Sunday, 30 July 2017

அப்துல் கலாமின் சன்மார்க்கம்

அப்துல் கலாமின் சன்மார்க்கம்!

அப்துல் கலாம் அருகில் கீதையா?
அன்று எதிர்த்து நின்றவர்கள்
இன்று பொங்கி எழுகிறார்கள் 



அது இந்துக்களின் திருவிழா
அது இந்துக்களின் திருக்குளம்
அது இந்துக் கடவுளின் சிலை
திருக்குளத்தில் சிலை விழுந்தது

ஒரு இசுலாமியர் தான்
கண்ணிமைக்கும் நேரத்தில்
குளத்தில் பாயந்து 
சிலையை மீட்டினார்
அவர் பேரன் தான்......

வீணை இசைத்த விஞ்ஞானி
கீதை வாசித்த சன்மார்க்கி















கலாமின் சன்மார்க்கம்             
படிப்பறிவினால் மட்டுமல்ல
பரம்பரை வித்தாலும் விளைந்தது

இந்து மடாதிபதி 
இப்தார் விருந்து கொடுப்பதும்
கண்ணனின் தாசன்
இயேசுவைப் பாடியது மட்டுமல்ல

அப்துல் கலாம் பகவத்  கீதை
 வாசித்ததும் தான்
அரசியல் சார்பின்மையற்ற
மதச்சார்பின்மை

நலந்தா செம்புலிங்கம்
                   30.07.2017
மற்ற பதிவுகளையும் பார்க்க என் வலைப்பக்கத்திற்கு வருக :  nalanthaa.blogspot.com

1 comment:

  1. இதைக்கூட இப்போது அரசியலாக்கிவிட்டார்களே? (சிலையுடனே சேர்த்தே வடிவமைத்திருக்கலாம். பகவத் கீதை பின்னர் சேர்க்கப்பட்டதுபோலத் தெரிகிறது.)

    ReplyDelete