Tuesday 22 May 2018

தருநாடகாவில் நடந்தது என்ன? பகுதி 3

தருநாடகாவில் நடந்தது என்ன?  பகுதி  3
(பகுதி 1 & 2, 21.05.2018 அன்று வெளியிடப்பட்டது) 

-------- அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர் -------

அறிமுகப் படலம்
~~~~       ~~~~~     ~~~~~

ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் யாவும் உண்மையே.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.

இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக எழுதப்படவில்லை.

                                                                 ~~~~       ~~~~~     ~~~~~

இத்தொடரைப் படிக்க வாசகர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள்

~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம் வழங்க மாட்டேன்

இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
~~~~       ~~~~~     ~~~~~
பகுதி  3



               தருநாடகவில் அண்மை நடந்த  பிச்சை எடுக்கும் திருவிழாவில் 

               1.  செங்கோட்டை பாதுஷா தரேந்திர ரோடியின் தளபதி  படையூராப்பா அணி     

               2. பரம்பரை  பாதுஷா குடும்ப வாரிசு தாகுல் சாந்தியின் தளபதி பக்த சோமையா அணி

                3. மாயாஜால  பாதுஷா ஞான செளடா வின் மகன்  அமாரசாமி அணி

ஆகிய மூன்று அணிகள் களத்தில் இறங்கின.

             தருநாடக மாநிலம் கணிப்பொறி  தொழிலில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் மாநிலம். அங்கே நடக்கும் பிச்சை எடுக்கும் திருவிழாவில் சில்லரை எண்ணும் மிஷின்கள் பயன்படுத்தபட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  

            ஆனால் திருவிழா தொடங்குவதற்கு முன்னரே அந்த மிஷின்களின் நம்பத்தன்மை பற்றி சர்ச்சைகள் எழுந்துவிட்டன 
                   

             பக்த சோமையா அணி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என ஒரு பக்கம் மார்தட்டினாலும், மற்றொருபுறம் செங்கோட்டை செல்வாக்கினால் தரேந்திர ரோடி சில்லரை எண்ணும் மிஷனில் மோசடி செய்துவிடுவார் என்று தீவரமாகக் குற்றம் சாட்டினர்.  

மேலும் 

                சில்லரை எணணும் மிஷனில் மோசடி செய்தாவது வெற்றி பெறுவோம் என தரேந்திர ரோடி அணியின் அடிமட்டத் தொண்டர்கள் ரகசியமாக மகிழந்தனர்.

           அமாரசாமி இருதலை கொள்ளி எறும்பானார்.  சில்லரை எண்ணும் மிஷின் மோசடி பற்றிய சர்ச்சைகள் அமாரசாமி வயிற்றில் புளியைக் கரைத்தன. தரேந்திர ரோடியின் செங்கோட்டை செல்வாக்கு உலகம் அறிந்தது தான் அதைவிட அச்சுறுத்தியது தரேந்திர ரோடியின் மனசாட்சியான சமித் தான்.  சமித் எடுத்த எந்தக் காரியத்தையும் எந்த விலை கொடுத்தேனும் அல்லது விலை கொடுக்காமல் கூட முடிப்பதில் வல்லவர், அவருடைய ரகசிய திட்டங்களை தரேந்திர ரோடியே ஊகிக்க முடியாது, அமாரசாமி என்ன செய்வார்?

           அதே சமயம் பரம்பரை பாதுஷா தாகுல் சாந்தி வகையினரும் லேசுப்பட்டவர்கள் அல்லர்.  இப்போது சில்லரை எண்ணும் மிஷன்களை இயக்கும் இன்ஜினியர்கள் எல்லாம் பரம்பரை பாதுஷா குடும்ப ஆட்சியிலும் வேலை பார்த்தவர்கள் தானே, அவர்களில் பலருக்கு ராஜ விசுவாசம் ரத்தில் ஒடிக்கொண்டுதானே இருக்கிறது.

      
              பக்த சோமையா அணிக்கும் படையூரப்பா  அணிக்குமிடையே கடுமையான போட்டி பிச்சை எடுப்பதில் மட்டுமல்ல, சில்லரை மிஷினை வைத்து மோசடி செய்வதிலும் சரியான போட்டடி என்பது அமாரசாமிக்கு புரிந்துவிட்டது.  இரண்டு பேரும் சில சில ஊர்களில் அவரவருக்கு வேண்டிய இன்ஜனியரை வைத்து மோசடி செய்தாலோ ஒருவரே மோசடி செய்தாலும் துண்டு விழப்போவது நம்முடைய கணக்கில் தான் என்பது அமாரசாமிக்கு தெளிவாகிவிட்டது.

             
               பக்த ராமையா அணிக்கும் அமாரசாமி அணிக்கும் நேரடிப் போட்டி இவர்களுக்கிடையே நடக்கும் இழுபறியில் அமாரசாமி அணி சிறிதளவு வெற்றி பெற்றாலும் அந்த அணி தான் நிதான் செளதா பரிசை நிர்ணயிக்கும் அணியாக இருக்கும் என  முன்று அணியினருக்கும்  திருவிழாவிற்கு முன்னரே வெட்டவெளிச்சமாகிவிட்டது  திருவிழா  நிபுணர்களும் அதனை ஆமோதித்தனர். 

                 தொங்கு நிதான் செளதா நிலை ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.  பக்த சோமையாவிற்கு நிலை மேலும் சிக்கலாகிவிட்டது.. திருவிழா போட்டி முடிவுகள் வெளிவந்த பிறகு அமாரசாமியிடம் நேரடியாக ஆதரவு கேட்டால் அவர் கைகேயி கேட்ட வரங்கள் கூனி கேட்காத வரங்களை எல்லாம் சேர்த்துக் கேட்பாரே, அதற்கு முன்னரே காய் நகர்த்திடுவிடுவோம் என முடிவு செய்தார்.   முதலில் அமாரசாமி படையூராப்பாவுடன் கூட்டணி சேராமலிருக்க ஒரு கட்டையைப் போடுவோம் என ஒரு போடு போட்டார் . அமாரசாமியின் அணியே தரேந்திரா ரோடியின் பினாமி அணி தான் என்று மற்றொரு  குற்றம் சாட்டை வீசினார்.

                     அமாரசாமிக்கு திறந்திருந்த இருவழிப் பாதை ஒருவழிப்பாதையாக சுருங்கிவிட்டது.  ஆனால் அவர் அதற்காகக் கவலைப்படவில்லை,  எதிர் தாக்குதலில் இறங்கினார்

         அமாரசாமி  அணி  படையூராப்பா அணியோடு கூட்டணி வைக்கலாமா?  வேண்டாமா? என முடிவெடுக்கும் முன்பு அதைக் கெடுக்கும் நோக்கில் பக்த சோமையா வேறு அமார சாமியை தரேந்திர ரோடியின் பினாமி அணி என்று குற்றம் சாட்டிவிட்டார்.  தரேந்திர ரோடியுடன் கூட்டணி சேர வேண்டி வந்தால், அதற்கு இடையூராக இருக்கும்  பினாமி அணி பழியை இப்போதே தீர்த்துவிட வேண்டும் என முடிவுக்கு வந்தார்.  போட்டாரே ஒரு போடு முடிவு எப்படி இருந்தாலும் சரி எக்காரணம் கொண்டும் பக்த சோமையா அணியோடு கூட்டணி இல்லை என்றார்.  

                   அமாரசாமியும் அவரது தந்தையாரும்  இதற்கு முன்னரும் சின்ன சீட்டாக இருந்தாலும் துருப்புச் சீட்டாக இருந்து கோட்டை கொடியேற்றிய அனுபவம் பெற்றவர்கள்.

                 அமாரசாமிக்கு எப்போதும் குழப்பத்தில் தான் எளிதாக மீன் பிடிக்கும் ராசி உண்டு.  என்ன தான் ராசி இருந்தாலும்  அணி சேர அணி மாற சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமே?

                 
                  இவையெல்லாம் சில்லரை எண்ணும் மிஷன் திறக்கப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்பு இருந்த நிலவரம். ஒரு நல்ல மூகூர்த்த நாளில் சில்லரை எண்ணும் மிஷினும் திறக்கப்பட்டது.

                    அப்புறம் என்ன நடந்தது?

........... தொடரும்

No comments:

Post a Comment