எல்லோரும் வைக்க மறந்த கோரிக்கை
ஒரு பள்ளி ஆண்டுவிழாவிற்கு எவ்வளவு கூட்டம் வரும்? பரிசு பெரும் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள் குடும்பத்தினர், தலைமை ஏற்கும் பிரமுகரின் கட்சிக்கார்கள் அல்லது அலுவலர்கள்.
கலை நிகழ்ச்சிக்கு முந்திய விருது அளிப்பு வாழ்த்து பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் துணை வேந்தர் கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர். கலைநிகழ்ச்சிகளுக்கிடையிலும் விருதளிப்பு வாழ்த்துரைகள் தொடர்ந்தன. விழாவிற்கு வருகை தந்த பள்ளி நலம்விரும்பிகளை எல்லாம் கெளரவித்து அவர்கள் கைகளால் மாணவர்களுக்கு விருதுகளை அளித்தனர். ஆக மொத்தம் நான் இருந்த 7 மணிவரை 20 வாழ்த்துரைகளுக்குக் குறைவில்லை. அந்த 20 பிரமுகர்களுக்குள்ளும் பள்ளியைப் பாராட்டுவதில் கடுமையான போட்டி. அத்தோடு சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாகவும் அவர் முலமாக அரசிற்கு பலர் பல கோரிக்கை வைத்தார்கள். முக்கிய பள்ளிக்கு கூடுதலாக இடம் வேண்டும் கட்டிடம் வேண்டும் ஆசிரியர்கள் வேண்டும் என்ற கோணத்தில் கோரிக்கைகள் அமைந்தன. எல்லோரும் இன்னொரு முக்கிய கோரிக்கையை மறந்துவிட்டார்கள், அதை நான் வைக்கிறேன். இந்த விழா மிகப் பிரமாண்டமான L.CT.PL அரங்கில் தான் நடைபெற்றது, ஆனால் இந்தத் திருவிழாக் கூட்டத்திற்கு அதுவும் ஈடுகொடுக்க முடியவில்லையே! விருந்தினர்களை உட்கார வைப்பதற்காக மாணவர்களைக் கிளப்பிவிட்டார்களே! ஆகவே அடுத்த ஆண்டுக்குள் L.CT.PLஅரங்கினை இரண்டு மடங்காவது விரிவாக்க வேண்டும்
////// **** ////// ***** /////
ஒரு பள்ளி ஆண்டுவிழாவிற்கு எவ்வளவு கூட்டம் வரும்? பரிசு பெரும் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள் குடும்பத்தினர், தலைமை ஏற்கும் பிரமுகரின் கட்சிக்கார்கள் அல்லது அலுவலர்கள்.
காரைக்குடியையே பார்க்க முடிந்தது.
ஆனால் இராமநாதன் செட்டியார் பள்ளி விழாவில் பள்ளிக்கு நேரடியாகத் தொடர்புடைய பெற்றோர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள் மட்டுமல்ல அரிமா, சுழல் கழகம் தொழில் வணிகக் கழகம் நடையாளர் கழகம் எனப் பலதரப்பினரும் வந்திருந்தனர்
கலை நிகழ்ச்சிகளில் தொழில்கலைஞர்களின் நேர்த்தியைக் காண முடிந்தது. ஆங்கில நாடகம் நல்ல கருத்தை எளிமையாகவும் திருத்தமாகவும் சொன்னது. 5 அல்லது 6 காட்சிகள் இருந்தும் காட்சிமாற்றங்கள் பிசிறில்லாமலும் மாணவர்கள் வசனங்களில் தடுமாறுமலும் திறமையை நிலைநாட்டினர்.
கலை நிகழ்ச்சிக்கு முந்திய விருது அளிப்பு வாழ்த்து பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் துணை வேந்தர் கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர். கலைநிகழ்ச்சிகளுக்கிடையிலும் விருதளிப்பு வாழ்த்துரைகள் தொடர்ந்தன. விழாவிற்கு வருகை தந்த பள்ளி நலம்விரும்பிகளை எல்லாம் கெளரவித்து அவர்கள் கைகளால் மாணவர்களுக்கு விருதுகளை அளித்தனர். ஆக மொத்தம் நான் இருந்த 7 மணிவரை 20 வாழ்த்துரைகளுக்குக் குறைவில்லை. அந்த 20 பிரமுகர்களுக்குள்ளும் பள்ளியைப் பாராட்டுவதில் கடுமையான போட்டி. அத்தோடு சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாகவும் அவர் முலமாக அரசிற்கு பலர் பல கோரிக்கை வைத்தார்கள். முக்கிய பள்ளிக்கு கூடுதலாக இடம் வேண்டும் கட்டிடம் வேண்டும் ஆசிரியர்கள் வேண்டும் என்ற கோணத்தில் கோரிக்கைகள் அமைந்தன. எல்லோரும் இன்னொரு முக்கிய கோரிக்கையை மறந்துவிட்டார்கள், அதை நான் வைக்கிறேன். இந்த விழா மிகப் பிரமாண்டமான L.CT.PL அரங்கில் தான் நடைபெற்றது, ஆனால் இந்தத் திருவிழாக் கூட்டத்திற்கு அதுவும் ஈடுகொடுக்க முடியவில்லையே! விருந்தினர்களை உட்கார வைப்பதற்காக மாணவர்களைக் கிளப்பிவிட்டார்களே! ஆகவே அடுத்த ஆண்டுக்குள் L.CT.PLஅரங்கினை இரண்டு மடங்காவது விரிவாக்க வேண்டும்
O
விழா நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete