Saturday 23 June 2018

நற்கல்வியின் தொடக்கம் பகவான்!!

நற்கல்வியின் தொடக்கம் பகவான்!!

                                   ==================================

மதிப்பெண்கள்
மாணவனின் நல்ல அடையாளம்!
அதுவே ஒற்றை அடையாளமானது
தமிழ் நாட்டின் சாபம்!
~~~~




தனியார் பள்ளிகள்!
மதிப்பெண் தொழிற்சாலைகள்!
8வது, 9வது ஊதியக்குழு என கல்வியை 
திசைதிருப்பம் சாலைகளிலேயே
முனைந்து முனைந்து பயணிக்கிறோம் !
~~~~|
ஒரு பணிமாற்றத்தால்
 வந்தது மடைமாற்றம் !
~~~~~
நல்லாசிரியே எல்லாமுமாவார்
நன்மொழி மெய்யாகியுள்ளது
அது பள்ளிப்பட்டு மாணவரின்
உப்பு கண்ணீரில் பூத்தது
~~~

திருவள்ளூர் பள்ளிப்பட்டு 

வெளி அகரம் பகவான்

பெயர்களே ஊக்கமாய்!
~~~
எழுத்தின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் பகவன்
என்றான் பொய்யாமொழியன்
நற்கல்வியின் தொடக்கம் பகவான்
புதுக் குறள் படைத்தது பள்ளிப்பட்டு!
~~~
நல்லாசிரியர்கள் வெகு சிலர்
சமூக ஆர்வலர் பெரும்படையியனர்
கூட்டு வேள்வயியில் அரசுப் பள்ளிகளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
நம்பிக்கை துளிர் விடுகிறது
~~~|
ஆனாலும் 
லட்ச ரூபாய் எல் கே ஜி பள்ளி
வாசலில் தான் வரிசை நிற்கிறது!
காரணம் வேறொன்றுமில்லை
படிப்பது பிள்ளைகள் தான்!
தேர்ந்தெடுப்பதோ பெற்றோர்கள்!!
~~~~
இராமன்  அரியணையேற
அரசன் உத்தரவிட்டான்!
 ரத்து செய்தது கைகேகி வரம்!
~~~
இங்கே அரசு உத்திரவிட்டது!
பகவானின் பணியிடத்தை மாற்றி
பிள்ளைகளின் பாசக் கயிறு
உத்தரவை நிலைகுலைத்துவிட்டது
~~~
ஒவ்வொரு மாணவனின்
 கண்ணீர் துளியிலும்

ஒரு நல்லாசரியன் உருவாவான்

வெளியகரம் சொல்லும் செய்தி








~~~|
கல்வி  வணிகமான நாளில்
தப்பிப் பிறந்த தங்கமகன்!
பச்சைத் தமிழன் காமராசரின்
புதிய அவதாரம் இவன்!!

                   நலந்தா செம்புலிங்கம்
                   22.06.2018

2 comments:

  1. இக்காலத்தில் இப்படியும் ஓர் ஆசிரியர் இருக்கிறாரா என்று வியக்குமளவிற்கு, அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட ஒரு முன்னுதாரண ஆசிரியர்.

    ReplyDelete
  2. கல்விதான் சமுதாய மேம்பாட்டுக்கு அடித்தளம்...அனைவருக்கும் கல்வி ...தரமான கல்வி.... தரமான,வியாபாரநோக்கமில்லாத கல்விக்கூடங்கள் என்ற இலட்சியங்கள்...கோட்பாடுகள் என்று நிறைவேறுமோ அன்றுதான் நாடு முன்னேறும்....

    ReplyDelete