உலகம் அறிந்த ஊராட்சிப்பள்ளி !!
தமிழா்களுக்கு பிறமொழிப் பெயரா?
எனக்கும் தான், இதுவொரு தீராத கணக்கு
இன்று கொஞ்சம் நேராகி இருக்கிறது!!
தமிழ் குயில் பிரித்திகா பெயரை
ஒரு ஜப்பானிய சிட்டுக்குச் சூட்டியுள்ளனர்!
ஜப்பானிய பிரித்திகாவை தமிழில் வாழ்த்துவோம் !!
இருவேறு கருத்துகளுக்கு இடமளிக்கும்.
சா்ச்சை தானே செலவில்லாத விளம்பரம்!
விஜய் தொலைக் காட்சி
ஒரு பன்னாட்டு நிறுவனம்!
அதன் மரபணு வாலை நீட்டும்!!
இருந்தாலும் இம்முறை
கிராமத்து இசைக்குயிலினால்
சாப விமோசனம் பெறட்டும்
சாப விமோசனம் பெறட்டும்
சொந்த முயற்சியில்,
பெற்றோர் ஆதரவில்,
வாகைசூடும் மாணவர்களின்
வெற்றியிலும் சில பள்ளிகள்,
உாிமை கொண்டாடும் !
தியானபுரமாே ஒரு ஞானபுரம் !
அங்கே இறைவணக்கம்
வெற்றுச் சடங்காகயில்லை !
வெற்றித் திருப்பு முனையாயிற்று !!
பிரித்திகாவின் இறைவணக்கம்,
மாதா பிதாவை மட்டுமல்ல,
குரு நாச்சியார்களையும் ஈா்த்தது !
பிரித்திகாவின் இசை வாழ்க்கைக்கு
பள்ளிக் கூடம் தான் விளக்கேற்றியது!
ஒவ்வொரு அடியிலும்
ஒவ்வொரு படியிலும் ஆசிரியர்கள்
துணைநின்றனர் ! தூக்கிவிட்டனர் !!
பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தைத் தான் வெல்லலாம்,
சூப்பர் சிங்கர் வெற்றிக்கு,
ஆன் லைன் ஓட்டுத் திறமும் கட்டாயம் !
களத்தில் இறக்கிய ஆசிரியர்கள்,
இணையத்திலும் கலக்கினார்கள்!
இசை மழையாலும்,
இணைய உலகின்
வாக்கு மழையாலும்,
செல்லக் குயிலாய் தேர்வானாள்
உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ,
அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
அவை யாரும் தேடாத
சவலைப் பிள்ளைகளாகும் !
பகட்டும் படாடோபமும்
பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
மற்றொரு பக்கம் மதிப்பெண் மயக்கம்
பிள்ளைகளைக் காவு கேட்கும் !
ஐயகோ
இது காமராசா் நாடா?
சுயநிதி முதலாளிகளின்
வேட்டைக் காடா?
இது எதில் போய் முடியும்?
ஒரு நாள்அரசுக்கும் கல்விக்கும்
சம்பந்தமில்லை என்றாகும் !
பகட்டுப் பள்ளிகளுக்கும்
மக்கள் கல்விக்குமிடையிலான
நெடும் போாில் ஊக்கமளிக்கிறது,
பிரித்திகாவின் வெற்றி !!
நலந்தா செம்புலிங்கம்
நலந்தா செம்புலிங்கம்
24.06.2017
பகட்டுப் பள்ளிகளுக்கும்
ReplyDeleteமக்கள் கல்விக்குமிடையிலான
நெடும் போாில் ஊக்கமளிக்கிறது,
பிரித்திகாவின் வெற்றி !! என்பது உண்மைதான் ஐயா. பகிர்வுக்கு நன்றி.