பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்
------------------------------ ---
உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !
இது பாலச்சந்தா் படமல்ல!
பாலு மகேந்திரா படமுமல்ல!!
பா ரீசில் நடக்கும்
கதையல்ல நிஜம்!
பிரான்சின் இளைய தலைவனுக்குச்
சொந்தப் பிள்ளையில்லை!எனினும்
அவன் வயதிலேயே மகளுண்டு!
ஏழு பேரன் பேத்தியா் உண்டு!!
பள்ளி நாட்களில்
நாடகங்களில் நடித்தான்!
காதல் வயப்பட்டான்!
24 வயது மூத்த
நாடக ஆசிாியை மீதே!! அவளிடமே
வாய்விட்டும் சொன்னான்.
அந்த ஆசிாியைக்குக்
கோபம் கொப்பளிக்கவில்லை!
சிாித்துத் தீா்த்தாள்!!
சலித்துப் போய்
ஒருநாள் தெளிவான்!
என்றும் நம்பினாள்
அந்தப் ' புாியாத பித்தை '
மறக்கடிக்கத் தம் பிள்ளையை
வெளியூருக்கு அனுப்பினா் பெற்றோா்
மன்றாடி மன்றாடி
அவள் மனம் வென்றான்
இரண்டாண்டுகளில்
அறிவு உணர்ச்சிக்கு
வழிவிட்டு விலகியது!
இது காதலில் புதிதல்ல!!
ஆனால் அவள் சொல்கிறாள்
அவன் அறிவுச் சுடரை
மறுதலிக்க முடியாது
மனம் ஒப்பினேன்
ஈரெழு ஆண்டுகட்குப் பின்னா்
திருமணம் பூண்டனா்!!
ஈரைந்து ஆண்டுகளாய்
பிரியாமல் இருக்கின்றனா்!
ஐரோப்பிய அதிசயம்!
தோ்தல் களத்தில் பரப்புரைகளில்
மனைவி ஆசிாியா் ஆகிவிட்டாா்
பாடம் நடத்தியிருக்கிறாா்!
பயிற்சி கொடுத்திருக்கிறாா்!!
அவா் துணையின்றி நான்
அதிபா் ஆகியிருக்க மாட்டேன்!
இது சொல் நன்றி!
அதிபா் சொல்கிறாா் அரண்மனையின்
முதல் பெண்மணியாக மட்டுமல்ல
பொறுப்புள்ள பதவியும் பெறுவாா்!
இது செயல் நன்றி!!
வெற்றிக்கு முன்னா் தோ்தல் களத்திலும்
வெற்றியைத் தலைமேல் வைத்துக்
கொண்டாடும் இணையத்திலும்
இந்த இணையருக்கு
எக்கச்சக்க ஆதரவு!!
இது ஒரு புதுமாதாி சமத்துவம்;
இது,வினோத உறவுகளில்,
ஆண் பெண் பேதத்தை
முறியடித்து விட்டதாம்.
இந்த நியாயத்திற்கு அப்பாலும்
ஒரு நெருடல் இருக்கிறது
அமைதியான நதியில் ஓடிய
பிரிஜிட் ஆஸ்டொ் * திருமண ஓடம்
மாயமானது என்ன நியாயம்?
------------------------------ ------------------------------ ------------------------------ ---------
குறிப்பு :
ஆஸ்டொ் * =பிாிஜிட் மாக்ரோனின் முதல் கணவா். இவா்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இருந்ததாகத் தொியவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டுத் தான் பரிஜிட் தனது முன்னாள் மாணவரான மாக்ரோனை 2007இல் திருமணம் செய்துகொண்டாா்
No comments:
Post a Comment