Tuesday, 15 January 2019

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா!

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா!


பங்குனி உத்திரப் பெருவிழாவில் (2018) சிங்கார முருகேசருக்கு நகரத்தார் காவடிகள்

காசியில் நம் முன்னோர் வித்திட்ட ஆன்மீகப் பணிகள்  நமக்கு நாடெங்கும், உலகெங்கும் ஈடில்லா பெருமையை ஈட்டித் தருகிறது. இந்த நற்பணிக்கு வேராகத் திகழ்வது கல்கத்தாவில் நம் முன்னோர்களுக்கு சிங்கார  முருகேசர்  அருளால் அமைந்த செழிப்பான தொழில் தான். கல்கத்தாவில் வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிய நம் முன்னோர்கள் அதிலொரு பகுதியைக் கொண்டு காசியில் இறைப்பணியாற்ற விழைந்தனர்.  


                 அந்த கல்கத்தா மாநகரில் நம் முன்னோர்கள்  சிங்கார முருகேசர் கோயிலை எழுப்பியதோடு  பி்ரம்
மாண்டமான விடுதிகளையையும் கட்டினர்.  நமது விடுதியில் சில பகுதிகளில் வாடகைதாரர்கள் நமக்கு கட்டுபடாத நிலை இருக்கிறது.  கல்கத்தா சொத்துக்களை மீட்கவும் காக்கவும் வேண்டி சிங்கார வடிவேலருக்கு சென்ற ஆண்டு பங்குனி உத்தரத்தில் நாம் 41 காவடிகளும் 82 பால் குடங்களும் எடுத்தோம். சிங்கார வேலரின் பேரருளால் அண்மைக் காலமாக அந்நிலை மாறி நமக்கு சாதமான சூழல் ஏற்பட்டு வருகிறது.  

            செட்டி கப்பலுக்குச் செந்தூரன் துணை என்ற நன்மொழிக்கு ஏற்ப நமது காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தாவில் மேலும் பல முன்னேற்றங்களைப் பெற இந்த ஆண்டு நிறைய  காவடிகள் பாற்குடங்கள் எடுத்து சிங்கார முருகேசர் தாள் பணிவோம்.
               
            இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவிற்காக  (21.03.2019) காசிச் சத்திரத்தின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.  இது குறித்த காசிச் சத்திரத்தின் அறிவிப்பு:

           அனைவருக்கும் வணக்கம் நமது காசிச் சத்திரத்தின் சார்பில் வழக்கம் போல் பங்குனி உத்திரப்பெரு விழாவிற்காக கல்கத்தாவில் சிறப்பான ஏற்பாடுகளை  செய்துள்ளார்கள் .விழாவில் கலந்துகொள்ள வரும் நம்மவர்கள் 18.03.2019 சென்னையிலிருந்து கல்கத்தா வரும் ரயிலில் புறப்பட்டு 20.03.2019 காலை கல்கத்தா வந்து சேர்ந்து பின்பு 4 தினங்கள் அங்கு தங்கி 23.03.2019 பகல் அல்லது இரவு புறப்பட்டு வ.ரும் ரயிலில் புறப்பபட்டு நலமுடன் ஊர் திரும்பிவரலாம் . வருபவர்கள் யிலில் முன்பதிவு போகவர பதிவு செய்து கொண்டு பின்னர் காசி சத்திரத்துக்கு 04565220501 தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றார்கள்

நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349

15.01.2019

No comments:

Post a Comment