தருநாடகாவில்
நடந்தது என்ன? பகுதி
4
(பகுதி 3, 22.05.2018 அன்று
வெளியிடப்பட்டது)
-------- அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர் -------
அறிமுகப் படலம்
~~~~
~~~~~ ~~~~~
ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~
~~~~~ ~~~~~
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள்
யாவும் உண்மையே.
இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.
இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக
எழுதப்படவில்லை.
^^^^^
^^^^^ ^^^^^
இத்தொடரைப் படிக்க
வாசகர்கள்
ஒப்புக்கொள்ள
வேண்டிய நிபந்தனைகள்
~~~~
~~~~~ ~~~~~
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக
வைத்துக்கொள்வேன்.
இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம்
வழங்க மாட்டேன்
இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ
வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
^^^^^
^^^^^ ^^^^^
பகுதி 4
தருநாடக திருவிழா
முடிவுகள் சொல்ல
மிஷின்கள் வாய் திறந்தன!
முதல் சுற்றுக்களிலேயே
மெல்ல முணு முணுத்தன!
நடந்தது இருமுனைப் போட்டியல்ல!
மும்முனைப் போட்டி!!
^^^^^^ ^^^^^ ^^^^^ ^^^^
காவிரி வள்ளல் அமாரசாமி
குட்டி மீன் பட்டயத்தையும்
பாதுஷா தளபதி
பக்த சோமையா அணி
பெரிய மீன் பரிசையும்
செம்படைத் தளபதி
படையூராப்பா அணி
சுறா மீன் கோப்பையையும்
முறையே வென்றனர்!
^^^^^^ ^^^^^ ^^^^^ ^^^^
மக்களை மறைந்தனர்
மக்கள் பிரதிநிதிகளே
எல்லாம் ஆயினர்
அணிகளுக்குள் அணிகள்
சாதி சமய பேதங்கள்
பெருமிதமாயின மீசை முறுக்கின
தொடைக் கறிக் கோரி
பேரங்கள் அரங்கேறின
^^^^^^^ ^^^^^^^ ^^^^^^^^
குட்டி மீனைத் தேடி
பெரிய மீன் வந்தது
கை கட்டி நின்றது
சுறா மீனை ஓரங்கட்ட
^^^^^^^ ^^^^^^^ ^^^^^^^^
முடிசூட முனைந்த
வேளையில் தான்
சுறா மீனிற்குத் தெரிந்தது
சில துடுப்புகள் குறைந்தது
அதனை முட்டுக் கொடுக்க
ஒரு சிற்றணி தேவைப்பட்டது
^^^^^^^ ^^^^^^^ ^^^^^^^^
சிற்றணி சேர்க்க உள்ளுர் பூசாரி
ஒரு அவகசாசம் கொடுத்தார்
துலாக் கோல் சாமி ஒட்ட வெட்டினார்
சுறாமீன் விரைந்து பின் வாங்கியது !
பெரிய மீனின் கணக்குத் தப்பாயிற்று !!
^^^^^^^ ^^^^^^^ ^^^^^^^^
மணி முடியோ குட்டி மீனுக்கு
துடுப்புப் போடுவதோ பெரிய மீன்
அவசரக் கணக்கு! அதிசய முடிவல்ல !!
அரசியலில் இது சாதாரணம்! கூட்டணியில் ?
சகித்துத்தான் கொள்ளவேண்டும் !!
(என் பதிவு நிறைவடைகிறது ::
தருநாடகாவில் இதுவரை நடந்தது முன் தகுதித் தேர்வு தான், அதில் நடந்தை சொல்ல விழைந்தேன். அதனால் என் பதிவு இத்துடன் நிறைடைகிறது.
தருநாடகாவில் தன்னலவாதிகளின் வேடிக்கை விநோத ஆதாய விளையாட்டுக்கள் தொடரத் தான் செய்யும், இனிமேல் தான் பெரிய பரிசுத் தொகை SUPER LEAGUE சூடுபிடிக்கும்.)
நலந்தா செம்புலிங்கம்
23.05.2018