
கழிக்கக் கூடாது என்பதை பற்றி
விழிப்புணர்வு ஊர்வலமாம்.
தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் கைக்கு எட்டும் தொலைவில் தான் பேருந்து நிலையம் இருக்கிறது. அந்த பள்ளி மாணவர்களை வதக்கி நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தின் போதும் பேருந்து நிலையத்தினுள் இருந்த இலவசக் கழிப்பிறை சகிக்க முடியாதளவு அருவருப்பாக இருந்தது. கட்டணக் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் எந்த யோக குருவிடமும் பயிலாமலேயே மூச்சுப் பயிற்சியில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள். அந்த விழிப்புணர்வு நற்பணி நடந்து ஓரிரு ஆண்டுகளாகிவிட்ட பிறகு ஒரு "முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளது. இப்போது சும்மா பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலே மூச்சுப் பயிற்சியில் வல்லவர்களாகிவிடுவீர்கள், அந்தளவு பேருந்து நிலைய வாசலில் உள்ள கழிவு நீர் சாக்கடை அடைபட்டு துர்நாற்றம் குடலைப் பிரட்டி எடுக்கிறது. நிற்க இது தேவகோட்டையின் தனிச் சிறப்பு.
பொதுவாகவே பேருந்து நிலைய கழிப்பறைகள் குறைந்தபட்ச அளவு கூட தூய்மையாக இருப்பதில்லை, கட்டணக் கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை விட கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. பொது நிலவரமே இப்படி என்றால் உலகெங்கிலிருந்தும் பக்தர்கள் கூடும் திருவண்ணாமலையின் நிலை எப்படி இருக்கும்?
திருவண்ணாமலையில் இன்னொரு அத்துமீறல் சர்வ சாதாரணமாக நடக்கிறது, பெளர்ணமி கிரிவல நாளில் கட்டணம் வசூலிக் கூடாது என்ற தடை இருக்கின்ற போதிலும் பத்து ருபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது மக்களாகி நாம் ஒன்று அடாவடி கட்டணங்களை கொடுத்துவிடுகிறோம் அல்லது ஓரம்சாரம் சந்து பொந்துகளைத் தேடிப் போகிறோம் அல்லது இயற்கை உந்துதலை அடக்கிக் கொள்கிறோம்.
பொது சுகாரத்தை பாதிக்கும் இந்த முறைகேடுகளில் கடமை தவறுதல் சேவைக்குறைபாடு ஊழல் எல்லாம் சரிசமாகக் கலந்திருக்கிறது, ஏனோ பெரும்பாலான அதிகாரிகள் இவற்றைக் கண்டும் காணமல் இருந்துவிடுகிறார்கள்

உயரிய விருதுகள் என்றால்?

தேவக்கோட்டையில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான். ஆட்சியர் பாராட்டத்க்கவர்.
ReplyDelete