Thursday 3 May 2018

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?          
  //// **** ///// *** /////                           
                   







நகராட்சிப் பள்ளி நகராட்சியின் நெஞ்சை நிமிரச் செய்யும் பள்ளி என்ற தகுதியுடைய, தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பள்ளி, காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுள்ளவர் திரு. திக கலைமணி.  

                    அவர் சமுக வலைத் தளங்களில் என்னுடைய பல நண்பர்களின் நண்பர்.  அவ்வழியில் அவருடைய பல பதிவுகளைப் பார்த்திருக்கிறன். அவர் பெயரிலேயே தன் இயக்கத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருப்பவர்.  அவர் பதிவில் பிரச்சாரம் தூக்கலாக இருக்கும்.  ஒரு இயக்க வெளியீட்டின் வாசனையோடு இருக்கும்..அண்மையில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தது அதற்குப் பிறகு தான் முகநுாலில் நண்பர்கள் ஆனோம்.
                        
                    இராமநாதன் செட்டியார் பள்ளியால் ஏற்பட்ட நட்பு அவருடைய ஒரு முகநுால் பதிவால் முள்ளாய் தைக்கிறது.

                   மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  அடிப்படைத் தேவைகளுக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள போது இப்படி ஒரு திருவிழாவிற்காக தண்ணீரைத் திறந்து விடுவது இவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது போலும்.  அது குறித்து இவ்வாறு முகநுாலில் பதிவு செய்துள்ளார்::::::

""""குடிக்கவும், குண்டி கழுவவவும் தண்ணி இல்லையாம்! கள்ளழகருக்கு அனையை திறந்து விடுவான்களாம்."""" 

           இராமநாதன் செட்டியார் பள்ளியிலும் அடிப்படை வசதிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது.  அது குறித்து நகாராட்சியில் மேற்படி திக கலைமணி மற்றும் பலர் மனுக் கொடுத்துக்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு திரு திக கலைமணி பேட்டியும் கொடுத்துள்ளார்.   

                     அப்போது திரு திக கலைமணி எந்த நடையில் பேசினார்?  கள்ளழகர்  விழா பற்றி அவர் போட்ட பதிவின் நடையிலா?

                       ஏன் இராமநாதன் செட்டியார் பள்ளி பிரச்சனையில் ஒரு நயதக்க நாகரீக நடை? கள்ளழகர் விழா பற்றிய பதிவில் கொச்சை நடை?

                       அவருடைய நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? வெறுப்புணர்வை ஏற்படுத்துவதா?

                        1992 ஆம் ஆண்டில் மகாமகத்தில் முதல்வர் ஜெயாலலிதா அவர்களும் திருமதி சசிகலா அவர்களும் தீர்த்தமாடுவதற்காகச் செய்யப்பட்ட சிறப்பு ஏற்படாடுகளால் மிக மிகக் கொடுரமான நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின.   அதுவும் இந்து மதத்தால் வந்த வினை தான். அதைப் பற்றி என்ன பதிவை திரு திக கலைமணியும் அவரது இயக்கமும் போட்டார்கள்? இதைப் போல கொச்சையாகப் போட்டார்களா?

                       கள்ளழகர் விழாவைப் பற்றி எவ்வளவு கொச்சையான நடையில் வேண்டுமானாலும் அவர் பதிவு போடட்டும், அதற்கு முன்னர் மதுரையில் மட்டும் இந்துக் கோவில்களில் பேரில் ஏற்படுத்தப்பட்ட ஊருணிகளையும் குளங்களையும் பட்டடியிலிட்டுவிட்டு, அவற்றை எம்மத்தினரும் பயன்படுத்த வழிசெய்த உண்மையான மதச் சார்பின்மையைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு திரு திக கலைமணி தனது கொச்சை நடையைத் தொடரட்டும்.


                     நான் இந்து தான், இந்து மதத்தில் குறைகள் உள்ளன. இந்து மதத்திலுள்ள குறைகளைக் களைய ஒரு வழி பெரிய புராணமே, தவிர பெரியார் அல்ல.


                     பெரியாரும் தேவைப்படுகிறார்,  திராவிடர் கழகத்தின் கிளை இயக்கங்களிலுள்ள உள்ள குறைகளைக் களைய! 
 

1 comment:

  1. அண்மையில் நடைபெற்ற மகாமகத்தின்போது 30க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு நண்பர் மகாமகக்குளம் தண்ணீர், அசுத்தம் என்று ஆரம்பித்து நீண்ட பதிவிட்டிருந்தார். அவரவர்கள் எண்ணத்தில் பார்த்துக்கொள்ளட்டும். பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

    ReplyDelete