நானும் பாரதிராஜாவின் ரசிகன் தான். ஆனால், மன்றத்தில் சேராத போட்டோ எடுத்துக் கொள்ளவோ ஆட்டோகிராப் வாங்கவோ தவிக்காத கலைரசிகன்.
பாரதிராஜா தமிழ் திரையுலகை ஒரு படி உயர்த்தியவர் என்ற பறைசாற்றியவன் தான். பாலச்சந்தரையும் ஸ்ரீதரையும் விஞ்சிய தமிழன் பாரதிராஜா எனப் பெருமிதம் அடைந்தவன் தான். அது, மனிதனை அவனது தாய்மொழி வழியாக இனம் காணக் கூடாது சாதியின் வழியாகத் தான் இனம் காணவேண்டும் என்ற கோட்பாட்டடிற்கு உடன்பட்ட காலம்.
அந்தக் கோட்பாட்டிலிருந்து விடுபட்ட பிறகும் பாரதிராஜாவே எனக்கு சிறந்த இயக்குனராகத் திகழ்ந்தார். இதனால் அவரை ஒரு தமிழன் என்பதற்காக மட்டுமல்லாது சிறந்த இயக்குனர் என்பதற்காக ரசிகப்பதாகவும் உணர்ந்தேன். இந்த பரிணாம வளர்ச்சி தான் பாரதிராஜாவிற்கும் மிகப் பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.
பாரதி ராஜா, அவரை அவரது படைப்புகள் வழியாகப் பார்த்துப் பாராட்டிய ஒரு ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.
வைரமுத்து அவர்களுக்கு இது முதல் சர்ச்சை அல்ல. வெளிப்படையாக சுயசரிதம் எழுதிய கவிஞர் கண்ணதாசனின் தனிவாழ்க்கையைப் பற்றி அவரது காலமாகி பல்லாண்டு கழித்து கண்ணதாசனுக்காக எடுக்கப்படும் விழாக்களில் பேசி சுகம் கண்டவர் தான். தமிழிற்குச் சோறு போடுவதாக பேசியவர் தான்.
இந்த சர்ச்சைக்குரிய வைரமுத்துவின் பேச்சுக்கு கட்டுரைக்கு தளம் கொடுத்த தினமணியே வருத்தம் தெரிவித்த பிறகு வைரமுத்துக்காக வைரமுத்துவே சப்பைக்கட்டு கட்டினாலும் எடுபடாது.
பாரதிராஜா, அவருடைய கரகரப்பான முன்னுரை பின்னுரைகளுக்காக திரையரங்குகளுக்கு முன் சென்று பின் எழுந்த ஒரு ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார். அவர் புதிதாகப் படம் எடுக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை ஆனால் பழைய படங்களைக் கூட பழைய மாதிரி ரசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துவிட்டது.
மற்றொரு புறம் நான் ஒரு சைவன் தான், இந்து என்பது அரசு ஆவணங்களுக்கு மட்டுமே என்ற என்னுடைய நிலைப்பாட்டையும் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கூட்டணி போட்டு தகர்த்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment