களைகட்டுகிறது கல்கத்தா !!
****
அன்று
பர்மா நகரத்தார்களின் கோட்டை
பன்னாட்டு அரிசி வணிகத்தில்
நகரத்தார் கொடி பட்டொளி வீசியது
கல்கத்தா படை வீடானது
****
அன்று
பர்மா நகரத்தார்களின் கோட்டை
பன்னாட்டு அரிசி வணிகத்தில்
நகரத்தார் கொடி பட்டொளி வீசியது
கல்கத்தா படை வீடானது
சிங்காரவேலர் கடைக்கண் பார்வையில் கல்கத்தா கைவசமாகும் |
அந்தப் படை வீட்டிலிருந்து
எழுந்தப் புனிதப் பணி
காசி விசுவநாதர் திருப்பணி
///
காலச் சுழற்சியில்
பர்மாவும் அரசி வணிகமும்
பழம் பெருமையாயிற்று
///
நம் மனமும்
காசியையும் கயாவையும்
தொழுது ஏற்றியது
கல்கத்தா சத்திரமும்
இறைப்பணிகளும்
தூரப் பார்வையிலேயே
தொடர்ந்தன
///
மேலாண்மைக் கழத்தின்
நன்முயற்சியால் கல்கத்தா
செந்நகர் வாழ் நகரத்தார் ஆதரவால்
புதிய அத்தியாயம்ஆரம்பமாகிறது
///
வங்கத் தலைநகரில்
சத்திரத்து சொத்துக்
காப்பு மீட்புப் பணிகளில்
அரைக் கிணறு தாண்டியுள்ளோம்
///
கூட்டுறவையும்
கூட்டு முயற்சியையும்
கோட்பாடாகவும்
செயல்படாகவும் கொண்ட
பெருமுயற்சி கைகூடும்
நல்ல நேரம் வந்துவிட்டது
கெட்டி மேளம் கேட்கிறது
///
ஹேவிளம்பி
பங்குனி உத்தரத்தில்
பால்க் குடம் காவடி
அபிக்ஷேக ஆராதனை
600 பேர் சங்கமம் என
களைகட்டுகிறது கல்கத்தா
சிங்கார வேலர் விழா
///
சொத்துக்களால் எங்கும்
சண்டை வரும் நாளில்
கல்கத்தாவில் சிக்கல் விலக
நகரத்தார் எழுச்சி காண்கிறோம்
சிங்கார வேலர் துணை !!
--- நலந்தா செம்புலிங்கம்
26.03.2018