Saturday 3 June 2017

பிரம்படி பட்ட பரமசிவனும் தழும்பேறிய தி, நகரும் !!

பொறுப்பில்லாத நிா்வாகம்
பொறுப்பில்லாத வணிகம்
தீயின் மடியில் தி நகா்     
         
அரைகுறையாய் தணியவே ஒரு
முழுநாளுக்கும் மேலாகிவிட்டது
எாிந்து எலும்புக் கூடானதை
இடித்துத் தள்ள இன்னும் 
மூன்று நாட்களாகுமாம்


6 விமானநிலையங்களில் கடைகள்
15 ஊா்களில் 17 கிளைகள்
ஒவ்வொன்றும்  ஆறு ஏழு மாடிகள்
லட்சம் சதுரடி பெருமிதங்கள்
ஆனால் ஜன்னல் என்பதே கிடையாதாம்










சமூக வலைத் தளங்களில்
எக்கசக்கக் கேள்விகள்

நேரங் கெட்ட நேரத்தில்
கேள்விகள் எழுப்புவது நியாயமில்லையாம்
                                                                    தொழில் தோழமை பாராட்டி
                                                                    உருகுகிறது ராமராஜ் வேட்டி நிறுவனம்

இழப்புகளைப் பட்டியலிடுகிறது
பெருந்துயருக்கு இடையிலும்
முதல் தேதியில் சம்பளம் வழங்கியதை
மெச்சிப் புகழ்கிறது ராம்ராஜ்

ஒட்டுமொத்த தி, நகரும்
சில நாட்களாய் முடங்கிவிட்டதே
பரமசிவன் பிரம்படி பட்டகதையாய்
தி நகா் சுவா்களெல்லாம் 
விாிசில் விழுந்துவிட்டதே
சொந்த வீட்டிலிருந்தவன்
வீதிக்கு வந்துவிட்டானே


வெளிச்சத்தில் மடியும் 
விட்டில் பூச்சிகளாய் நாம்
பிரம்மாண்டாங்களுக்கு 
மண்டியிடுகிறோம்

இந்த பகட்டுக் கலாச்சாரம்
ஜன்னல் இல்லா அடுக்குமாடி கடைகள்
பட்டி தொட்டிகளுக்கும் பரவிவிட்டதே

சாலையோர அன்றாடங்காய்ச்சிகளிடம்
கறாராய் பேரம் பேசுவோம், ஏசி கடையில்
 திட்டமிட்ட அச்சிட்ட தப்புக் கணக்குகளை
கண்டும் காணாதிருப்போம்


முகூா்த்த பட்டுக்குப் பெயா் பெற்ற
காஞ்சியில் பணத்தைக் கொடுத்ததும்
பட்டைக் கொடுத்துவிடமாட்டாா்கள்
தெய்வங்களிடம் படைத்து
மணமக்களுக்காக வேண்டிக்
கும்பிட்ட பிறகு தான் கொடுப்பாா்கள்


மனிதம் இல்லாத காா்ப்பரேட் வணிகத்தில்
ஏழு எட்டு அடுக்கு மாடி கட்டுகிறாா்கள்
சென்டரல் ஏ,சி வைக்கும் தினவில்
காற்றையும் கட்டிப் போடுகிறாா்கள்
சிக்கித் தவித்த நெருப்பு 
தப்பிக்க வழியின்றி 
பாய்ச்சிய நீரைத் தழுவ வழியின்றி
பொசுக்கிப் பொசுங்கிவிட்டது


                                                 --- நலந்தா செம்புலிங்கம்






1 comment:

  1. விதிகள் அனைத்தையும் மீறி இவ்வாறாக பல நிறுவனங்கள் பல ஊர்களில் கட்டடங்களைக் கட்டுகின்றன. இழப்பின்போது சில நாள்களுக்கு மட்டும் இது பற்றி பேசப்படும். அவர்களும், அவர்களைப் போன்றவர்களும் திருந்த மாட்டார்கள்.

    ReplyDelete