ஐயகோ இது காமராசா் நாடா?
ஒரு சாமானியனின் மகள்
ஊராட்சிப் பள்ளி மாணவி பிரத்திகா
தன் இசை மழையாலும்,
இணைய உலகின்
வாக்கு மழையாலும்,
இன்று அவள் பள்ளி
உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ,
அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
அவை யாரும் தேடாத
சவலைப் பிள்ளைகளாகும் !
பகட்டும் படாடோபமும்
பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
மற்றொரு பக்கம் மதிப்பெண் மயக்கம்
பிள்ளைகளைக் காவு கேட்கும் !
ஐயகோ
இது காமராசா் நாடா?
சுயநிதி முதலாளிகளின்
வேட்டைக் காடா?
இது என்னுடய உலகம் அறிந்த ஊராட்சி பள்ளி என்ற என்னுடைய முந்தைய பதிவின் ஒரு பகுதி. அப்பதிவினைப் பாாக்க என் வலைப்பக்கத்திற்கு வருக http://nalanthaa.blogspot.com/2017/06/blog-post_24.html
இது என்னுடய உலகம் அறிந்த ஊராட்சி பள்ளி என்ற என்னுடைய முந்தைய பதிவின் ஒரு பகுதி. அப்பதிவினைப் பாாக்க என் வலைப்பக்கத்திற்கு வருக http://nalanthaa.blogspot.com/2017/06/blog-post_24.html