Sunday 14 July 2019

சாலைகளை அளந்த காமராசா் !!




          சாலைகளை  அளந்த   காமராசா்  !!



எல்லா அரசுகளும்
எல்லா நிலங்களையும்
அளக்கும், வரி விதிக்கும்
******


காமராசர் அரசும்
நிலங்களை அளந்தது
சாலைகளையும் அளந்தது
******                                  
புதுமாதரியாக அளந்தது
கல்விச் சாலைகளால்
சாலைகளை அளந்தது  

******
காமராசர்
அணைகளைக் கட்டினார் 

பள்ளிகளை விதைத்தார்
கல்விப் பயிரும் விளைந்தது
******
இன்று 
குடிநீருக்கே
கூப்பாடு போடுகிறோம்
******
கல்விச் சாலைகள்
புற்றீசலாய் பெருகிவிட்டன
கல்வி தான் கடைச்
சரக்காகி விட்டது
******
அரசே வீதி வீதியாய்
கள்ளுக் கடை திறக்கிறது
அரசு கொழிக்கிறது
சமூகம் சீரழிகிறது
******
நல்ல வேளை 
இது காமராசர் மண் 
என எவரும் முழங்கவில்லை
******
சிவகாமி மைந்தன்
நிம்மதியாய் துயில்
கொள்கிறார் - காந்தியின்* நிழலில்!

நலந்தா செம்புலிங்கம்
14.07.2019

* காமராசர் நினைவிடம் சென்னையில் காந்தி மண்டபம் அருகில் உள்ளது.





1 comment:

  1. பள்ளிக்காலத்தில் 1960களின் இறுதியில் பெருந்தலைவர் அவர்கள் கும்பகோணம் வந்திருந்தபோது எங்கள் தாத்தாவுடன் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குச் சென்ற நினைவு உள்ளது. மிக அருகில் மேடையில் பெருந்தலைவரைப் பார்த்த அந்த நாள்கள் என்றும் என் நினைவில் நிற்கும்.

    ReplyDelete