டிராபிக் சகாயம் சந்திரசேகருக்கு ஆதாயம் !!
////// ***** ///// ***** /////
தமிழகம் முதல்வர்களை
திரையரங்களில் தேடுகிறது !
^^^^^ ^^^^^^ ^^^^^
என மலையாள நடிகர்
அறையும் போது என்ன செய்வது?
மறு கன்னத்தையும்
காட்டத் தான் வேண்டும் !
^^^^^ ^^^^^^ ^^^^^
சாராயம் சர்க்காரை நடத்துகிறது !
லஞ்சம் வாழ்க்கை முறையாகிவிட்டது !
^^^^^ ^^^^^^ ^^^^^
சினிமா மோகம் எனும்
பெரும் பழிக்கு தீர்வாய் வந்தது
வாராது வந்தது இளைஞர்களின்ஜல்லிக்கட்டுப் போராட்டம் !
இது காலம் கனியும் வேளை
என நம்பிக்கை துளிர்த்தது !!
^^^^^ ^^^^^^ ^^^^^
நம்பிக்கை நாணயங்களையும்
மெரினா போரட்டத்திற்கு முன்னேர
காலம் பரிசளித்திருந்தது !!
^^^^^ ^^^^^^ ^^^^^
டிராபிக் ராமசாமி எனும்
தனி மனித இராணுவம் !
லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர
மக்கள் பாதையில்
வழிநடத்தும் சகாயம் !!
^^^^^ ^^^^^^ ^^^^^
எஸ். ஏ, சந்திர சேகர்
டிராபிக் ராமசாமி
வாழ்க்கையை
திரையில் வடிக்கிறாராம் !
அவரே நடிக்கிறாராம்
டிராபிக் ராமசாமியாய் !!
^^^^^ ^^^^^^ ^^^^^
ஆபாச காட்சிகள்
ஆபாச பாடல்கள்
மலிந்த படங்களை
எடுத்த வரலாற்றை
மறைகக்கவோ என்னவோ
அந்தப் படத் தொடக்க விழாவில்
இயக்குனர் சந்திரசேகர்
சற்றும் கூசாமல் சொல்கிறார்
டிராபிக் ராமசாமியும்
இவரைப் போல் போராளியாம் !
^^^^^ ^^^^^^ ^^^^^
டிராபிக் ராமசாமியே இதையும்
பதிவு செய்கிறார் முகநுாலில்
கொடுமை ! கொடுமை !!
^^^^^ ^^^^^^ ^^^^^
இந்தப் படத்தின் டீசர் விழாவிற்கு
சகாயமே வந்து விட்டார் !
ஒரு வழியாய்
சகாயமும் டிராபிக் ராமசாமியும்
விளம்பரத் துாதுவர் ஆகிவிட்டனர்!
^^^^^ ^^^^^^ ^^^^^
இருபெரும்
நம்பிக்கை நாயகர்களுக்கும்
பாரதி படம் எடுத்த
ஞான சேகரனையோ
காமராசர் படம் எடுத்த
பாலகிருஷ்ணனோ
ஜெயகாந்தன் படம் எடுத்த
ரவி சுப்பிரமணியனோ
நினைவில் வராதது
தமிழகத்தின் தலையெழுத்தே !
^^^^^ ^^^^^^ ^^^^^
தமிழகத்திற்கு சாபவிமோசனம்
கைக்கெட்டும் தொலைவிலிருந்தது
மெரினா எழுச்சியால், இப்போது
கண்ணுக்கு எட்டாமல் போகிறது
-- நலந்தா செம்புலிங்கம்
14.05.2018
உங்கள் ஆதங்கத்தின் நியாயம் இருக்கிறது. நம்மவர்கள் மாறமாட்டார்கள்.
ReplyDelete