Monday, 21 January 2019

NCSL: A responsible quasi Government Body

NCSL: A responsible quasi Government Body

       In the age of social media, for every post, status, blog .. of yours, you can expect & get prompt "likes", comments, "shares" of course from your friends, kith & kin.  


    
     What kind of response you can expect for your email from a governmental/quasi-governmental body? That too when you are pointing out one of their lapses.
      
      You are bound to get a response at least for sake of it. Mostly it may be very delayed, evasive reply.

      But, the National Centre for School Leadership (established at National Institute of Educational Planning and Administration under the aegis of  Ministry of Human Resources Development, GOI) surprised me in two dimensions.

First Dimension
      Their promptness was in the measure of hours, not days.  I had sent a mail on 20.01.2019 Sunday at 9.40 pm.  Their office opens only the next day at 9.00 AM and got a reply at 10.42 AM.  That is in one hour and forty-two minutes.



Second Dimension
       NSCL is organizing an All India Conference of Outstanding and vibrant school heads.   This is a pioneering conference of school heads, basically, focus on the development of schools and students with a great focus on future requirements of this generation of students.  The conference will document the pathways of exemplary school heads and formulate a framework.  Only two School Heads from TN have been invited.  But Mr.Thennavan, The Head Master of 
Panchayat Union Elementary School of Madurai East  (Othakkadai) who has evolved as a celebrity by virtue of his innovative and successful School Leadership has not been invited to this conference.

         I had pointed out this lapse in my email.  My email was in English but my supportive evidence was mostly in Tamil. which the concerned persons do not know.  But on the basis of my email itself, they admitted and endorsed, my view and I shall quote:

    You have rightly pointed - how could we miss Mr. Thennavan , let me tell you, sir, its not just Mr Thennavan, we have rather missed many Thennavans across the country for want of efficient mechanism to reach out, for language barrier in many cases and for paucity of time and funds to actually bring all of them together.

  Now I see a ray of hope that the Government will not let down its responsibility in Education.

Nalanthaa Sembulingam
21.01.2019

   copy of my email and NCSL's reply follows

To 
The Head
NCSL. 
New Delhi

Dear Madam

       First of all, let me congratulate for the conceptualization of  CSL & it has enthused me a lot. even though I am not a direct stakeholder in any of the domains covering CSL.

        I am a Book Seller, Writer & Blogger.
         
        I write and blog as NALANTHAA SEMBULINGAM. My blog address is nalanthaa.blogspot.com

        I have written two books, the first book titled MACAULAY KALIVIL ERUNTHU MEEZHA THIRUKURALAE VAZHI (TO LIBERATE FROM MACAULAY EDUCATION, THIRUKURAL IS THE PATHWAY)  is a commentary on a High Court Judgement that directed State Government to include THIRU KURAL in school syllabus.  And many of my blogs highlight exemplary Government Schools.  

        I am very happy to note that one of the two participants from TN to National Conference for Leadership Pathways for School Improvement, is Mr Peter Raja, School Head of Ramanathan Chettiar Municipal High School, Karaikudi.  He is an exemplary leader and the school has made great strides under his leadership.  I have written eight blogs on that School.

          Today, I have also written a blog regarding CSL and the ensuing National Conference. (blog link: https://nalanthaa.blogspot.com/2019/01/blog-post_20.html)

         I bring to your kind attention another exemplary School Head, Mr Thennavan of Panchayat Union Elementary School of Madurai East Panchayat Union (also called OTHAK KADAI).  

            Mr Thennavan suits best for CSL. He is celebrated by all media. I have also written three blogs on his school.  He and His school have won many accolades.  He is much more than an efficient leader, great achiever. No need to say the student strength is surging.  He is also a visionary, indeed. PUTHIYA THALAI MURAI, a popular TV accoladed him as INNOVATIVE EDUCATOR.  In his award acceptance speech. he told

          "DO YOU WANT TO SEE  GOD, COME TO A PRIMARY SCHOOL, YOU CAN SEE FACES OF ALL GODS YOU WORSHIP"
that is his vision.
        Lady Doak College (established in 1948) an eminent and first women's' college of Madurai recently conducted an international seminar on INTERNATIONAL SERVICE LEARNING PROGRAMME 2018.  Eleven international Research scholar visited Mr Thennavan's school for field and case study.
       I really do not understand how you missed Mr Thennavan for this conference, which is organized to discover vibrant & outstanding Government Schools.

facebook id of Mr Thennavan: 

I am also attaching some pictures taken from his facebook.

                                                                                   with regards
                                                                              C. Jambulingam
                                                                  Mobile no. 9361410349

NCSL's reply:

Dear Nalanthaa ji,

This is Dr Kashyapi from NCSL and our Head of Department and mentors Prof. Diwan shared your mail with us. It is always enthusing to know that you are not alone on the journey and that there are many more to charge you up along the path.

I went through your blog post, FB page unfortunately for the first time my inability to read Tamil made me feel little discriminated. But I saw the NIEPA logo and could just guess all that had come in the aesthetic and ancient language. I really thank you for taking that initiative and leadership in your own way.

You have rightly pointed - how could we miss Mr. Thennavan , let me tell you, sir, its not just Mr Thennavan, we have rather missed many Thennavans across the country for want of efficient mechanism to reach out, for language barrier in many cases and for paucity of time and funds to actually bring all of them together.

We at NCSL, however, are making this an annual feature and would need the active support of writers, bloggers and enthusiasts like you to connect all the good across the country. Looking forward to active collaboration with many more Nalanthaa.

Sincere regards
kashyapi
--
Dr Kashyapi Awasthi
Assistant Professor
National Centre for School Leadership
National University of Educational Planning and Administration

Sunday, 20 January 2019

குழந்தைகள் கற்க! பள்ளிகள் சிறக்க!!


குழந்தைகள் கற்க!   பள்ளிகள் சிறக்க!!

      பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்றான் பாரதி. அந்தக் கோவில்களின் தலைமைப் பூசாரிகள் தலைமைப் பண்பு மிக்கவர்களாகத் திகழ்ந்தால் தான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேன்மையுறுவார்கள்.





 பக்தர்கள் மேன்மையுற்றால் தான் கோவில் மிளரும் எனக் கருதுகிறது NCSL எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற பள்ளித் தலைமைப் பண்பிற்கான தேசிய மையம் (National Centre for School Leadership).
           
          ஒவ்வொரு குழந்தையும் கற்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் சிறக்க வேண்டும்  (EVERY CHILD LEARN, EVERY SCHOOL EXCELS) என்பதே இந்த NCSL  அமைப்பின் குறிக்கோளாகும்.


     
             மைய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு 2012 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்றது.  பள்ளிகளை மாற்றத்திற்கான வாயிலாகக் கருதும் இவ்வமைப்பு,  அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது.  பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பை மேம்படுத்துவதன் மூலம் தான்  மாணவர்களை நாளைய சவால்களை எதிர்கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க முடியும் என்பதை NCSL அமைப்பு செயல் திட்டமாக வரித்துக் கொண்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி பல பணிகள் ஆற்றி வருகிறது.

           அந்த வகையில் இந்த NCSL  அமைப்பு, பள்ளித் தலைமை - பண்பைக் கொண்டாடுவோம் (CELEBRATING SCHOOL LEADERSHIP) என்றொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  அத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முன்மாதரியான மாநாட்டினை, முதல் முறையாக புது தில்லியில்  2019, ஜனவரி 22 -24 தேதிகளில் நடத்தவுள்ளது.

          வரையறுக்கப்பட்ட கடமைகளுக்கு அப்பாற்பட்டு  அர்ப்பணிப்புணர்வோடு கடுமையாகவும் தொடர்ந்து உழைக்கும் தலைமை ஆசிரியர்களின் பள்ளிகள் தான் முன்னுதாரணமான பள்ளிகளாகத் திகழும்.  அத்தகைய தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளை எழுத்திலும் மின்னூடகங்களிலும் ஆவணப்படுத்துவதற்காகவே இந்த மாநாடு கூட்டப்படுகிறது.  இந்த அகில இந்திய  மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து இரண்டு தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

        காரைக்குடிக்கார்களின் எதிர்பார்ப்பு சரி தான்.  

        பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, காலடி கடற்கரை மணலாக அரித்துக் கொண்டு போகும் காலத்தில்,  ஆறே ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை ஆறுமடங்கு  உயர்த்திய காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா இல்லாமலா முன்னுதாரணப் பள்ளி மாநாடு?

       மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இன்னொருவர் கும்பகோணம் வட்டம் முத்துப் பிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசரியர் திருமதி சாந்தி.  இப்பள்ளி, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பொது அறிவு நிலையிலும் கணித்திலும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வெற்றி கண்டுவருகிறது.  எட்டடாம் வகுப்பு மாணவர்கள் எட்டு இலக்க வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கு எளிதாக விடை காண்பர். உலக நாடு வரைபடங்கள், 180 நாடுகளின் பெயர்கள், வரைபட குறிப்புகள் போன்றவற்றில் தேர்ச்சி மிக்க மூன்று மாணவர்கள் அவற்றில்  உலக சாதன படைத்துள்ளனர்.  இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை  பள்ளியின்  கட்டடிட நிலைகளால் இப்பள்ளிக்கு மக்கள் வேடிக்கையாக ஒட்டைப் பள்ளி  எனப் பெயர் வைத்துவிட்டனர். சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றியத்தினர்  பெற்றோர்கள் மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஒட்டைப் பள்ளி ஒப்பற்ற  பள்ளி ஆகிவிட்டது என்கிறார் தலைமை ஆசிரியர் திருமதி சாந்தி.

        இந்த முன்னுதாரணப் பள்ளி மாநாட்டிற்கு ஒரு மாநிலத்திற்கு எத்தனை பிரதிநிதிகள் என்பது குறித்து வரையறை உள்ளதா என்பதை NCSL இணைதளத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஒரு வேளை இரண்டு பிரதிநிதிகள் என வரையறை இருந்தாலும் மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைக்   கருத்தில் கொண்டு விதிவிலக்காக தமிழகத்திலிருந்து மூன்று பிரதிநிதிகளை அழைத்திருக்கலாம்.

       இந்த அகில இந்திய முன்னுதார பள்ளித் தலைமை ஆசிரியர் மாநாடு ஒரு பள்ளியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கக் கூடுகிறது.
தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!  https://nalanthaa.blogspot.com/2018/09/blog-post_4.html   

ஆனால் ஒரு பள்ளியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டுமென்பதற்கு இலக்கியமாகத்  திகழ்பவரும் அனைத்து ஊடகங்களாலும் பாராட்டப்பட்டவருமான மதுரை ஒத்தக் கடை ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் ஏனோ தில்லியின் கண்ணில்படவில்லை. இழப்பு மதுரைக்கு அல்ல, தில்லிக்குத் தான்!

நலந்தா செம்புலிங்கம்
20.01.2019

  



         
             
        

               
    
        


  
        

    



            
     
       

        

Friday, 18 January 2019

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா! (.... காணோலியில்)

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா!   (.... காணோலியில்)
https://youtu.be/ZbcKgcasGps

Tuesday, 15 January 2019

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா!

காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா!


பங்குனி உத்திரப் பெருவிழாவில் (2018) சிங்கார முருகேசருக்கு நகரத்தார் காவடிகள்

காசியில் நம் முன்னோர் வித்திட்ட ஆன்மீகப் பணிகள்  நமக்கு நாடெங்கும், உலகெங்கும் ஈடில்லா பெருமையை ஈட்டித் தருகிறது. இந்த நற்பணிக்கு வேராகத் திகழ்வது கல்கத்தாவில் நம் முன்னோர்களுக்கு சிங்கார  முருகேசர்  அருளால் அமைந்த செழிப்பான தொழில் தான். கல்கத்தாவில் வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிய நம் முன்னோர்கள் அதிலொரு பகுதியைக் கொண்டு காசியில் இறைப்பணியாற்ற விழைந்தனர்.  


                 அந்த கல்கத்தா மாநகரில் நம் முன்னோர்கள்  சிங்கார முருகேசர் கோயிலை எழுப்பியதோடு  பி்ரம்
மாண்டமான விடுதிகளையையும் கட்டினர்.  நமது விடுதியில் சில பகுதிகளில் வாடகைதாரர்கள் நமக்கு கட்டுபடாத நிலை இருக்கிறது.  கல்கத்தா சொத்துக்களை மீட்கவும் காக்கவும் வேண்டி சிங்கார வடிவேலருக்கு சென்ற ஆண்டு பங்குனி உத்தரத்தில் நாம் 41 காவடிகளும் 82 பால் குடங்களும் எடுத்தோம். சிங்கார வேலரின் பேரருளால் அண்மைக் காலமாக அந்நிலை மாறி நமக்கு சாதமான சூழல் ஏற்பட்டு வருகிறது.  

            செட்டி கப்பலுக்குச் செந்தூரன் துணை என்ற நன்மொழிக்கு ஏற்ப நமது காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தாவில் மேலும் பல முன்னேற்றங்களைப் பெற இந்த ஆண்டு நிறைய  காவடிகள் பாற்குடங்கள் எடுத்து சிங்கார முருகேசர் தாள் பணிவோம்.
               
            இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவிற்காக  (21.03.2019) காசிச் சத்திரத்தின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.  இது குறித்த காசிச் சத்திரத்தின் அறிவிப்பு:

           அனைவருக்கும் வணக்கம் நமது காசிச் சத்திரத்தின் சார்பில் வழக்கம் போல் பங்குனி உத்திரப்பெரு விழாவிற்காக கல்கத்தாவில் சிறப்பான ஏற்பாடுகளை  செய்துள்ளார்கள் .விழாவில் கலந்துகொள்ள வரும் நம்மவர்கள் 18.03.2019 சென்னையிலிருந்து கல்கத்தா வரும் ரயிலில் புறப்பட்டு 20.03.2019 காலை கல்கத்தா வந்து சேர்ந்து பின்பு 4 தினங்கள் அங்கு தங்கி 23.03.2019 பகல் அல்லது இரவு புறப்பட்டு வ.ரும் ரயிலில் புறப்பபட்டு நலமுடன் ஊர் திரும்பிவரலாம் . வருபவர்கள் யிலில் முன்பதிவு போகவர பதிவு செய்து கொண்டு பின்னர் காசி சத்திரத்துக்கு 04565220501 தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றார்கள்

நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349

15.01.2019