ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

காஷ்மீர் கால்பந்து மைதானத்தில் ........



காஷ்மீர் கால்பந்து மைதானத்தில் ........




கலவரம் நிலவரம்  இருவேறு சொற்கள் தான் !
ஆனாலும் அது காஷ்மீரில் பெரும்பாலும்
ஒரு பொருள் தான்!! ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும் விளையாடும் வினையாகும் !

கால்பந்து விளையாட்டில்
சீர்மிக்கவள் குட்சியா ! (Qudisya Altaf)

மாவட்ட மாநில வாகைகள் சூடியவள்!!
நிலவரம் கலவரம் அவளுடைய
தேசியக் கனவுக்கும் கட்டை போட்டது
பொறியியல் படிக்க புறப்பட்டாள்




புர்வானி மரணமும்  எதிர் விளைவுகளும்
காஷ்மீர் நெருப்பில்   பெட்ரோல் பாய்ச்சின!
கலவரங்கள் தணியாமல், பற்றி வெடித்தன !!      


பொறியில் படிக்கப் போன குட்சியாவிற்குப்
பொறி தட்டியது !  கால்பந்து  மைதானத்தில்
புதிய  அமைதி பூக்குமென்று !!

பொறியியல் படிப்பை விட்டாள், கால்பந்து
பயிற்சியாளராக முறையாக பாட்டியாவில் 
பயிற்சி பெற்றாள், கால்பந்துக் கழகம் கண்டாள் !!

காஷ்மீரின் நித்தியத தலைவலி பொழுதெல்லாம்
கல் எறியும் கூலிப்படைதான்! அந்தப் படை மெலிகிறது! 
கால்பந்து கழகம் பொலிகிறது !!

பனிச் சறுக்கிலும் வாகை சூடும் குட்சியாவின், கழகம்
 பலருக்கும் கால்பந்து பயிற்சியளிக்கிறது ! அவர்களை
 சர்வதேச வீரர்களாக்குவது குட்சியாவின் லட்சியம் !!

மறக்காமல் மறைக்காமல்
அவள் வயதையும் சொல்லிவிடுகிறேன்
அவளால் சட்டமன்ற தேர்தலில்
இப்போது போட்டியிட முடியாது
இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
கால்குலேட்டர் இன்றி விடைகாணலாம் 23 தான்

இந்தியா இளைய தேசம்
நம்பிக்கை இமய தேசம்

                                   நலந்தா செம்புலிங்கம்
                                   06.08.2017


3 கருத்துகள்:

 1. நல்ல தகவலுக்கு நன்றி. காஷ்மீரில் அமைதி மலரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. இவரைப் பற்றிய செய்தியை நாளிதழில் படித்தேன். முற்றிலும் வித்தியாசமான, நல்ல செய்தி காஷ்மீரிலிருந்து. இவ்வாறான செய்திகள் அங்கிருந்து தொடர்ந்து வரவேண்டும். அம்மக்களும் நம்மைப்போல அமைதியாக வாழும் நாளைக் காண்போம்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு.
  மாற்றங்கள் மலரட்டும்.
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு