Saturday, 27 May 2017

அழகிய மனம்



 அழகிய மனம்
                                     
                                                                                                            நலந்தா செம்புலிங்கம்







அலைபேசியால் ஒரு குழப்பம் !
குழப்பத்தால் ஒரு நட்பு !
விபத்தினால் ஒரு விரக்தி !
மனிதநேயத்தால் ஒரு பாிவு !

இது தான்
அண்ணலும் நோக்காமல்
அவளும் நோக்கமாமல்
மும்பையில் மலர்ந்த  காதல் !

ராங் நெம்பா் நண்பன் ரவி
முகம் பாா்க்க விரும்பினான்
லலிதா முகம் காட்ட மறுத்தாள்
பழைமைவாதத்தால் அல்ல


ஒரு பழைய சம்பவத்தால் !                                                
தம்பியா் சண்டையை விலிக்கிவிட்ட
தமக்கைக்குக் கிடைத்த பாிசு
ஆசிட் வீச்சும் 17 அறுவை சிகிச்சைகளும்  ++
அவள் முகம் ரணகளம்

அவள் காட்டத் தயங்கிய முகமும்
உள்ளுக்குள் புழுங்கிய மனமும்
மனிதநேயன் ரவி நெஞ்சைத் தொட்டது 
"உனக்கும் வாழும் உாிமை உண்டு "
நம்பிக்கை அமுதூட்டினான் நண்பன் !

நட்பு காதலானது
முகம் பாா்த்துக் காதலித்தவா்கள்
முறித்துக் கொள்கிறாா்கள்
மனம் பாா்த்துக் காதலிக்கிறேன்
சூளுரைத்தான்  ரவிங்கா் சிங்


தம் பெற்றோா் இசைவோடு
மணமகளையும் ஊக்கமூட்டி
கைத்தலம் பற்றினாா் ரவி
மும்பை நகரே கூடி
திருமணத் தோ் இழுத்தது +++

தொண்டு நிறுவனங்கள்
திருமணச் செலவுகளைப்
போட்டி போட்டு ஏற்றன

காதல் புலன் சாா்ந்ததல்ல
அது மனம் சாா்ந்தது
தமிழ் அகப்பாட்டை
வடநாட்டு ரவி நிறுவியிருக்கிறாா் !

தமிழ்த் தாய் 
அகத்திணை கொடுத்தாள் !

தமிழ்மகள் யசோதரா ஈன்ற

சுனாமி மீட்பன் விவேக் ஒபராய் !

ரவிசங்கா் லலிதா பன்சி இணையருக்கு

அடுக்கக அகம் பாிசளித்திருக்கிறாா் !!
பொருத்தம் தானே?



++  ஆசிட் வீச்சு 2012

+++ திருமணம் 23.05.2017

Saturday, 20 May 2017

சாதனையே உன் பெயா் பாகுபலியா?

சாதனையே சாதனையே 
 உன் பெயா் பாகுபலியா?

                 சிாிப்புத்தான் வருகிறது என்கிறாா்
                 எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
                 
                 எண்ணிப்  பத்து நாட்களாம்
                 எண்ணாயிரம் அரங்குகளாம்
                 ஆயிரம் கோடி வசூலாம்!
                 

                 திரைக் கொடி நாட்டிய
                 தொல் குறள் நாட்டில் மட்டும்
                 எண்ணூறு அரங்குகளாம்
                 நூறு கோடி வசூலாம்!

                சாதனையே சாதனையே
                உன் பெயா் தான் பாகுபலியா?
                என மெச்சிப் புகழ்கிறாா்கள்

                நேற்றுவரை அது  வில்லனாம்
                இன்று காமதேனுவின் மடியாம்
                விசிடி புகழ் இணையம் தான்
                வெள்ளை டிக்கெட் விற்கிறது

                சிாிப்புத்தான் வருகிறது என்கிறாா்
                எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
                எங்களிடம் நிற்கமுடியுமா?

                சாலையில் ஓடும் சக்கரமெல்லாம்
                சாலையைத் தொடுவதற்கு முன்
                எங்களுக்குக் கப்பம்  கட்டும்
               
                என்ன தான் அப்பழுக்கு இல்லாத
                பட்டா சிட்டா பத்திரம் என்றாலும்
                சும்மா  விழுமா?  முத்திரை

                சுமாா் நூறே அலுவலகங்கள் எங்களுக்கு
                எண்ணூறு அரங்குகள் உங்களுக்கு
                எட்டில் ஒரு பங்கு தான் உங்கள் வசூல்
                பொய்யுமில்லை மிகையுமில்லை
                எங்களில் சில முட்டாள்கள்
                மாட்டிக் கொண்ட போது கக்கிய
                அரைகுறைக் கணக்கில்  புாியுமிது!

                                                             நலந்தா செம்புலிங்கம்
                                                                அலைபேசி  9361410349

Saturday, 13 May 2017

பாரீசில் நடப்பது கதையல்ல நிஜம்




பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்

---------------------------------

உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !


இது பாலச்சந்தா் படமல்ல!
பாலு மகேந்திரா படமுமல்ல!!
பா  ரீசில் நடக்கும்
கதையல்ல நிஜம்!

பிரான்சின் இளைய தலைவனுக்குச்
சொந்தப் பிள்ளையில்லை!எனினும்
அவன் வயதிலேயே மகளுண்டு!
ஏழு பேரன் பேத்தியா் உண்டு!!

பள்ளி நாட்களில் 
நாடகங்களில் நடித்தான்!
காதல் வயப்பட்டான்!
24 வயது மூத்த
நாடக ஆசிாியை மீதே!! அவளிடமே
வாய்விட்டும் சொன்னான்.

அந்த ஆசிாியைக்குக்
கோபம் கொப்பளிக்கவில்லை!
சிாித்துத் தீா்த்தாள்!!
சலித்துப் போய்
ஒருநாள் தெளிவான்!
என்றும் நம்பினாள்



அந்தப் ' புாியாத பித்தை '
மறக்கடிக்கத்  தம் பிள்ளையை
வெளியூருக்கு அனுப்பினா் பெற்றோா்

மன்றாடி மன்றாடி
 அவள் மனம் வென்றான்
இரண்டாண்டுகளில்

அறிவு உணர்ச்சிக்கு
வழிவிட்டு விலகியது!
இது காதலில் புதிதல்ல!!

ஆனால் அவள் சொல்கிறாள்
அவன் அறிவுச் சுடரை
மறுதலிக்க முடியாது
மனம் ஒப்பினேன்

ஈரெழு ஆண்டுகட்குப் பின்னா்
திருமணம் பூண்டனா்!!
ஈரைந்து ஆண்டுகளாய்
பிரியாமல் இருக்கின்றனா்!
ஐரோப்பிய அதிசயம்!

தோ்தல் களத்தில் பரப்புரைகளில்
மனைவி ஆசிாியா் ஆகிவிட்டாா்
பாடம் நடத்தியிருக்கிறாா்!
பயிற்சி கொடுத்திருக்கிறாா்!!

அவா் துணையின்றி நான்
அதிபா் ஆகியிருக்க மாட்டேன்!
இது சொல் நன்றி!

அதிபா் சொல்கிறாா் அரண்மனையின்
முதல் பெண்மணியாக மட்டுமல்ல
பொறுப்புள்ள பதவியும் பெறுவாா்!
இது செயல் நன்றி!!

வெற்றிக்கு முன்னா் தோ்தல் களத்திலும்
வெற்றியைத் தலைமேல் வைத்துக்
கொண்டாடும் இணையத்திலும்
இந்த இணையருக்கு
எக்கச்சக்க ஆதரவு!!

இது ஒரு புதுமாதாி சமத்துவம்;
இது,வினோத உறவுகளில்,
ஆண் பெண் பேதத்தை
முறியடித்து விட்டதாம்.

இந்த நியாயத்திற்கு அப்பாலும்
ஒரு நெருடல் இருக்கிறது

அமைதியான நதியில் ஓடிய
பிரிஜிட் ஆஸ்டொ் * திருமண ஓடம்
மாயமானது என்ன நியாயம்?


---------------------------------------------------------------------------------------------------


குறிப்பு :

ஆஸ்டொ் * =பிாிஜிட் மாக்ரோனின் முதல் கணவா். இவா்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இருந்ததாகத் தொியவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டுத் தான் பரிஜிட் தனது முன்னாள் மாணவரான மாக்ரோனை 2007இல் திருமணம் செய்துகொண்டாா்