தொல் தமிழால்
புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ்ப்
பேச்சு உயிர் மூச்சு, இது
புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, பல இளைஞர்களை புகழணியில் ஏற்றிவிட்ட நிகழ்ச்சியும் தான். இந்தக் கவித்துவத் தலைப்பு மிகவும்
பிரபலமானதற்குக் காரணம் இது மாபெரும் உண்மையைப் பதிவு செய்தது தான். ஆம் தமிழர்களால் பேசாமல் இருக்கவும் முடியாது, மேடைப் பேச்சுக்களைத் துய்க்காமல் இருக்கவும் முடியாது.
மேடைப் பேச்சு தமிழக அரசியலில் செயலுத்திய ஆதிக்கம் மாணப் பெரியது. அரசியல் பிரச்சாரங்களுக்கு நாடகங்கள்
திரைப்படங்கள் தொலைக்காட்சி எனத் தளங்கள் விரிந்து வந்தன, அண்மைக் காலங்களில் சமூக வலைத்தங்களில்
அரசியல் பிரச்சாரம் பேராதிக்கம் செலுத்தி வருகிறது.
காலங்கள் மாறினாலும் புதிய புதிய தொழில்
நுட்பங்கள் பூத்த வண்ணம் இருந்தாலும் அரசியல் அரங்குகளிலும் இலக்கிய மன்றங்களிலும் நல்ல
மேடைப் பேச்சுக்களுக்கு வரவேற்பு தொடர்கிறது.
இந்த சவால் தமிழ் மன்றங்கள் தொழில் நுட்ப உதவியோடு எதிர்கொண்டு வெற்றியும்
பெற்றுள்ளது. WEBINAR மற்றும் அதைப் போன்ற தொழில் நுட்பங்களின் வாயிலாக பல தமிழ் மன்றங்கள் பல
நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
சிங்கப்பூர் தமிழ்ப்
பட்டிமன்றக் கலைக் கழகம் go to meeting எனும் இத்தகைய தொழில் நுட்பச் செயலி வாயிலாக
28.05.2020 வியாழக் கிழமை
சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணி முதல் 6.30
மணி வரை (இந்திய நேரம் மதியம் 2.30 முதல் 4.00 மணி வரை) புகழ் பெற்ற மேடைப் பேச்சாளர் தேவகோட்டை
இராமநாதன் அவர்களின் பேருரை நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி
அந்தக் கலைக் கழகத்திற்கு மட்டுமல்லாது அத்தொழில் நுட்பத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
தொலைத் தொடர்புத் துறையும் கணிப்பொறி மென்பொருள் துறையும் மின்மயமான 21 நூற்றாண்டின் ஆம் நாயகர்கள் தாம்.
சகல துறைகளிலும் அந்த
வல்லவர்கள் கோலோச்சினாலும் அவர்கள் ஒரு தொழில்சார் வட்டத்திற்குள்
அரியணையேகுபவர்கள் தான்.
உள்ளபடியே அத்தொழில்நுட்பங்களுக்குத்
தமிழ் மன்றங்கள் தான் பெரிய மேடை அமைத்துக் கொடுத்து அத்தொழில்நுட்பங்களை ஒவ்வொரு
ஊருக்கும் ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுபோய் சேர்க்கின்றன.
அதிலும் இது தேவகோட்டை
இராமநாதன் பேருரை, மிக மிக நேர்த்தியான தலைப்பும் அமைந்திருக்கிறது: இதயத்தில்
பூக்கட்டும் இலக்கியப் பூ இந்நிகழ்ச்சி உலகளாவிய
கவனம் பெறும் மாபெரும் நிகழ்ச்சியாக
அமையும்.
இது, தொழில் நுட்பத்துறையினருக்கு சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம்
நல்கும் வரம் தான்!
நலந்தா செம்புலிங்கம்
27.05.2020
உண்மையான வார்த்தைகள்...
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி, உண்மைதான்.
ReplyDelete