Saturday 22 July 2017

பக்தி வெள்ளத்திடம் நாத்திகம் தோற்றுவிட்டது ! !

பக்தி வெள்ளத்திடம்
 நாத்திகம் தோற்றுவிட்டது ! !




ஆடி, 
பதினொன்றோடு  ஒன்று 
பன்னிரெண்டு என்ற 
கணக்கோடு நிற்காது !
அது
சூரியனைச் சுற்றும் 
பூமிப் பந்தின் வழித் தடத்தில்
மாலைப் பொழுதின் ஆரம்பம்
மார்கழி அதிகாலை ஆகும் !

காலையும் மாலையும்
கடவுளைத் தொழுவதற்கு
தேர்ந்த பொழுதுகளாகும் !

புத்தாண்டை ஆவணியில்
கொண்டாடிய ஆடை வணிகர்கள்
அதற்கு முந்தைய ஆடியில்
பழையன கழிக்க தள்ளுபடி
 உத்தியை கைகொண்டார்கள்!

அதனால் தான் ஆடியில்
கோயில்களில் திருவிழா!
கடைவீதியில் கொண்டாட்டம் !

துணிமணிகளில் ஆரம்பம்
தொலைக் காட்சி ஏ,சி
வாஷிங் மிஷின் என எதற்கும்
விலையையே சொல்லமாட்டார்கள் !
தள்ளுபடியைத் தான்
தண்டோரா போடுவார்கள் !

 பாலும் தெளிதேனும்
அன்று அவ்வையார் படைத்தார்
இன்று அவை யாருக்காவது
கலப்படமின்றிக் கிடைக்குமா?

பத்துக்கும் பதினைந்துக்கும்
பால் கிடைத்த போது
சொம்புகளில் தான் அபிக்ஷேகம்
பால் விலை அரை சதமான 
பிறகு தான் அண்டா அண்டவாக 
நடக்கிறது அபிக்ஷேகம்

கட்டுக்கடங்காக் கூட்டம்
தன் மெய் வருந்த பார்ப்போர் 
கண் வருந்த நேர்த்திக் கடன்கள்

பக்தி வெள்ளத்திடம்
நாத்திகம் தோற்றுவிட்டது!
ஆத்திகம் முழு
வெற்றி அடைந்துவிட்டதா?


இன்று ராக்கெட்டுகள் 
விலைவாசியிடம் தோற்கின்றன
அன்றாடத் தேவைப் பொருட்கள்
எட்டாக் கனி ஆகின்றன ஆனாலும்
ஆறு இலக்க பைக்குகள்
சாதாரணமாகிவிட்டன
அரசின் விலையில்லா டி,வி, யும்
அறுபதாயிரம் ரூபாய் டி,வி, யும்
அடுத்தடுத்து இருக்கின்றன சில வீடுகளில்
விலைவாசியும் ஒரு பொருட்டில்லை
முரண்பாடுகளும் சாதாரணமாகிவிட்டன

உ றவுகளுக்குள்ளும் 
முரண்பாடுகள் சாதாரணமாகிவிட்டன
நீ சாட்சியாய் இருந்தது போதும்
நாங்கள் பட்டதும் போதும்
இரங்கி வா இடர்களைய வா

இந்த ஆடியிலாவது தேடி வா
ஊழலை ஒழித்திடு
உறவுகளைச் சேர்தது வை
                        நலந்தா செம்புலிங்கம்
                                    22.07.2017

1 comment:

  1. ஆத்திகம் இருக்குமிடத்தில் நாத்திகத்திற்கு இடமேயில்லை ஐயா.

    ReplyDelete