விரைவில் மலரும்!
1. பதவி 2. பணி 3. பொறுப்பு
இந்த சொற்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை தாம். எனினும்
மூன்று சொற்களில் முதல் சொல்லிற்கு ஆசைப்படாதவர்களைக்
காண்பது அரிது. இரண்டாவது சொல்லை முழுமையாக ஆற்று
பவர்களைக் காண்பது மிக அரிது. மூன்றாவது சொல்லின்
பொருளுணர்ந்து கடமையாற்றுபவர்களைக் காண்பது மிக மிக
அரிது.

அரிதிலும் அரிதாக தகுதியால் ஒருவர் அடைந்த பதவியில்
முழுமையாகப் பணியாற்றிவதோடு பொறுப்போடு கடமை
யாற்றினால் என்னவெல்லாமே நடக்கும். சாதனைகள் எல்லாம்
சாதாரணமாகும்!

ஒரு மாவட்டக் கல்வி அலுவலரின் முக்கிய பணிகள் தமது
மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்
செயல்பாடுகளை ஆய்வு செய்வது, அரசு உதவி பெறும் பள்ளி
களுக்கான சம்பள அலுவலராகப் பணியாற்றுவது, மாணவர்
களுக்கான அரசின் நல உதவித் திட்டங்களைச் செயல்படுத்து
வதுமாகும்.
தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அ. மாரிமுத்து இந்தப்
பணிகளுக்கு அப்பாலும் பொறுப்போடு பணியாற்றி முத்திரை
பதித்துள்ளார். அந்தப் பொறுப்பு என்பது கூடுதலான அக்கறை தான்.
கூடுதலான அக்கறை என்பது தமது நிர்வாகத்திற்குட்பட்ட
பள்ளிகளை நினைந்தூட்டும் தாயைப் போலப் பேணிக் காப்பது தான்.

தேவகோட்டை கல்வி மாவட்டம் உள்ளிட்ட சிவகங்கை
வருவாய் மாவட்டம் 2017 - 18 ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில்
சிவகங்கைமாவட்டம் 98.5 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதல் மாவட்டம்
எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

பத்தாயிரம் பணியிடங்களுக்கு நடைபெறும் போட்டித்
தேர்வுகளில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதும் காலத்தில தமிழகத்தில்
இருக்கும் 32 மாவட்டம் இதில் முதல் மாவட்டம் என்பது பெரிய
சாதனையா? என சிலர் கேட்கலாம்.

அந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களைவிடவும்
இந்தக் கல்வித் தேர்வில் சிவகங்கை கல்வி மாவட்டம் பெற்ற வெற்றி
பெரிய சாதனை தான். இதை மற்ற மாவட்டங்கள் ஒப்புக் கொள்ளும்,
ஏனென்றால் அந்த முதலிடத்தை ஒரே மாவட்டமே தொடர்ந்து 27
ஆண்டுகள் வென்றுவந்தது. அதனால் அந்த முதலிடம் மற்ற 31
மாவட்டங்களின் கனவு எல்லைக்கு அப்பாலேயே இருந்து வந்தது.

சிவகங்கை மாவட்டம் இந்த சாதனை நிகழ்த்திய போது இந்த
வருவாய் மாவட்டத்திற்கு உட்பட தேவகோட்டை கல்வி மாவட்டத்தின்
மாவட்ட கல்வி அலுவலராகத் திகழும் அ. மாரிமுத்துவின் முந்தைய
சாதனைகளும் ஈடுபாடும் அந்த சாதனையை விட வியப்பாக
இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்திலுள்ள அரசுப் பள்ளியில்
சுமார் 7 ஆண்டு காலம் இவர் ஆசரியராகப் பணியாற்றிய போது
மாணவர் எண்ணிக்கை 600 யிலிருந்து 1200 ஆக உயர்ந்துள்ளது.

பின்னர் இவர் புதுக்கோட்டை மாவட்டம் சூரியரில் சுமார்
இரண்டாண்டுகள் பணியாற்றிய போது மாணவர் எண்ணிக்கை 200
யிலிருந்து 400 ஆக உயர்ந்ததோடு உயர்நிலைப் பள்ளியாக இருந்த
அப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயரவும் பாடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதியில் இவருடைய
தலைமை ஆசிரியப் பணி ஒரு காப்பியப் பணியாகவே திகழ்ந்
திருக்கிறது. பொதுத் தேர்வு சற்று முந்திய பிப்ரவரி மார்ச்சு
மாதங்களில் மாணவர்கள் இரவு நேரம் படிப்பதற்கும் ஏற்பாடு
செய்ததோடு, இவர் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்து
பவர்களைப் போல காவி வேட்டி உடுத்தி மாணவர்களின் வெற்றிக்காக
நோன்பிருந்திருக்கிறார். மற்றொரு புறம் மாணவர்களுக்கு
சிலம்பம் காரேத்தே பயிற்சி அளித்திற்கிறார். சாரணர்
ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்ந்து அப்பள்ளி மாணவர்களின்
கல்விக்கு அப்பாற்பட்டபன் முக ஆற்றல்களை வளர்க்க
உறுதுணையாக நின்றிருக்கிறார்.

அதே நேரம் இவரது ஈடுபாடுமிக்க பணி அந்தப் பள்ளியோடு
நின்றுவிட வில்லை, கூடுதலாக மூன்று பொறுப்புகளையும் ஏற்றுப்
பணியாற்றி
யுள்ளார்.

முன்னுதாரணமான கல்வியாளரான திரு அ மாரிமுத்து புதுக்
கோட்டை மாவட்டம் மணவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில்
தலைமையாசிரியராகப் பணியாற்றிய 2009 முதல் 2016 வரையிலான
காலத்தில் புதுக்கோட்டை நகர் காமராசரபுரம் அரசு மேல்நிலைப்
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசரியராகவும் புதுக்கோட்டை
மாவட்டத்தின் இரண்டு கல்வி அலுவலர்களுக்கு நேர் முக உதவி
யாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே
நேரத்தில் நான்கு பணிகளை ஆற்றியுள்ளார்.
இதுவரை இவர் வகித்த பதவிகளைப் பார்த்தோம். அவற்றில்
இவர் வரையறுத்த பணிக்கு அப்பாற்பட்டு மாணவர் நலன்கருதி
பாடுபட்டதையும் பார்த்தோம். ஒரே நேரத்தில் நான்கு பணிகளை
ஏற்றதையும் பார்த்தோம்.
நினைந்தூட்டும் தாயென இவர் ஒரு அரசுப் பள்ளியை பேணிக்
காத்தும் வரலாறு படைத்துள்ளார். அந்நிகழ்வைக் கேள்விப்பட்ட போது
இவர் ஒரு அரசு அலுவலர் தானா? காந்தி காலத்து சுதந்திரப் போராட்ட
வீரரா? என்ற ஐயமே எழுந்தது.

ஒரு அரசு அலுவலரே (கல்வித் துறை சாராத அரசு அலுவலர்) ஒரு
முன்னுதாரணமான அரசுப் பள்ளிக்கு பல இடையூறுகளை அளித்து
வந்தார்.மாவட்டக் கல்வி அலுவலரான திரு அ. மாரிமுத்து இடையூறு
அளித்து வந்த அந்த அரசு அலுவலரை நேருக்கு நேர் “இது என் பள்ளி,
என் அனுமதி இல்லாமல் எப்படி நுழைந்தீர்கள்? என்று கண்டித்தார்.

காலில் முள் குத்தினால் கண்ணில் நீர் சுரக்க வேண்டும், அப்படி
சுரந்தால் தான் கண்ணும் காலும் ஒரு உயிரின் அங்கமாகும். அடிக்
கோடிட்டுச் சொல்கிறேன் ஒரு உடலின் அங்கமல்ல, உயிரின் அங்கமாகும்.

பெரும்பாலான அரசு நிறுவனங்கள் உயர்அதிகாரிகளின் கண்டும்
காணாத போக்கினாலோ சுயநல போக்கினாலோ தான் சீரழிகின்றன.

உயர் அதிகாரிகளின் பொறுப்பின்மையும் அக்கறையின்மையும்
அரசு இயந்திரத்தின் உள்ளிருந்து அரித்துக் குடையும் புற்று நோயாகும்.
அந்நோயை வேரறுக்கும் வீரராகத் திகழும் தேவகோட்டை மாவட்ட கல்வி
அலுவலர் அ, மாரிமுத்து தேனி மாவட்டத்தின் முதன்மைக் கல்வி
அலுவலராக பணி உயர்வு பெறும் இந்நாள் (09.07.2018) கல்வித் துறைக்கு
மட்டுமல்ல சமூத்திற்கே நன்னாளாகும். ஆனால் இன்னும் நூறு
மாரிமுத்துக்களாவது உருவானால் தான் மக்கள் கல்வி முழு
வெற்றியடையும். அன்று தான் காமராசர் மனம் குளிர்வார்.
காமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரட்டும்.

நலந்தா செம்புலிங்கம்
09.07.2018
பாராலிம்பிக் மாரிமுத்து போல பாரம் அதிகம் சுமந்து முதன்மைக் கல்வி அலுவலர் என்னும் பதவிக்கு அழகு சேர்க்கும் மாரிமுத்து பற்றிய செய்திகளை ஊடகங்கள் பெரிய அளவில் வெளிச்சம் வேண்டும்
ReplyDeleteசபா
Deleteஇவரை போன்ற சேவை மனப்பான்மை உடைய நல்லவர்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது பாராட்டுக்குரியது நன்றி
ReplyDelete