தமிழ்நாட்டின் புது ராகம்
ஜல்லிக்கட்டுப் போரட்டம்
சமூகம் தலைவணங்கியது
அரசியல்வாதிகளிடமிருந்து மட்டுமல்ல
நடிகர்களிடமிருந்தும் விடுபட்டுவிட்டோம்
எனச் செம்மாந்திருந்தோம்
எல்லாம் ஒன்பது மாதம் தான்
அந்த நம்பிக்கை எழுச்சி கீதம்
நற்கனவின் கரு கலைந்துவிட்டது
நடிகர் விஜய்
அல்ல அல்ல
ஜோசப் விஜய்யின்
அதிபிரபல நிலைக்கு
வித்திட்டவர்கள்
அவரது ரசிகர்களா?
பா,ஜ,கட்சியா?
பட்டிமண்டபம் நடத்தலாம்
மருத்துவம் பற்றி
மருத்துவர்கள் தான்
சிந்திக்க வேண்டுமா?
நடிகர்கள் சிந்திக்கக் கூடாதா?
தமிழ்த் திரைக்கு
கட்டிப்புடிடா பாடலால்
புத்தொளி பாய்ச்சிய
இளைய தளபதி பேசக் கூடாதா?
ஜி, எஸ், டியைப் பற்றி
யாா் சொல்லவில்லை?
துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள்
ஊடகங்கள், அரசியல்வாதிகள்
யார் சொன்னதும் "வைரல்" ஆகவில்லை
இன்றைய நிலவரப்படி
சகாயமும் நடிகர் விஜய்யும்
தேர்தல் களத்தில் எதிரெதிர் நின்றால்.....
கொஞ்சம் பயமாகத் தானிருக்கிறது
யாருக்குத் தெரியவில்லை?
இருபத்தியெட்டு வரிகளை
ஒற்றை வரியாக்கியது ஜி, எஸ், டி
காங்கிரஸ் கோடு கிழித்து
மோடி ரோடு போட்டார்
குறைபாடுகளும் கெடுபிடிகளும்
ஜல்லியும் தாராகவும் கலந்த ரோடு
அந்தக் கலவை படிமமாவதற்கு முன்பே
கூச்சலும் குழப்பமும் கால் கொண்டுவிட்டது
குழம்பிய குட்டையில்
வலையை வீசிவிட்டனர்
மெர்சல் குழுவினர்
நூறு ரூபாய் நுழைவுச் சீட்டை
ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் சீலர்கள்
சாரயத்திற்கு வரியில்லை என
புதிய "உண்மை"யை
"விதைத்து" பிரகடனம் செய்துவிட்டனர்
இந்தியாவின் வளரச்சிக் குறியீட்டை
குறைத்து எதிர்க்கட்சிகளுக்கு
பால்வார்த்தது ஐ,எம், எப் அமைப்பு
அத்தோடு ஜி, எஸ், டி
பிரம்மாண்டமான வரிச் சீர்திருத்தம்
குறுகிய காலப் பரப்பில் வதைக்கும்
நெடுங்காலப் பரப்பிலும் இடைக்காலத்திலும்
வளரச்சியளிக்கும் என்றும் சொன்னது
யார் காதில் விழுந்தது?
எப்படியோ
தமிழன் தான்
ஆளப்போகிறான்
அதையும் நடிகன் தான்
சொல்ல வேண்டியிருக்கிறது
ந லந்தா செம்புலிங்கம்
23.10.2017
தமிழகத்தின் நிலை அவ்வாறு ஆகிவிட்டது. கீழ்நோக்கியே போய்க்கொண்டிருக்கிறோம்.
ReplyDelete