REDME உலகப் புகழ் பெற்ற ஐஸ் க்ரீம் ****************************** **************************
REDME அது ஜப்பானிய மொழிச் சொல்லா கொரிய மொழி என்பதிலேயே பலருக்கு ஐயம், அதன் பொருளும் தெரியாது, அந்தப் பெயரில் விற்கும் ஐஸ் க்ரீமை யாருக்குத் தெரியாது?
REDME ஐஸ் க்ரீமிற்கு பல ஊர்களில் கிளையில் உள்ளது. ஐஸ் க்ரீமின் சுவை அருமையாகயிருக்கும் விலை அதைவிட அதிகமாயிருக்கும். அதன் தொலைக்காட்சி விளம்பரம் படு அசத்தலாகயிருக்கும்.
ராமுவால் முடிந்ததெல்லாம், அந்த REDME ஐஸ் க்ரீம் கடையைக் கடக்கும் போதெல்லாம் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்வது தான். முகத்தைத் திருப்பத் திருப்ப மனம் அதன் மீதே லயத்தது.
அம்மாவிடம் ஒரே ஒரு நாள் ஒரு ஐஸ் க்ரீமிற்கு ராமு மன்றாடினான். அப்பாவின் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று சொல்லி அம்மாவும் மறுத்துவிட்டார்
அம்மாவிடம் ஒரே ஒரு ஐஸ் க்ரீமிற்கு மன்றாடியும் அம்மாவும் மறுத்ததால் ராமு சோர்ந்து போனான். பாடத்தில் கவனம் கொள்ளமுடியவில்லை. வேறு எதிலும் கவனம் கொள்ள முடியவில்லை. முகமே வாடியது.
நினைந்தூட்டுபவள் தானே தாய். ராமுவின் மனவாட்டம் உணர்ந்து ஒரு நாள் அவன் கேட்காத போது, ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்தாள்.
அம்மா, மறுநாள் ராமு பள்ளிக்குச் சென்ற பின் அப்பாவிடம் ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்ததைச் சொன்னாள். அப்பா கோபப்படவில்லை.
ராமு ரொம்ப ஏங்கிப் போயிட்டான். நானே ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கலாம் சில நேரம் நினைச்சியிருக்கேன். நான் பண்ண சபதத்தை நானே மீறுறதா? என்கிறதா எண்ணம் தான் என்னை தடுத்துருச்சு எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு உண்டு என அப்பா, அம்மாவைப் பாராட்டி னார்.
நலந்தா செம்புலிங்கம்
29.08.2018 .
ஐஸ் கிரீமில் வெளிப்படும் அன்பு. அருமை.
ReplyDeleteஅருமை சார் அப்பாவின் புரிதல் மிகவும் சிறப்பு
ReplyDeleteExcellent and practical.
ReplyDelete