Tuesday, 24 October 2017

சகாயமும் நடிகர் விஜய்யும்


 சகாயமும் நடிகர் விஜய்யும்



தமிழ்நாட்டின் புது ராகம்
ஜல்லிக்கட்டுப் போரட்டம்
இளைஞர்கள் வழிநடத்தினர்
சமூகம் தலைவணங்கியது
அரசியல்வாதிகளிடமிருந்து மட்டுமல்ல
நடிகர்களிடமிருந்தும் விடுபட்டுவிட்டோம்
எனச் செம்மாந்திருந்தோம்

எல்லாம் ஒன்பது மாதம் தான்
அந்த  நம்பிக்கை எழுச்சி கீதம்
நற்கனவின் கரு கலைந்துவிட்டது











     நடிகர் விஜய்
     அல்ல அல்ல
     ஜோசப் விஜய்யின்
     அதிபிரபல நிலைக்கு
     வித்திட்டவர்கள்
     அவரது ரசிகர்களா?
     பா,,கட்சியா?
     பட்டிமண்டபம் நடத்தலாம்










மருத்துவம் பற்றி
மருத்துவர்கள் தான்
சிந்திக்க வேண்டுமா?
நடிகர்கள் சிந்திக்கக் கூடாதா?
தமிழ்த் திரைக்கு 
கட்டிப்புடிடா பாடலால்
புத்தொளி பாய்ச்சிய
இளைய தளபதி பேசக் கூடாதா?

ஜிஎஸ்டியைப் பற்றி
யாா் சொல்லவில்லை?
துறை வல்லுநர்கள்கல்வியாளர்கள்
ஊடகங்கள்அரசியல்வாதிகள்
யார் சொன்னதும் "வைரல்" ஆகவில்லை

இன்றைய நிலவரப்படி
சகாயமும் நடிகர் விஜய்யும்
தேர்தல் களத்தில் எதிரெதிர் நின்றால்.....
கொஞ்சம் பயமாகத் தானிருக்கிறது






யாருக்குத் தெரியவில்லை?  



   இருபத்தியெட்டு வரிகளை 
ஒற்றை வரியாக்கியது ஜிஎஸ்டி
வாஜ்பாய் புள்ளி வைத்தது
காங்கிரஸ் கோடு கிழித்து
மோடி ரோடு போட்டார்


குறைபாடுகளும் கெடுபிடிகளும்
ஜல்லியும் தாராகவும் கலந்த ரோடு
அந்தக் கலவை படிமமாவதற்கு முன்பே
கூச்சலும் குழப்பமும் கால் கொண்டுவிட்டது


குழம்பிய குட்டையில்
வலையை வீசிவிட்டனர்
மெர்சல் குழுவினர்
நூறு  ரூபாய் நுழைவுச் சீட்டை
ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் சீலர்கள்
சாரயத்திற்கு வரியில்லை என
புதிய  "உண்மை"யை 
"விதைத்து" பிரகடனம் செய்துவிட்டனர்


இந்தியாவின் வளரச்சிக் குறியீட்டை
குறைத்து எதிர்க்கட்சிகளுக்கு 
பால்வார்த்தது ஐ,எம்எப் அமைப்பு
அத்தோடு ஜிஎஸ்டி
பிரம்மாண்டமான வரிச் சீர்திருத்தம்
குறுகிய காலப் பரப்பில் வதைக்கும்
நெடுங்காலப் பரப்பிலும் இடைக்காலத்திலும்
வளரச்சியளிக்கும் என்றும் சொன்னது
யார் காதில் விழுந்தது?

எப்படியோ 
தமிழன் தான் 
ஆளப்போகிறான்
அதையும் நடிகன் தான் 
சொல்ல வேண்டியிருக்கிறது
                                    லந்தா செம்புலிங்கம்
                                      23.10.2017

Wednesday, 18 October 2017

தமிழ் இந்து தி.மு.க வை நேரடியாகவே ஆதரிக்கலாம்


 திராவிட இயக்க நூற்றாண்டு, திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சி, முதுபெரும் தலைவர் கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி நிறைவு ஆகிய திராவிட இயக்கத்தின் மூன்று முக்கியமான தருணங்களை தமிழ் இந்து நாளிதழ் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்" என்ற நூலை வெளியிட்டுக் கொண்டாடுகிறது.

          திராவிட இயக்கத்தின் பெரும் பங்களிப்பாக கருதப்படும் இறை மறுப்புக் கொள்கையும்  சாதி மறுப்புக் கொள்கையும்  இன்று எந்த நிலையில் உள்ளன? முன்பு கோவில்கள் மட்டும் இருந்தன, அங்கு கூட்டமும் குறைவாகவே இருந்தது.  இப்போது கோவில்களில் கூட்டம் பெருகிவிட்டது, பரிகார நேர்த்திக் கடன்கள் அதைவிடப் பெருகிவிட்டன போலிச் சாமியார்கள் ஏராளமாகிவிட்டனர்.  மந்திர மாந்திரீக வசிய குட்டிச் சாத்தான் விளம்பரங்கள் நாளிதழ்களில் மலிந்துவிட்டன.  சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு வருகிறது, சில வேளைகளில் கலவரமும் வெடிக்கிறது.      

           திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சி நிறைவில் எல்லோரும், இந்த. திராவிட இயக்கங்களால்  தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின்  ஆட்சி மீண்டும் மலராதா எனத் தவிக்கிறார்கள். 


             துக்ளக் ஆசிரியர் அமரர் சோ பாரதிய ஜனதா கட்சியால் பாரளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார்.  வெவ்வேறு காலங்களில் கலைஞரையும் ஜெயலலிதாவையும் மாறி மாறிஆதரித்திருக்கிறார். அவருடைய சாா்புத்தன்மை ஒரளவு கேள்விக்குள்ளானது, பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, 

               இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் சம  தொலைவில் விலகியிருக்கும் நடுநிலையாளர்களுக்கு   ஏதாவது ஒரு கட்சியை மட்டும் தான் விலக்க முடியும் என்ற யதார்த்த நிலை ஏற்படும் போது துக்ளக்கின் சார்பு நிலை வழிகாட்டுதலாகவே இருந்தது.  அதற்குக் காரணம் சோ அவர்களின் வெளிப்படைத்தன்மை தான்.

                  கலைஞர் அல்லது ஸ்டாலின் தலைமையிலான தி, மு, க தான் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு ஒரே வழி என தமிழ் இந்து கருதுமேயானால் அதை வெளிப்படையாகச் சொல்லாம்; தமிழ் இந்து தி.மு.க வை நேரடியாகவே ஆதரிக்கலாம்.  போயஸ் தோட்டத்தில் திரு "இந்து" ராம் பவ்வியமாக துக்கம் விசாரிப்பதை போல திருமதி சசிகலாவின் தலைமையை அங்கீகரித்தை தமிழ்நாட்டு மக்கள் பெரிதுபடுத்தமாட்டார்கள். (அன்றைய தினம் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்திடம் இவர் துக்கம் கேட்டாரா என்பது தெரியவில்லை)



Wednesday, 4 October 2017

மதிப்பெண்களுக்கு அப்பாலுமுள்ள மாணவர் நலன்

மதிப்பெண்களுக்கு 
அப்பாலுமுள்ள மாணவர்நலன் 
 வெற்றி என்பது முயற்சியின் பலன்.  ஒரு முயற்சியில்முதல் முயற்சியில்வெற்றி பெறுவது என்பதே பெரும் சிறப்பு.  ஓரே முயற்சியில் இரண்டுகுறிக்கோள்களை அடைய முனைந்தால்உலகம் அந்த முயற்சியையே பேராசைஎனக்கருதும்:  ஒரு கல்லில் இரண்டு மாங்காயாஎன    எதிர்கேள்வி கேட்கும்.
             
      இப்போது ஒரு விருதுமூவருக்குப் பாராட்டாக அமைந்துள்ளது 


  காரைக்குடி அழகப்பா  மெட்ரிக் பள்ளிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளனஆனால் வெளியில் தெரியாத  ஒரு சிறப்புமதிப்பெண்களுக்கு அப்பாலுமுள்ள மாணவர்களின் நலன்களை மேம்படுத்த ஒரு ACADEMIC COUNSELOR - நியமித்திருக்கிறார்கள்அச்சொல்லிற்கு கல்வி ஆலோசகர் என்று  அகராதி பொருள்சொல்கிறது.  ஆனால் அழகப்பா மெட்ரிக் பள்ளியின் ACADEMIC COUNSELOR -ன்  பணி  அகராதி தரும் விளக்கத்தைவிடக் கூடுதலானது.


 .  தனிக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது தான் அவரதுமுதன்மைப் பணி.  அத்துடன் இந்தக் காலத்தில் மிகவும் அரிதாகிவிட்ட நீதிநெறிவகுப்பு நடத்துவதும் அவரது பணியாகும்

       அந்தப் பணியை உருவான கதை இன்னும் சுவையானது.  ஒரு மாணவியின் தாய்,பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளி மற்றும் மாணவர்களின் நலனிற்காக சிலகருத்துக்களைச் சொன்னார்.  அவர் சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றஅவரையே ACADEMIC COUNSELOR  நியமித்துவிட்டார்கள்.  அப்போது அந்தத் தாய்முதுகலை சட்டம் (M.L) பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்அழகப்பாவின் அழைப்பை ஏற்று சட்டப் பணியை விடுத்து கல்விப் பணியை ஏற்றாா்.



அவர் தான் திருமதி வித்யாலட்சுமி.   
இவர் B.A., M.L., P.G.D.H.R.M., 
எனப் பலபட்டங்களைப் பெற்ற
 நற்சிந்தனையாளர்.     இவர் தமது பள்ளிப் பணியின் 
நீட்சியாக"சிகரம் தொடுவோம்"  
எனும் தனித்துவம் வாய்ந்த 
பத்திரிக்கையையும்
நடத்திவருகிறார்.

            



 இப்பணிகளிக்கிடையே    M.A  (Child care & Education)  படித்துவருகிறார்.  இவற்றோடு மேடைப் பேச்சிலும் கவிதையிலும் சிறந்து விளங்கும் இந்தமாணவர் மேம்பாட்டு ஆலோசகரை தினமலர் நாளிதழ் , "லட்சிய ஆசிரியர்எனும்தகுதியான விருது வழங்கிய அண்மையில் கெளரவித்திருக்கிறது.

             மாணவர் மேம்பாட்டு ஆலோசகர் வித்யா லட்சுமி மட்டுமல்லதினமலரும்,அதற்கும் மேலாக அழகப்பா மெட்ரிக் பள்ளியினரும் பெரும் பாராட்டிற்குரியவர்கள்தான்
                         நலந்தா செம்புலிங்கம்
                                                                          03.10.2017