INFOSYS காமராசர்கள்
மாற்றம் என்பது மாறாதது
இது,
உலகப் பொது உண்மை
பங்குச் சந்தைக்கு
இந்தப் பேருண்மையே
யானை மீது எறும்பு ஊரும்
உறுத்தாத உராய்வு தான்
பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
Narayana Murthy & Sudha Murthy |
இமைக்கும் கணத்தில்
இமயத்தில் கொடியையேற்றும்
அடுத்த நொடியே
பாதாளத்திலும் படுக்கும்
சீற்றமும் சறுக்கலும்
சந்தையில் சாதாரணம்
பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
எதற்காக ஏறும்? இறங்கும்?
யாருக்குத் தான் தெரியும்?
லாப நாட்டப் பேரேடுகளில்
ஒரு
நிறுவனம் முன்னேறும்
சந்தையிலோ அதன் பங்கு
சடசடவெனச் சரியும்
Nandan Nilekani |
லாபம் எதிர்பார்த்த அளவில்லை
நிபுணர்கள் விளக்கம் நல்குவர்
பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
யாருக்காக ஏறும்?
இறங்கும்?
யாருக்குத் தான் தெரியும்?
ஆதி
நாட்களில்
வள்ளல் அழகப்பரின்
விரலசைவுகள் தான்
பங்குச் சந்தையின்
திசைகளைத் தீர்மானித்தன
டாட்டாவும் பிர்லாவும் ஆதிக்கம்
செலுத்தி இருக்கின்றனர்
ரிலையன்ஸ் திருபாய் அம்பானி
சாமானிய
முதலீட்டாளனைச்
சக்கரவர்த்தி ஆக்கினார்
தொழிலில் முதன்மை
எதிலும் நேர்த்தி
எல்லாவற்றிலும் ஒழுங்கு
அது தான் இன்போசிஸ்
பங்குச் சந்தையின்
முதல் மரபணு அதிரடி தான்
அதற்கு எதிர்நீச்சல் போட்டு
படிப்படியாய் முன்னேறி
பங்குச் சந்தையிலும்
புதிய தடம் பதித்தது இன்போசிஸ்
மாற்றம் என்பது மாறதாதது
இன்போசிசும் விதிவிலக்கல்ல
BOARD ROOM BATTLE எனும்
நிர்வாகத்தின் உட்கட்சிப் பூசல்
புதிய அவதாரம் எடுத்தது
உண்மையில் விநோத அவதாரம்
காட்டை கழனியாக்கிய
நாராயண மூர்த்தியும்
ஆதி கூட்டாளிகளும்
கார்ப்பரேட் காமராசர்களாகி
தாமே விதைத்து வளர்த்த
இன்போசிஸ் நிறுவனத்தில்
புதிய தலைமுறைக்கு
வழிவிட வேண்டுமெனும்
இலட்சிய வேட்கையில்
அதிகாரப் பதிவிகளிலிருந்து
விரும்பி விலகினார்கள்,
புதிய தலைமைக்கு
உலகெங்கும் வலைவீசினார்கள்
தம் குடும்ப வாரிசுகளைப்
பட்டியலில் கூடச் சேர்க்கவில்லை
அந்த INFOSYS காமராசர்கள்
CEO Vishal Sikka |
ஆதி கூட்டாளிகளும்
புதிய தலைமைக்கு
இடையே
மனத்தாங்கல்
புதிய
தலைவரின்
நேற்றைய விலகல்
இடியாய் விழுந்தது
பங்குச் சந்தையில்
இன்போசிஸ் பங்கு விலை
கத்திரி வெயிலில் சுருண்ட
வெற்றிலைக் கொடியென
பத்து சதம் கரைந்தது
சென்செக்ஸ் எனும்
பங்குச் சந்தை தர்மாமீட்டர்
உச்சத்தில் 450 புள்ளிகளையும்
முடிவில் 270 புள்ளிகளையும்
பறிகொடுத்தது பரிதவித்தது
பங்குச் சந்தையின்
நீள அகலங்கள் மேடு பள்ளங்கள்
கவிதை மிகைகளை விஞ்சும்
வெள்ளிப் பணம் இங்கே
வெள்ளமாய் புழங்கும்
சேர்த்தவர்களோ கொஞ்சம்
நிலையாமைத் தத்துவத்தை
பட்டறிந்த பட்டினத்தார்களோ
ஏராளம் ஏராளம்
நலந்தா செம்புலிங்கம்
19.08.2017
பதிவு அருமை பாராட்டுகள். தொடரட்டும் இது போன்ற சிந்தனைகள்.
ReplyDeleteபதிவு அருமை பாராட்டுகள். தொடரட்டும் இது போன்ற சிந்தனைகள்.
ReplyDeleteகடைசி இரு வரிகளை அதிகம் ரசித்தேன்.
ReplyDelete