கலாம் போட்ட வித்து
--நலந்தா செம்பு லிங்கம்
அவன் போட்ட வித்து!
இந்த இளைஞா்கள்
எல்லாம்
அப்துல் கலாம் போட்ட வித்து!
கூடினாா்கள்! கூடினாா்கள் !!
நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில்
லட்சக் கணக்கில் கூடினாா்கள்!
அரசியல் கட்சிகளைப் போல
கூட்டப்படவில்லை
அரசியல் கட்சிகளைப் போல
அதிகாலை 11 முதல் 5 வரை
ஆராவார ஆா்ப்பட்டமுமில்லை
விடிய விடிய ஆா்ப்பாட்டம்
மின்மிகை மாநிலத்தில்
மின்சாரம் தலைமறைவான போதும்
மெழுகுவா்த்தி ஏற்றிப் போரட்டம்
இளஞா்களோடு இளம் பெண்கள்
பெண்களுக்கு நிகராய்
பொறுப்போடு ஆண்கள்
வீறுகொண்ட போரட்டத்தின்
வெற்றி ரகசியம் இதுதான்
கொட்டும் பனியில்
பச்சிளம் குழந்தைகளோடு
இளம் தமிழச்சி ஒருத்தி
பாலோடு வீரமும்
ஊட்டிக் கொண்டிருந்தாள்
ஜல்லிக்கட்டடுக்ககாகத் தான்
கூடினாா்கள்
நதி நீா் இணைப்பையும் யோசி்த்தாா்கள்
காவோி வாாியம் கட்டாயம் என்றாா்கள்
உழவனின் உயிருக்கு
உத்திரவாதமும் கேட்டாா்கள்
எல்லாம்
எழுச்சிச் சிந்தனை
அரசியல் நிந்தனை
அறவே இல்லை
கலாம் கனவு கைகூடும்
சின்னப் பெண்ணொருத்தி
சபதம் செய்தாள்
தமிழகத்தின்
தலைவிதியை மாற்றும்
போராாட்டத்திற்கு
தலைவனோ தலைவியோ
இல்லையாமே?
நம்பமாட்டேன்
சத்தியமாய் நம்பமாட்டேன்
எல்லாம்
அவன் போட்ட வித்து
இந்த இளைஞா்கள்
எல்லாம்
அப்துல் கலாம் போட்ட வித்து
No comments:
Post a Comment