இனிக்கும் பேய்க்கரும்பில் நிலைசேர்ந்த .....
இறை ஞானம் உணர்ந்தவர்
இறை ஞானம் உணர்ந்தவர்
விஞ்ஞானம் வென்றவர்
பள்ளிகளை வலம் வந்து
இனிக்கும் பேய்க் கரும்பில்
நிலை சேர்ந்த திருக்குறள் தூதர்
வாழ்க்கை முறையில் எளியர்
இராணுவ வலிமைக்கு வித்திட்டவர்
எடை குறைவான ஊன்றுகோல்
மலிவு விலை இதயக் கருவி
இவருக்குப் பிடித்த இவரது சாதனைகள்
சாதி மதம் மொழி கடந்த
புதிய இளைய இந்தியாவை
விதைத்து வளர்த்த
தமிழ் நாட்டுப் பட்டேல்
வரலாறு பல படைத்தவர், இன்று
பூகோளத்தையும் புரட்டிப் போடுகிறார்
இந்தியாவின் மையப் புள்ளி எது?
நாக்பூரா? இதுவரை எப்படியோ?
இனிமேல் இராமேஸ்வரம் தான்!
மொழி, வழி பேதமின்றி
ஆறு நூறு என எல்லோரையும்
ஈர்த்த நட்சத்திர நாயகனை
ஈன்ற இராமேஸ்வரம் தான்
இந்தியரின் மையப் புள்ளி ஆகவே
இந்தியாவின் மையப் புள்ளி
-நலந்தா செம்புலிங்கம்
28.07.2017
மற்ற பதிவுகளையும் பார்க்க என் வலைப்பக்கத்திற்கு வருக : nalanthaa.blogspot.com


ariya thakavalkaL adangkiya kavithai . arumai !
ReplyDelete