Saturday, 7 April 2018

தமிழ் ஞானத் தூரிகையில் வள்ளல் அழகப்பர்!

பட்டினத்தார் இறைஞானத்தின் கொடுமுடி. முடியரசன் பகுத்தறிவின் உச்சம். இவர்கள் எங்கேனும் ஒரு கோட்டில் சந்திப்பார்களா? 06.04.2018 நன்னாளில் பழநியப்பர் அரங்கிற்கு கைகோர்த்தே வந்தார்கள். எதற்கு? தேவகோட்டை இராமநாதனுக்கு தமிழ்ப்பாலும் ஞானப்பாலும் ஊட்டி வள்ளல் அழகப்பரை விரித்துரைக்கப் பணிப்பதற்கு!
                                                              ///***///
L.CT. L பழநியப்பர் அரங்கில் 06.04.2018-இல் நடைபெற்ற வள்ளல் அழகப்பரின் 109வது பிறந்த நாள் விழாவில் சிறப்புரையாற்றிய தேவகோட்டை இராமநாதன் கையாண்ட பட்டினத்தார், முடியரசனார் பாடல்கள், இதோ:
                                                                   


///***///
இறக்கும் போது கொடுபோவது ஏதுமில்லை
இடைநடுவில்
குறிக்கும்
இச்செல்வம் சிவன்                                                                   
தந்தது என்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமரை என்சொல்வேன் கச்சி 
ஏகம்பனே!
-பட்டினத்தார்








அள்ளி அள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்!
அழகாகப் பேசுதற்கே நாவை ஈந்தான்!
உள்ளமெனும் ஒருபொருளை உரத்திற்கீந்தான்!
உடம்பினையோ கொடுநோய்க்கே ஈந்தான் அன்றோ?
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
வினைமுயற்சி யாவையுமே கல்விக்கீந்தான்!
உள்ளதென ஒன்றில்லை என்றபோதும்
உயிர் உளதே கொள்கவெனச் சாவுக்கீந்தான்!
-கவியரசர் முடியரசனார்




என்பெற்ற
தாயாரும்
என்னைப்
பிணமென்றிகழ்ந்து
விட்டார்
பொன்பெற்ற மாதரும் எனைப்போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்
உன்பற்றொழிய ஒருபற்றுமில்லை உடையவனே!
-பட்டினத்தார்

No comments:

Post a Comment