வலைப் பின்னலால் சிலை வீழப் போவதில்லை!!
^^^^^^
////////// ^^^^^^ ////////// ^^^^^^
//////////
தொலைக்காட்சிகள் கால்பதிக்காத காலத்தில் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் ஒரு தூண் என்போம். பிறகு தொலைக் காட்சிகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதற்காக ஊடகங்கள் ஜனநாயத்தின் தூண் என்று விரித்துச் சொல்ல வேண்டியதாயிற்று. அடுத்த தொழில் நுட்ப வளர்ச்சியால் சமூக வலைத் தளங்களும் ஊடகங்களுள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாயின.இது மிகச் சிறந்த முன்னேற்றம். சமூக வலைத் தளங்கள் தோன்றுவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் நிறுவன ஊடகங்கள் மலைகளாகத் திகழ்ந்தன. அந்த மலைகளுக்கு நிகரான வலிமையைத் தனிமனிதனுக்குத் தந்தது சமூக வலைத் தளங்கள் தாம்.
இந்த முன்னேற்றத்தால் பல நன்மைகள் கை கூடினாலும்,மற்றோருபுறம் ஒரு பக்கச் சார்புச் செய்திகள், கருத்துருவாக்கம் போன்றவை சமூக வலைத் தளங்களால் பல்கிப் பெருகியிருக்கிறது. சமூக வலைத் தளங்களுக்கே உரிய ஆங்கிலக் கலைச் சொல்லில் சொல்ல வேண்டுமெனில், இந்தப் போக்கு வைரல் ஆகிறது. இப்பொழுது வைரலாகிக் கொண்டிருப்பது ஒற்றுமைச் சிலை என்ற பெயரில் சர்தார் படேலிற்கு எழுப்பப்பட்டிருக்கும் வரலாற்று நினைவுச் சின்னம்.
நாட்டில் எத்தனையோ கோடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க முடியாத நிலையில் 3000 கோடிக்கு சிலை தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். சிலை வளாகத்திற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்றும் சில புகார்களை வலைத் தளங்களில் வலம் வருகின்றன. இதைப் போன்ற நியாயமான கேள்விகளின் மேல் இந்த சிலை எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தால் அது வரவேற்கதக்கது தான். ஆனால் சிலை எதிர்ப்பு பிரச்சாரகர்கள் இவற்றை விரிக்கவில்லை. நில கையடப்படுத்தல் பற்றிய புகார்களை முன் வைப்பவர்கள் அது நர்மதை அணை தொடர்புடையா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. அடிப்படை வசதிகள் வழங்காத அரசு இவ்வளவு பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவதா? என மைய அரசைக் குறிவைத்துக்
குற்றம் சாட்டுபவர்கள் இது மாநில அரசு மக்கள் பங்களிப்போடு தனி வாரியத்தின் மூலம் செய்யும் பணி என்பதையே சொல்லமாட்டார்கள்.
பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், "70 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த படேலுக்குச் சிலையாம், காக்கைகளுக்கு எச்சமிட வசதியாக, அதற்கு 3000 கோடி விரையம்" என ஒருவர் பதிவு செய்கிறார், பலர் அந்தப் பதிவையே திரும்பத் திரும்ப பார்வர்டு செய்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் எழுப்பப்பட்டுள்ளது ஒற்றுமைச் சின்னம் எனும் மாபெரும் வளாகம், அருங்காட்சியகம் மலர் காட்சியகம், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட பல நோக்கு வரலாற்று நினைவுச் சின்னம்.. அதில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேல் சிலையும் ஒரு அங்கம். 3000 கோடி ரூபாய் செலவளித்தது ஒற்றைக் காட்சிப் பொருளுக்கு அல்ல.
அது, திடீரென மைய அரசு 3000 கோடி ரூபாய்க்கு ஒரு காசோலை நீட்ட, அதை வைத்துக் கொண்டு ஒரே நாளில் வானிலிருந்து குதித்த சிலையும் அல்ல.
இது குஜராத் மாநில அரசின் முன் முயற்சியில் எழுந்த வரலாற்றுச் சின்னம். அதுவும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது தொடங்கிய திட்டம்.
இந்தப் பிரம்மாண்ட சிலை எழுப்பத் தேவைப்பட்ட இரும்புக்காக ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்களது பழைய இரும்புக் கருவிகளை தங்களது பங்களிப்பாக அளித்த மாபெரும் மக்கள் இயக்கம்.
இது திட்டமிட்ட 42 மாதங்களில் நிறைவேற்றப்பட்டப் பணி, திட்டத்தலிருந்தது காலம் பொருள் பணம் எதிலும் சிறிதும் மீறாத அசாத்தியப் பணி. திட்டமிடுதலுக்கும், திட்டச் செயலாக்கலுக்கும் முன்னுதாரணமாக பணி.
இச்சிலையைப் பற்றி திட்டமிட்டே அவதூறு பரப்புகிறவர்களுக்கு நரேந்திர மோடி மீது, பாரதி ஜனதாக் கட்சி மீதும் எதிர்ப்பு இருக்கலாம். ஆனால் இந்த வலைப் பின்னலால் சிலை வீழப் போவதில்லை, இத்தகைய வலைப் பதிவர்களின் வட்டத்திற்குத் தான் இந்தச் சிலை வளாகத்தின் வரலாற்று முக்கியத்துவத்துவமும் பொறியியல் சாதனைகளும் நேர்த்தியான திட்டமிடலும் திட்டச் செயலாக்க நிர்வாக மேலாண்மையும்
இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
எந்த சமூக வலைத் தளங்கள் தகவல் பரிமாற்றத்தில் விடிவெள்ளியாகத் திகழ்கின்றனவோ அந்த சமூக வலைத் தளங்களிலேயே தகவல் இருட்டடிப்பு வெற்றிகரமாக அரங்கேறுவது. நிகரில்லாத நகை முரண்.
இதனை நன்றாக அறிந்த பேராசிரியர் ஒருவர், அந்த வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தின் படத்தோடு ஒரு சிலைக்கு 3000 கோடியா? என கேள்வி எழுப்புகிறார். இது ஒரு சிலை மட்டுமல்ல என இன்னொருவர்
எதிர்வினையாற்றிய பிறகு பா.ஜ.க படேலுக்கு சிலை எழுப்பும் காங்கிரஸ் நேருவிற்கு சிலை எழுப்பும் மாயாவதி யானைகளுக்கு சிலை எழுப்பினார்,
இங்கே சிலை அரசியல் தான் நடக்கிறது மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என விளக்கமளிக்கிறார்.
இதைவிட பச்சையான திசைதிருப்பலை ஒரு பெரியார் தொண்டர் புலனத்தில் மேற்கொண்டார்.
அவருடன் நான் புலனம் வழியாகவே வாதிட்டேன். அந்த உரையாடலை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.
இதைவிட பச்சையான திசைதிருப்பலை ஒரு பெரியார் தொண்டர் புலனத்தில் மேற்கொண்டார். அவருடன் நான் புலனம் வழியாகவே வாதிட்டேன். அந்த உரையாடலை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பெரியார் தொண்டர் படேல் சிலை, மல்லையா மோசடி, நிரவ் மோசடி ஆகியவற்றையும் இணைத்து மக்கள் வரிப் பணத்தில் விளையாடிய விளையாட்டு என புலனத்தில் ஒரு கருத்துப் படம் பதிவு செய்தார்.
யார் ஆட்சியில் என்று கேட்டேன்
கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சி என்றார்
வெளிப்படையாகச் சொல்லலாமே எனக் கேட்டேன்
மீண்டும் ஒரு கருத்துப்படம் அனுப்பினார்.
அந்தக் கருத்துப்படம் காங்கிரசு ஆட்சியில் சுதந்திரக் கிளியாக இருந்த ரிசர்வ வங்கி நீதித் துறை சி.பி.ஐ போன்ற அரசு அமைப்புகள் மோடி அரசில் கூண்டுக் கிளி ஆகிவிட்டதாக சித்தரித்தது
இந்த சுதந்திரக் கிளி கூண்டுக்கிளி கருத்துப் படத்திற்கும் மக்கள் வரிப் பண விளையாட்டிற்கும் என்ன தொடர்பு எனக் கேட்டேன்
அரசுப் பணத்தில் மக்களின் வரிப் பணமும் அடங்குமே என்றார்
யார் ஆட்சியில் மக்கள் வரிப் பண விளையாட்டு என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்கிறீர்கள் என்றேன்.
சுதந்திரக் கிளி கூண்டுக் கிளி இதற்காக அனுப்பப்பட்ட
தல்ல. நீங்கள் அதற்குத் தொடர்பு படுத்திக் கொண்டதற்கு நான் பொறுப்பல்ல. பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டது ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என அனைத்தையும் தான குறிக்கும் . மக்கள் நல அரசு என்ற பெயரில் மக்கள் விரோத அரசைத்தான் ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "அளவு" வேண்டுமானால் வேறுபடலாமே தவிர கொள்ளைகள் குறைவதில்லை. கூடு தல் தகவல் தங்களுக்குத தெரியுமானால் தெரிவிக்கலாம். ஏற்றுக் கொள்ளப்படும்.நீங்கள் அதற்குத் தொடர்பு படுத்திக் கொண்டதற்கு நான் பொறுப்பல்ல. பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டது ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என அனைத்தையும் தான குறிக்கும் . மக்கள் நல அரசு என்ற பெயரில் மக்கள் விரோத அரசைத்தான் ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "அளவு" வேண்டுமானால் வேறுபடலாமே தவிர கொள்ளைகள் குறைவதில்லை. கூடு தல் தகவல் தங்களுக்குத தெரியுமானால் தெரிவிக்கலாம். ஏற்றுக் கொள்ளப்படும். என்றார்.
சுதந்திரக் கிளி கூண்டுக்கிளி படப் பதிவு இதற்காக அனுப்பப்பட்டதல்ல
என்கிறீர்கள். ஆனால் நான் அந்தப் படப்பதிவின் மேற்குறிப்பாகக் கேள்வி கேட்டேன். என் கேள்விக்கு மேற்குறிப்பாக (தனியாக அல்ல மேற்குறிப்பாகவே) அரசுப் பணத்தில் மக்களின் வரிப்பணமும் அடங்கமே என பதிலளித்துள்ளீர்கள். இன்றைய மைய அரசின் மீது எனக்கு புகார் உண்டு, முக்கியமாக பெட்ரோல் விலை. ஆனால் ஆண்ட அரசு ஆளும் அரசு என ஒரே வகையில் வகைப்படுத்துவது பொறுத்தமற்றது. வாரக் கடனை வசூலிப்பதில் இந்த அரசின் IBC (Indian Bankruptcy
Code) சட்ட நடவடிக்கை கை மேல் பலனை அளித்து வருகிறது. எஸ்ஸார் குழுமம் மட்டும் 54000 கோடி (இது வரை வாரக் கடனாக இருந்த) கடனை திருப்பிச் செலுத்த முன் வந்ததுள்ளது. இந்த அரசையும் மல்லையாவிற்கும் நிரவ் மோடிக்கும் கடன் வழங்கிய காங்கிரசு அரசையும் எப்படி ஒரே தராசில் வைக்கிறீர்கள்? அதைவிடக் கொடுமை இந்த இரண்டு வாரக் கடன் மோசடிகளையும் பட்டேல் சிலையையும் ஒரு வகைப்படுத்துவது தான். மேலும்
அது குஜராத் மாநில அரசின் திட்டம். நரேந்திர மோடி முதல்வராகவும் மைய அரசில் காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்த போது தொடங்கிய திட்டம்.
. அது ஒரு சிலைமட்டுமல்ல, ஒரு வரலாற்று பெட்டகம், மிகப் பெரிய கட்டுமானம், அது வருவாய் ஈட்டக் கூடிய சுற்றுலாத் தலம். இதையும் வராக் கடன் மோசடிகளையும் ஒரே தராசில் வைப்பதில் ஒரு அணு அளவு கூட நாணயம் இல்லை என்பதோடு, தாங்களும் தெரிந்தே திசைதிருப்பவது எனக்கு வருத்தமளிக்கிறது
என்றேன்
அதற்கு,அவர் படேலின் புகழைப் பாட மோடி முன் வந்த து தான் மிகப்
பெரிய நாணயக்கேடு. ஏனென்றால் மோடி ஆர. எஸ். எஸ்.சின்வார்ப்பு. அந்த இயக்கம்பற்றி சிலை நாயகர் படேலின் கருத்தையும் கீழே உள்ள பதிவில் கொடுத்துள்ளேன். மோடியின் பொருளாதாராக் கொள்கை எவ்வளவு மோசமானது என்பதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் உட்படப் பலரும் தொடர்ந்து கண்டனக் கணைகளை வீசி வருகிறார்கள் நாடு சீரழிந்து வருவதை அச்சுதானந்தன் மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார் . எனவே அவரவர் கருத்து அவரவருக்கு. காலம் எது சரி என்பதை முடிவு செய்யும்! செய்யட்டும்.! என்றார்
இதற்கு
நான்,
சர்தார் படேலின் பெருமித அடையாளம் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து தான். அதற்குத் தான் ஒற்றுமையின் சின்னம் எழுப்பப்பட்டது. இதனை ஜின்னா எழுப்பியிருந்தாலும் அது படேலின் வெற்றி தானே தவிர ஜின்னாவின் நாணயக் கேடல்ல! நிற்க படேல் சிலையையும் வங்கி கடன் மோசடியாளர்களையும் ஒரே தராசில் வைக்கக் கூடாது என்ற கருத்து நீங்கள் இந்தப் பதிவிலும் மறுக்கவில்லை
என்று பதிலளித்தேன்
அதற்கு அவர்
படேல் சிலை வைக்கப்பட்டதில் உள்ள மோசடி பற்றியும் தான் செய்திகள் வந்து கொண்டுள்ளன!
நலந்தா செம்புலிங்கம்
06.11.2018