Sunday, 8 April 2018

காமாராசர் உயிர்த்தெழுவார்!!

/// *** //// **** ////




















படிக்காத சித்தர் காமராசர்!  
ஜீவ சமாதி கொண்டுள்ளார்!
ஓரீரு தலங்களில் அல்ல 
இருபதாயிரம் பள்ளித் தலங்களில்!!

இது மிகையில்லா மொழியே!
எனினும் கவைக்கு உதவாத
புளங்காங்கித பெருமிதம் தான்!

அரசுப் பள்ளிகளின் நிலை
பெரும்பாலும் அவலம் தான்!
மாணவர் பற்றாக்குறை 
நிசர்தன பேருண்மை!

அழகப்பர் கண்ட
கல்விக்குடியாம் காரைக்குடியில்
இக்கசப்பிற்கு இனிப்பு மருந்தாய்
திகழ்கிறது ஒரு நகராட்சிப் பள்ளி!
நகராட்சியின நெஞ்சை
நிமிர வைக்கும் பள்ளி!!

அது தான்
இராமநாதன் செட்டியார்
நகராட்சி உயர்நிலைப் பள்ளி!
ஒழுக்கம், கல்வி, தூய்மை
ஆசரியர் அர்ப்பணிப்புணர்வு
மாணவர் சாதனைப் பட்டடியல்
என எண்திசையிலும்
வெற்றிக் கொடி நாட்டும்!
மெட்ரிக் பள்ளிகளையும்
திரும்பிப் பார்க்க வைக்கும்
நல்ல பள்ளி மக்கள் பள்ளி!!

அங்குமோர் பிர்ச்சனை
திடிரென வந்த காய்ச்சல் அல்ல
ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து
இருக்கிப் பிடித்துவரும் இடப் பிரச்சனை
அடிப்படை வசதி பற்றாக்குறை பிரச்சனை
எதிர்வரும் கல்வியாண்டு 
கொதிநிலை தாண்டி வெடிக்கக் கூடும்

ஆறாம் வகுப்பில் புதிய சேர்க்கை
85 மாணவர்க்கே இடமுண்டு, 
அதுவும் கொஞ்சம் நெருக்கடியோடு
இதுவரை வந்த விண்ணப்பமோ 225
மாடியில் கூட வகுப்பு நடத்தலாம்!
கூரை போட அனுமதி வேண்டுமே
தவிக்கிறது பெற்றோர் கழகம்!


நகராட்சி விரும்பிப் பார்க்குமா?
கல்வித் துறை துரிதமாய் பார்க்குமா?
ஆட்சியர் தான் ஆவன செய்வார?
இல்லை காமாராசர் தான்
உயிர்த்தெழுந்து வரவேண்டுமா?
                               
                                                 நலந்தா செம்புலிங்கம்
                                                 08.04.2018

4 comments:

  1. பதிவு மனதை கனக்க வைக்கிறது..இன்று மாணவர்களைத்
    தேடி ஆசிரியர்கள் அலைகிறோம்.ஏன் இந்த சூழல்.நிச்சயம் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  2. இந்தப் பள்ளி வளாகத்தினுள்ளேயே ஒரு தொடக்கப் பள்ளியும் இருக்கிறது. அந்தத் தொடக்கப் பள்ளியும் இட நெருக்கடியில் தவிக்கிறது.

    இரண்டு பள்ளிகளுக்கும் தனித் தனி இடம் வேண்டும். நான் அறிந்தவரை தொடக்கப் பள்ளிக்கு போதிய அளவு அரசு நிலமே அந்தப் பகுதியிலேயே இருக்கிறது. ஒரீரு துளி பச்சை மை தான் தேவை

    ReplyDelete

  3. எல்லா அரசு பள்ளிகளிலும் இப்படி ஒருநிலை மீண்டும் வருமா..🤔

    எல்லா அரசு பள்ளிகளையும் இவ்வாறு செயல்பட வைப்பதில் அரசுக்கு என்ன தடை.. 🤔

    Four years back the strength was as low as 200 +

    Now the strength is 946


    The HM Peter Rajkumar is very dynamic and dedicated..

    Earlier there were 10 regular teachers. Now there are 15.. Besides the PTA Association is non political and very strong.. They appointed 15 teachers .

    Focus is on Moral education, all round development of students apart from the regular Academic sessions..

    Once I addressed the teachers..

    ReplyDelete
  4. உண்மையான ஆதங்கம். நல்ல விடிவு வரட்டும்.

    ReplyDelete