பட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்
^^^^^ ////// ^^^^^
////// ^^^^^ //////
இரண்டு
பட்டிமன்றங்கள்: ஒன்று முழுக்க முழுக்கக் கற்பனை,
இன்னொன்று முக்கால் பகுதி பெயர்மாற்றம்
செய்யப்பட்ட உண்மை
திருக்குறளின் அடிப்படையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர்
தனது அறிமுகவுரை இரண்டு அணியின் நான்கு சொற்பொழிவாளர்கள் பேச வேண்டியதையெல்லாம்
பேசிவிட்டார். அதற்கு மேலும் நடுவர் விட்டு வைத்த கருத்துக்களைச்
சொற்பொழிவாளர்கள் தேடிக் கண்டுபிடித்துப் பேசினார்கள்.
நடுவர் தீர்ப்பில் திருக்குறளையே
தொடாமல், அவருடைய குருநாதர் எப்படி சவால்களை
கை ஆள்வாரோ அதன்படியே தீர்ப்பு
வழங்குவதாகச் சொல்லி அதன்படியே தீர்ப்பு வழங்கினார்.
வாகனங்களை சாலையில் இடதுபுறமாகப் போக
வேண்டும். முன் செல்லும் வாகனங்களை,
பின் செல்லும் வாகனம் முந்த
வேண்டுமெனில் வலது புறமாகத் தான் முந்தவேண்டும்.
முன் சென்ற நீல நிற
வாகனம் வலதுபுறமாகவே சென்றது.
பின் வந்த மஞ்சள் நிற வாகனம் இடது
புறமாக செல்ல நீல நிற வாகன ஓட்டி அனுமதிக்கிறார் என மஞ்சள் நினைத்துக் கொண்டார். இடது புறமாக அவரை
முந்த முனைந்தார். ஆனால் நீல வாகனம் மஞ்சள் வாகனத்தை தடுத்துவிட்டது. மஞ்சள் வாகனம் தடுமாறிவிட்டது. இருவரும் நிதானமாக வேகத்தில்
இருந்ததால் எந்த விபத்து நேரவில்லை.
மஞ்சள் வாகனம் சாலைவிதியை மீறியதால்
விபத்து நேரும் என தான் அதிர்ந்துவிட்டதாக நீலவாகனம் குற்றம் சாட்டியது.
அவர் இடது புறம்
எனக்கு வழி விட்டதால் தான் நான் இடது புறம் வந்தேன் என்கிறது மஞ்சள் வாகனம். நான் வழி
விட்டாலும் வரக் கூடாது என்கிறது நீலவாகனம்
யார் மீது தவறு என ஒரு பட்டிமன்ற
நடுவரிடம் கேட்டோம்.
இருவர் மீதும் பிழை இருக்கிறது, ஒருவர் மீதும்
குற்றம் இல்லை. முதலில் பிழை செய்தவர் அந்தப் பிழையைத் தவிர்த்திருந்தால்
இரண்டாவது பிழை நடந்திருக்காது என நடுவர் தீர்ப்பளித்தார்.
நலந்தா செம்புலிங்கம்
12.11.2018
இப்போதெல்லாம் பட்டி மன்றம் என்பதானது நகைச்சுவை, திசை திருப்புதல், பார்வையாளர்களை மகிழ்வித்தல் என்ற நிலைகளில்தான் செல்கின்றன. பொருள் பொதிந்தவை என்ற நிலையில் விவாதிக்கப்படுபவை மிகவும் அரிதே.
ReplyDelete