Monday 23 April 2018

அழகப்பர் திருவாசகம்

அழகப்பர் திருவாசகம் 
  
//// **** ///// **** /////

புத்தகங்களால்
அறிவு பெருக்கெடுக்கும்!
அன்பு பெருக்கெடுக்கமா?
இரவல் கொடுத்தவன்
புத்தகத்தைத் திருப்பிக் கேட்கிறானே?
அன்பு எப்படிப் பெருக்கெடுக்கும்?



///
ஒரு இரவல் புத்தகம் தான்
எங்கள் நட்புறவின் கோபுரத்தில்
கலசமாகத் திகழ்கிறது !

///
அது ஈடு இணையற்ற புத்தகம்!
ஒரு பள்ளி வெளியிட்ட புத்தகம்!
சந்தையில் கிடைக்காத புத்தகம்!
ஒரு நண்பரிடம் இருந்தது
இரவல் கேட்டேன், உடனே தந்தார்!

///
சொன்னால் நம்பமாட்டீர்கள்
திருப்பிக் கொடுத்தும் விட்டேன்
கொடுக்கும் போது நன்றியுரைத்தேன்
இது புத்தகமல்ல, திருவாசகம்!
அழகப்பர் எழுதிய திருவாசகம்!!

///
இரவல் கேட்டு பெற்று
படித்து திருப்பிய புத்தகம்
என்னிடமே திரும்பியது
இப்போது பரிசாய்!
இருபதாண்டு நட்பின் பரிசாய்!!
அழகப்பரிடம் நான்
திளைத்ததற்கு அங்கீகாரமாய்!!

///
எனது புத்தகத் தேன் கூட்டில்
இன்றைக்கு மட்டுமல்ல  என்றைக்கும்
இதுவே மதிப்புமிக்க நூல்!

///
அந்தப் புத்தகத்திற்கு 
விலை இல்லை!
ரவிச் சந்திரனின்**
அன்பிற்கும் எல்லையில்லை !!
                    
                                 நலந்தா செம்புலிங்கம்
                                 உலகப் புத்தக நாள் 2018
பின் குறிப்பு

*** நண்பர் ரவிச்சந்திரன் புத்தகப் பித்தர், சிறந்த கவிஞர்.  "கவியரசன் காவியம்" என புதுக் கவிதையில் கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். இவர் காரைக்குடி SMS பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.

1 comment: