது?

........... தொடரும்

Monday 21 May 2018

தருநாடகாவில் நடந்தது என்ன? (பகுதி 1 & 2)

      தருநாடகாவில் நடந்தது என்ன? 

(அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர்)

அறிமுகப் படலம்
~~~~       ~~~~~     ~~~~~

ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் யாவும் உண்மையே.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.

இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக எழுதப்படவில்லை.

                                                                 ~~~~       ~~~~~     ~~~~~

இத்தொடரைப் படிக்க வாசகர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள்

~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம் வழங்க மாட்டேன்

இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
~~~~       ~~~~~     ~~~~~
பகுதி  1

       முன்னொரு காலத்தில் காவிரி நதி என்றொரு நதி  இருந்ததது.  அது உற்பத்தியான மாநிலம் தருநாடகா என்றழைக்கப்பட்டது.

        அந்த நதி புதிய புதிய அணைகளால் முடக்கப்பட்டு பெரும்பாலும் தருநாடகா மாநிலத்திற்குள்ளேயே  ஓடியது.  பெரு மழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்ட காலங்களில் மட்டும் அண்டை மாநிலமான மீத்தேன் நாட்டில் தப்பித் தவறி விளைந்த பயிர் மீது பாய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

          ஊழலும் லஞ்சமும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய அந்த கலிகாலத்தில் அந்த மாநிலத்தில் நியாயமாக தொழில் செய்து உலகெங்கிலும் பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் அளித்து முறைப்படி சம்பாரித்து ஒழுங்காக வரிசெலுத்திய இன்போசிஸ் நாாராயணமூர்த்தி விப்ரோ அஜீஸ் பிரேம் ஜி போன்றோரும் வாழ்ந்தனர். 

 பகுதி  2


              தருநாடகா மாநிலத்தில் சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பிச்சை எடுக்கும் திருவிழா நடைபெற வேண்டும்.

                ஆனால் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக ஒரு திருவிழா முடிந்து ஐந்து ஆண்டு பிச்சைக் காலம்  நிறைவடையும் முன்னரே மீண்டும் ஒரு  திருவிழா நடத்தும் நிலை பல முறை ஏற்பட்டிருக்கிறது.  சில சமயம் ஒரு திருவிழா முடிந்து ஓராண்டுக்குள்ளே மீண்டும் ஒரு  திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

                  அந்தப் பிச்சை எடுக்கும் திருவிழா உலகமெங்கும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.  அதற்குக் காரணம் அந்த மாநில மக்கள் பிச்சை அளித்த மிக மிக அரிதான மாபெரும் சக்திமிக்க தங்கக் காசுகள் தான்.  

                      நாம் கடையில் வாங்கும் தங்க நகைகள்  22 காரட் தரம் உடையவை என உண்மையை மட்டும்  பேசும் விளம்பரத்  தூதுவர்களால் விளம்பரங்களில் மட்டும் உறுதியளிக்கப்படுகிறது.  ஆனால் நாம் வாங்கும் நகைகள் 18 காரட் தரம் பெற்றிருந்தாலே நாம் பெரிய அதிர்ஷ்டக்காரர்கள் என அண்டை அயலார்கள்  நம் மீது பொறாமைப்படுகிறார்கள்.   ஆனால் தருநாடகா மக்கள் பிச்சை எடுக்கும் திருவிழாவில் வாரி வழங்கிய தங்கக் காசுகளோ 1000 காரட் தரம் உடையவை ஆகும்.


             உலகப் புகழ் பெற்ற தருநாடகா பிச்சை எடுக்கும் திருவிழா என்பது அந்த மாநிலத்தில் உள்ள 224 ஊர்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் பிச்சை எடுக்கும் போட்டி தான். சில சட்டச் சிக்கல்கள் காரணமாக சில ஊர்களில் போட்டி நடத்த முடியாமல் போய்விடும். அந்த ஊர்களில் சில காலம் கழித்து தனியாக போட்டி நடைபெறும்.

             224 ஊர்களில் அதிக ஊர்களில் வெற்றி பெற்ற அணிக்கு நிதான் செளதா எனும் தங்க மாளிகை பரிசளிக்கப்படும்.

               அண்மையில் தருநாடகவில் பிச்சை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.  மாநிலத்தில் உள்ள  224 ஊர்களில் இரண்டு ஊர்களில்  பிச்சை எடுக்கும் போட்டி நடத்த முடியாமல் போயிற்று.  அதனால் 222 ஊர்களில் மட்டுமே பிச்சை எடுக்கும் போட்டி நடை பெற்றது.  

                 இந்தப் போட்டிகளில் மக்கள் ஆயிரம் காரட் தங்கக் காசுகளை வாரி வழங்குவார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.  அதனால் பிச்சை எடுக்கும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

                    அதனால் பெரும்பாலான போட்டியாளர்கள் அம்மா தாயே பிச்சை போடுங்க என்ற பழைய பாணியை கைவிட்டுவிட்டார்கள்.  ரிசர்வ் வங்கிப் பணத்தையே லஞ்சம் கொடுப்பது ஒரு உத்தி.  சாதி மதம் பெயர் சொல்லி பிச்சை கேட்பது ஒரு உத்தி.  மிக மிக முக்கியமான உத்தி அண்டை மாநிலமான மீத்தேன் நாட்டிற்கு எக்காரணம் கொண்டும் தண்ணீர் காட்ட மாட்டேன் என்று உறுதியளிப்பது தான்.


Monday 14 May 2018

டிராபிக் சகாயம் சந்திரசேகருக்கு ஆதாயம் !!




டிராபிக் சகாயம் சந்திரசேகருக்கு ஆதாயம் !!    



   //////   *****    /////    *****   /////

தமிழகம் முதல்வர்களை
திரையரங்களில் தேடுகிறது !
^^^^^    ^^^^^^   ^^^^^
என மலையாள நடிகர் 
அறையும் போது என்ன செய்வது?
மறு கன்னத்தையும் 
காட்டத் தான் வேண்டும் !
^^^^^    ^^^^^^   ^^^^^ 
சாராயம் சர்க்காரை நடத்துகிறது !
லஞ்சம் வாழ்க்கை முறையாகிவிட்டது !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

சினிமா மோகம் எனும்
பெரும் பழிக்கு தீர்வாய் வந்தது 

வாராது வந்தது இளைஞர்களின்ஜல்லிக்கட்டுப் போராட்டம் !

இது காலம் கனியும் வேளை
என நம்பிக்கை துளிர்த்தது !!

^^^^^    ^^^^^^   ^^^^^ 






துணைக்கு மேலும் இரண்டு 
நம்பிக்கை நாணயங்களையும்
மெரினா போரட்டத்திற்கு முன்னேர
காலம் பரிசளித்திருந்தது !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

டிராபிக் ராமசாமி எனும்
தனி மனித இராணுவம் !


லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர
மக்கள் பாதையில்
வழிநடத்தும் சகாயம் !!

^^^^^    ^^^^^^   ^^^^^ 

எஸ். ஏ, சந்திர சேகர்
டிராபிக் ராமசாமி
வாழ்க்கையை
திரையில் வடிக்கிறாராம் !
அவரே நடிக்கிறாராம்
டிராபிக் ராமசாமியாய் !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 
ஆபாச காட்சிகள்
ஆபாச பாடல்கள்
மலிந்த படங்களை 
எடுத்த வரலாற்றை 
மறைகக்கவோ என்னவோ
அந்தப் படத் தொடக்க விழாவில்
இயக்குனர் சந்திரசேகர்
சற்றும் கூசாமல் சொல்கிறார்
டிராபிக் ராமசாமியும் 
இவரைப் போல் போராளியாம் !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

டிராபிக் ராமசாமியே இதையும்
பதிவு செய்கிறார் முகநுாலில்
கொடுமை ! கொடுமை !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

வந்த கொடுமை போதாதென
இந்தப் படத்தின் டீசர் விழாவிற்கு
சகாயமே வந்து விட்டார் !

ஒரு வழியாய்
சகாயமும் டிராபிக் ராமசாமியும்
விளம்பரத் துாதுவர் ஆகிவிட்டனர்!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

இருபெரும்
நம்பிக்கை நாயகர்களுக்கும்
பாரதி படம் எடுத்த
ஞான சேகரனையோ
காமராசர் படம் எடுத்த
பாலகிருஷ்ணனோ
ஜெயகாந்தன் படம் எடுத்த
ரவி சுப்பிரமணியனோ
நினைவில் வராதது
தமிழகத்தின் தலையெழுத்தே !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

தமிழகத்திற்கு  சாபவிமோசனம்
கைக்கெட்டும் தொலைவிலிருந்தது
மெரினா எழுச்சியால், இப்போது
கண்ணுக்கு எட்டாமல் போகிறது

                            --  நலந்தா செம்புலிங்கம்

                                14.05.2018







Thursday 10 May 2018

காரைக்குடியின் கனவுப் பள்ளி!



காரைக்குடியின் கனவுப் பள்ளி!

*** /// *** /// ***
காரைக்குடியின் கனவுப் பள்ளி!
மாநிலம் அறிந்த மாண்புறு பள்ளி!
அதைப் பேசாத ஊடகம் இல்லை!
அதுவே இராமநாதன் செட்டியார் பள்ளி!!
~~
ஒழுக்கம் கல்வி
விளையாட்டு போட்டி
எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும்!
~~
ஆசிரியர் பெற்றோர்
பொது நல சேவை அமைப்புகள்

அழகப்பர் கண்ட கல்விக்குடியின்
புதிய கல்விக்கு கோயிலுக்கு 
நல் அரண்களாயினர் !!
~~
பகைவர் இல்லாக் கோட்டைக்கு
பிள்ளைகள் தான் படையெடுத்தனர்!
85 பேருக்குத் தான் இடம்!
350 பேர் விண்ணப்பம்!!
~~
கல்வி வரலாற்றில்
ஹவுஸ்புல் பலகை 
மாட்டிய  ஒரே அரசுப் பள்ளி! 
இராமநாதன் செட்டியார் பள்ளி!!
~~
புதிய தலைமுறைக் கல்வி
இந்த வரலாற்றை
அட்டைப் படக் கட்டுரையாக்கிற்று!
~~
ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஒரு புறம்
படிக்க வந்த பிள்ளைகளைக்
கைவிடலாமா? தவிப்பு  மறுபும்
~~
பெற்றோர் கழகம் 
மனு மீது மனுக் கொடுத்தது
புதிய கட்டிடம் வேண்டி


~~




பிள்ளைகளைச் சேர்க்கத் துடித்த
பெற்றோரின் கண்ணீர்  
கல்விக் கடவுள் காமராசர்
சமாதியைச் சென்றடைந்தது!
~~

காமராசர் உயிர்த்தெழுந்தார்!

தலைமை ஆசிரியர் பீட்டர்
கனவில் வந்தார்! காதைத் திருகினார்!!
அவர் பாணியிலே அவரே
கேள்விகேட்டு தீர்வுரைத்தார்!
~~
நெனச்ச ஒடனே
 கட்டிடம் கட்ட முடியுமாங்கிறேன் ?
காலைல நூறு பிள்ளைக்கு 
சொல்லிக்கொடுங்கிறேன்! 
மத்தியானம் நூறுபிள்ளைக்கு 
சொல்லிக்கொடுங்கிறேன்!!
~~
அப்படித் தான் தோன்றியது

புரட்சிகரமான "ஷிப்ட்"

முறை கல்விச் சேவை!!
அதுவும் ஆறாம் வகுப்புக்கு !
~~

"ஹவுஸ் புல் பலகை"யும்
கல்வியுலக வரலாறு தான்
ஷிப்ட்"முறை கல்வியும்
கல்வியுலக வரலாறு தான்
முதலில் வந்தது பள்ளியின்  சாதனை!
தொடர்ந்த வரலாறோ
மக்கள் கல்விக்கு புதிய பாதை!!

       __நலந்தா செம்புலிங்கம்                         
           10.05.2018





Thursday 3 May 2018

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?          
  //// **** ///// *** /////                           
                   







நகராட்சிப் பள்ளி நகராட்சியின் நெஞ்சை நிமிரச் செய்யும் பள்ளி என்ற தகுதியுடைய, தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பள்ளி, காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுள்ளவர் திரு. திக கலைமணி.  

                    அவர் சமுக வலைத் தளங்களில் என்னுடைய பல நண்பர்களின் நண்பர்.  அவ்வழியில் அவருடைய பல பதிவுகளைப் பார்த்திருக்கிறன். அவர் பெயரிலேயே தன் இயக்கத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருப்பவர்.  அவர் பதிவில் பிரச்சாரம் தூக்கலாக இருக்கும்.  ஒரு இயக்க வெளியீட்டின் வாசனையோடு இருக்கும்..அண்மையில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தது அதற்குப் பிறகு தான் முகநுாலில் நண்பர்கள் ஆனோம்.
                        
                    இராமநாதன் செட்டியார் பள்ளியால் ஏற்பட்ட நட்பு அவருடைய ஒரு முகநுால் பதிவால் முள்ளாய் தைக்கிறது.

                   மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  அடிப்படைத் தேவைகளுக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள போது இப்படி ஒரு திருவிழாவிற்காக தண்ணீரைத் திறந்து விடுவது இவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது போலும்.  அது குறித்து இவ்வாறு முகநுாலில் பதிவு செய்துள்ளார்::::::

""""குடிக்கவும், குண்டி கழுவவவும் தண்ணி இல்லையாம்! கள்ளழகருக்கு அனையை திறந்து விடுவான்களாம்."""" 

           இராமநாதன் செட்டியார் பள்ளியிலும் அடிப்படை வசதிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது.  அது குறித்து நகாராட்சியில் மேற்படி திக கலைமணி மற்றும் பலர் மனுக் கொடுத்துக்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு திரு திக கலைமணி பேட்டியும் கொடுத்துள்ளார்.   

                     அப்போது திரு திக கலைமணி எந்த நடையில் பேசினார்?  கள்ளழகர்  விழா பற்றி அவர் போட்ட பதிவின் நடையிலா?

                       ஏன் இராமநாதன் செட்டியார் பள்ளி பிரச்சனையில் ஒரு நயதக்க நாகரீக நடை? கள்ளழகர் விழா பற்றிய பதிவில் கொச்சை நடை?

                       அவருடைய நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? வெறுப்புணர்வை ஏற்படுத்துவதா?

                        1992 ஆம் ஆண்டில் மகாமகத்தில் முதல்வர் ஜெயாலலிதா அவர்களும் திருமதி சசிகலா அவர்களும் தீர்த்தமாடுவதற்காகச் செய்யப்பட்ட சிறப்பு ஏற்படாடுகளால் மிக மிகக் கொடுரமான நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின.   அதுவும் இந்து மதத்தால் வந்த வினை தான். அதைப் பற்றி என்ன பதிவை திரு திக கலைமணியும் அவரது இயக்கமும் போட்டார்கள்? இதைப் போல கொச்சையாகப் போட்டார்களா?

                       கள்ளழகர் விழாவைப் பற்றி எவ்வளவு கொச்சையான நடையில் வேண்டுமானாலும் அவர் பதிவு போடட்டும், அதற்கு முன்னர் மதுரையில் மட்டும் இந்துக் கோவில்களில் பேரில் ஏற்படுத்தப்பட்ட ஊருணிகளையும் குளங்களையும் பட்டடியிலிட்டுவிட்டு, அவற்றை எம்மத்தினரும் பயன்படுத்த வழிசெய்த உண்மையான மதச் சார்பின்மையைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு திரு திக கலைமணி தனது கொச்சை நடையைத் தொடரட்டும்.


                     நான் இந்து தான், இந்து மதத்தில் குறைகள் உள்ளன. இந்து மதத்திலுள்ள குறைகளைக் களைய ஒரு வழி பெரிய புராணமே, தவிர பெரியார் அல்ல.


                     பெரியாரும் தேவைப்படுகிறார்,  திராவிடர் கழகத்தின் கிளை இயக்கங்களிலுள்ள உள்ள குறைகளைக் களைய!