Saturday 22 December 2018

சோழனை மீட்டெடுத்த வேலன்!!






தமிழ்த் திருமுறைகளை 

மீட்டெடுத்தவன் சோழன்

அந்தச் சோழன் சிலையை
மீட்டெடுத்தவன் வேலன்


சிலை மீட்கப் பிறந்தவன்
நீதி தேவதை கண்டெடுத்த
காவல் நாயகன்!       





சக்தி, வேல் கொடுத்தாள்!
செந்தில் வடிவேலன்
சூரனை வதைத்தான்!
இது புராணம்!


பொன் வேலனுக்கு
நீதித்தாய் வேல் கொடுத்தாள்!
வேலனையே வதைக்கிறார்கள்
இது கலிகாலம்!



சிலைகள் இவனிடம்
அடைக்கலம் கேட்கும்!
அவன் நெஞ்சுறுதி கண்டு
மலைகளும் மலைக்கும்!


கடைசி மூச்சுவரை
கடமை வேள்வி தொடரும்! 
நல்லெண்ணங்களும்
நல்லான்மீகமும் என்
பின்புலம் என்றே 
சூளூரைத் தான்!


மாயமான சிலைகள் மீள்கின்றன

அவன் பிறக்கும் முன்னர்

மாயமான சிலைகளும் மீள்கின்றன


வஞ்சகர்க்கு அஞ்சும் பேடிமை வீழ்கிறது
காக்கிச் சட்டைக்கு மெருகேறுகிறது!
பாரதியின் மீசை மீண்டும் துளிர்க்கிறது!!


நலந்தா செம்புலிங்கம்
21.12.2018

திரு பொன் மாணிக்கவேல் பற்றிய BBC யின் பதிவையும் படியுங்கள்: https://www.bbc.com/tamil/india-46619314

Tuesday 18 December 2018

பாவம் ஒரு பங்கு! பழி ஆறு மடங்கு!!

பாவம் ஒரு பங்கு!
பழி ஆறு மடங்கு!!

ஆசிரியரின் முக்கியத்துவதையும் பொறுப்பையும் சுட்டிக் காட்டுவதற்காக மாணவன் தவறு செய்தால் ஆசிரியருக்கு தண்டனை வழங்கு என வேடிக்கையாகச் சொல்வார்கள்.

     கடந்த ஞாயிறு(10.12.2018) ஏறத்தாழ அந்த சூழ்நிலை தேவகோட்டையின் பெருமிதப் பள்ளியான N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளிக்கு ஏற்பட்டது.
      
     முதலில் அரையாண்டு வினாத் தாள்கள் திருடப்பட்டதாக புலனத்தில் கட்செவியில் (வாட்ஸ் ஆப்) வேகமாகப் பரவியது.  தொலைக்காட்சிகளும் விளாசித் தள்ளின.  வினாத்தாள்கள் திருடப்படவில்லை ஆனால் திருடுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது என்றொரு செய்தி வந்தது.  கடைசியாக சுவரெறிக் குதித்தது கதவை உடைத்து வினாத்தாள்களை செல்போனில் படம் பிடிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.  இது தொழில் நுட்ப வசதியால் எளிமையாக்கப்பட்ட திருட்டு அவ்வளவு தான். இது தொடர்பாக 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியும் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதற்காகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.  

  இதனை ஒரு ஆசிரியர் கீழ்க்கண்டவாறு வரவேற்றிருக்கிறார்.

    இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகமும்காவல்துறையும் வெகு சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மதிப்புமிகு சாமி சத்தியமூர்த்தி அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளராகச் செயல்பட்டு மாணவர்கள் திருந்தவும் வாய்ப்பளித்து தாயுள்ளத்துடன் அணுகிய விதமும்,பேட்டியளித்த பாங்கும் வணக்கத்திற்குரியதாகும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள்குடும்ப உறவுகளின் மனதில் நீங்காத நன்றிக்குரியவராகிறார். நானும் ஆசிரியராக அவரை வணங்கிப் போற்றுகிறேன். 

      இந்தச் சம்பவத்திற்கு மென்மையான தீர்வு காணப்படுவதற்கு முன்னரே, துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்த சம்பவம் மர்மமாக இருந்த போதே ஒரு புகழ் பெற்ற பள்ளியின் பெயர் அனைத்துத் தொலைகாட்சி அலைவரிசைகளிலும்  துளைத்தெடுக்கப்டடிருக்கிறது.

              அந்த ஊடகங்களைக் குறை சொல்லவும் முடியாது.  ஒரு மாணவன் தன் சொந்த முயற்சியில் அரபிக் கடலை நீந்திக் கடந்தாலும் அவன் படிக்கும் பள்ளியும் பெருமையடைகிறது.  ஆகவே ஒரு மாணவன் தவறு செய்யும் போது அந்தப் பள்ளி அந்த அனல் வீச்சையும் எதிர்கொள்ளத் தான் வேண்டும்.

         இந்த தேவகோட்டை சம்பவத்தில் தொடர்புடைய 16 மாணவர்களும் N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளி மாணவர்களல்லர், வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்களும் மற்றொரு சுயநிதிப் பள்ளியின் மாணவர்களும்  இந்த 16 பேரில் அடங்குவர், இந்த 16 பேரும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆனால் ஒரே இடத்தில் டியூஷன் படிப்பவர்கள்.

                இந்த மாணவர்களின் குற்றச் செயலுக்கு N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளி மட்டும் தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டுமா? மற்ற இரண்டு பள்ளிகளுக்கும் டியூஷன் சென்டருக்கும் பொறுப்பே இல்லையா?

                 ஒரு உத்தேசக் கணக்குப் பார்த்தால் கூட இந்த மாணவர்களின் குற்றத்தில் டியூஷன் சென்டருக்கு அரைப் பங்கும் பள்ளிகளுக்கு அரைப் பங்கும் பொறுப்புண்டு. N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளிக்கு அரைப் பங்கில் மூன்றில் ஒரு பங்கு ஆக மொத்தத்தில் ஆறில் ஒரு பங்கு பொறுப்பேற்க வேண்டிய அந்தப் பள்ளியின் பெயர் தான் ஊடகங்களில் கண்ணில் தைத்திருக்கிறது.

               பாவம் ஒரு பங்கு பழி ஆறு மடங்கு என்பது தான் N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 
old Student Ramsiva Thillairaja 
அதே நேரம் தலைமை ஆசிரியர் மென்போக்கைத் தவிர்த்து கண்டிப்பாகவும் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தாலும் இச்சம்பவம் நடந்தேயிருக்காது என்கிறனர்.


            இந்த பாவம் பழி கணக்குக்கு அப்பாற்பட்டு குறைந்தபட்சம் நான்கு கோணங்களில் பார்த்தால் இந்த அவலத்தின் ஆணி வேர் புலப்படும்.

             1. அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்ற உந்துதல் மாணவர்களை டியூஷனுக்குத் தள்ளும்.  டியூஷன் பெற்ற பிறகும் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் வேறு குறுக்குவழிகளுக்கு மாணவர்கள் தள்ளப்படலாம்.
    
                2.  டியூஷன் தேவையா? தேவை தான், ஆனால் ஒரு பகுதியினருக்குத் தான் தேவை.  அரசே மெல்லக் கற்கும் மாணவர்களை இனங்கண்டு கூடுதல் பயிற்சி அளிக்கச் சொல்கிறது.  ஆனால்  மெல்லக் கற்போர் மட்டும் தான் டியூஷனை நாடுகிறார்களா?  உள்ளபடி நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் தான் அதிகமாக  டியூஷனை நாடுகிறார்கள்.எல்லாப் பாடங்களிலும் நூற்றிற்று நூறு அல்லது தொண்ணணூற்றி ஒன்பது  எடுத்தால் தான் குறிப்பிட்டு படிப்பு குறிப்பிட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இதற்குக் காரணம்

             3.  சில படிப்புகளை மட்டுமே சில கல்லூரிகளை மட்டுமே சமூகம் துரத்திக் கொண்டிருக்கிறது.  பல படிப்புகள் வேலை வாய்ப்பிற்கு உள்ளன.  பிள்ளைகளை மதிப்பெண் இயந்திரங்களாக்காமல் பெற்றோர்கள் மற்ற படிப்புகளில் கவனத்தைத் திருப்பலாம்.

              4  பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மாணவர் விகிதக் கணக்கு ஆசிரியருக்கான பணி நேரத்திற்கும் கணக்கு உண்டு.  புகழ் பெற்ற டியூஷன் ஆசரியர் வீட்டிலோ இவையெல்லாம் ஒரு அணு அளவும் கருதிப் பார்க்கப்படுவதில்லை. 100, 200 மாணவர்கள் பயிற்சிக்கு வருவார்கள்.  காலை 5 மணிக்கே வகுப்புகள் தொடங்கும்.  டியூஷன் ஆசிரியர் அரசுப் பள்ளி ஆசரியராக இருந்தால் அவர் பணிக்கும் செல்ல வேண்டும்.  இது மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வகுப்பறை
 அழுத்தத்தை விட கூடுதலான அழுத்தம்.  இந்த அழுத்தம்.

               டியூஷன் தவிர்க்க முடியாதது என்ற நிலையில் டியூஷனில் ஏற்படும் அழுத்தத்தையாவது குறைக்க வேண்டும்.  இதனை அரசு சட்டம் போட்டுச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.  எப்போது ஒரு சட்டம் உருவானாலும் அதனுடன் சட்டத்தின் ஓட்டை என்றொரு உடன்பிறப்பும் ஒட்டிப் பிறக்கும் ஆகவே சமூகம் சுயகட்டுப்பாட்டினால்   டியூஷன் சூழல்களை நெறிப்படுத்தலாம்.

              1.  டியூஷன் ஆசிரியருக்கும் மாணவர் ஆசிரியர் விகிதசார வரம்புகள் ஏற்படுத்தலாம்.  2. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

நலந்தா செம்புலிங்கம்
17.12.2018

Thursday 13 December 2018

GREAT INDIAN MIDDLE CLASS

GREAT INDIAN MIDDLE CLASS


 
He is a middle-class gentleman. He is not a government servant; he is working in a propriety firm. He ran a chit fund to supplement his income & earned few lakhs purely by his trustworthiness. Subsequently, he invested a portion of that earnings in lands and it multiplied. And at last, his dream of own house has about come true.
Just as he started construction, MODI announced demonetization. The construction industry which is almost in ONLY CASH MODE and the DEMONETISATION locked horns. It gave him lots of hardship. He started cursing MODI every day.
Today his bank has sent a message to his cell phone informing that he is eligible for a subsidy of 2.5 lakhs for his HOME LOAN. He is yet to contact his bank manager. But do you how he reacted? I WILL PAY BRIBE OF 20 OR 30 THOUSAND AND SOMEHOW AVAIL THIS SUBSIDY.
That is the great Indian Middle class, we are ready to bribe and (further) kneel & bow before powers that be, even before it is demanded.
We are not seeking a remedy to itching skin disease; instead, we are yearning for scratching pleasure only

Wednesday 21 November 2018

இலுப்பைக்குடியில் கணக்குப் புலிகள்


இலுப்பைக்குடியில் கணக்குப் புலிகள்
*********************************************



        கண்காட்சிகள் எனும் நிகழ்வுகள் காலப்போக்கில் அமைப்பிலும் பெயரிலும் மாற்றம் பெற்று பொருட்காட்சிகள் ஆகிவிட்டன.  சில பல நொறுக்குத் தீனி கடைகள்,  அழகு அலங்காரப் பொருட்கடைகள், எழுது பொருட்கடைகள்,  சமையலறை பொருட்கடைகள், ஒரு மைல் தள்ளியிருப்பவர்கள் கண்ணிலும்படும் அளவு உயரமான ராட்டினம், சில வேளைகளில் இவற்றோடு ஒரு சின்ன சர்க்கஸ் இது தான் பல ஊர்களில் நடக்கும் கண்காட்சிகள்.

        ஒரு துறை சார்ந்த கண்காட்சி என்றால் புத்தகக் கண்காட்சிகள் தான் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறுகிறது.  அது புத்தகத் திருவிழாவாக வளர்ந்திருக்கிறது.   அங்கு கடை அரங்கைவிட கலை அரங்கமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  அவையும் புத்தகங்களுக்காக நடத்தப்படுகின்றனவா? ஸ்பான்ஸர்களுக்கா நடத்தபபடுகின்றனவா என்ற பட்டிமண்டபமும் அவ்வப்போது எழுகிறது.

         செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி பற்றிய செய்திகளையும் பார்க்கிறோம். அவற்றிற்குப் பின்புலமாக ஆர்வலர்களும் அவர்களை நம்பியிருக்கும் வணிக வட்டத்தினரும் அத்தகைய கண்காட்சிகளை தூக்கி நிறுத்துகிறார்கள்.

          இந்தச் சூழலில் தான் கணிதக் கண்காட்சி என்ற அறிவிப்பைக் கண்டேன்.  கல்வி அப்பட்டமான கடைச் சரக்கான பிறகு, அதுவும் ஒரு துறை சார்ந்த கண்காட்சியா? வியப்புக் குறிகளும் கேள்விக் குறிகளும் என் எண்ணப் போக்கில் மாறி மாறி ஓடின.

            அறிவிப்பை படிப்பதற்கு முன்னரே ஏதோ கல்லூரியில் நடக்கும் என அனிச்சையாக நினைத்தேன்.  அறிவிப்பில் அது இலுப்பைக்குடி எனும் சிற்றூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அன்று மட்டுமே அதுவும் மாலை 3.30 மணி வரை மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அதுவே வியப்பாக இருந்தது.  அந்த அறிவிப்பும் புலனத்தில் வந்திருக்கிறது.



           உள்ளபடியே புலனச் செய்திகளில் அறுதிப் பெரும்பான்மையானவை  பொய்ச் செய்திகள் மோசடிச் செய்திகள்.  இந்தச் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?   நேரில் போய் பார்த்தால் அன்றி எதுவும் சொல்ல முடியாது.

       அந்த இலுப்பைக்குடி காரைக்குடியின் எல்லைக் கோட்டில் உள்ள சிற்றூர் தான், எங்கள் கடையிலிருந்து அந்தப் பள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கும்.

            நான் அந்தச் செய்தியைப் பார்த்தபோது மாலை 2.30 மணி, கண்காட்சி  இன்னும் ஒரு மணிநேரம் மட்டும் தான் நடைபெறும்.  ஒரு மணி நேரத்தில் 3 கி.மீ கடக்க முடியாதா? என வெளியூர்க்காரர்களும், இப்போதைய காரைக்குடியை அறியாதவர்களும் எதிர்கேள்வி கேட்பார்கள். பாதாளச் சாக்கடை என்றொரு திட்டம் வந்த பிறகு, அது  காரைக்குடியின் நலத்திட்டம் தானா? அல்லது பாக்கிஸ்தானின் சதி வேலையா? என நினைக்கும் அளவிற்கு சாலைகள் குதறி வைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் காரைக்குடிக்குள் ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க எவ்வளவு நேரம் என்பதையெல்லாம் கணித மேதை இராமனுஜத்தால் கூட கணிக்க முடியாது. 

               எப்படியோ 3.15 மணிக்கு அந்தப் பள்ளியை அடைந்தேன்.  பள்ளியின் வாசலில் இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்க வைக்கப்பட்ட கட்அவுட் ,  புலனத்தில் கண்ட செய்தி உண்மை தான் என்றும் அதை நம்பி வந்ததும் தவறில்லை என மனதிற்கு பெரிய ஆறுதலைத் தந்தது.  
                      
             பள்ளிக்குள்  நுழைந்ததும் இன்னொரு  ஒரு பெரிய கட் அவுட் அசத்தியது.  இந்தக் கண்காட்சி அழைப்பையே கணித சூத்திரங்களை வைத்து சித்தரித்தது அந்தக் கட் அவுட். வகுப்பறைகளுக்கு முன் அமைந்த மைதானத்தில் வரிசையாக ஏராளமான செங்குத்தான (அகலம் குறைந்த உயரமான) கட் அவுட்கள்.  ஒவ்வொன்றும் ஒரு கணித மேதையின் வாழ்க்கைக் குறிப்பையும்  அந்த மேதையின் கணிதத் துறை சாதனையையும் படத்தோடு சித்தரித்தது.  




          தலைமை ஆசிரியரிலிருந்து மாணவர்கள் வரை அனைவரும் ஒரு பேட்ச் அணிந்திருந்தார்கள்.  அந்த பேட்சின் நாயகர் எல்லா இந்திய நெஞ்சங்களையும் நிமிரச்  செய்யும்   கணித மேதை இராமானுஜம் தான்.

          இவையெல்லாம் நான் பள்ளி வளாகத்தினுள் அடியெடுத்து வைத்து யாரிடமும் எதையும் விசாரிக்காமல், ஓரிரு மணித்துளிகளில்  பார்த்து உணர்ந்து மெய்சிலர்த்த அனுபவங்கள். பிறகு ஆசிரியர்களிடம் கேட்டும் கண்காட்சி பொருட்களைப் பார்த்தும்   வியந்த அனுபவங்கள் அத்தோடு கொஞ்சம் தோற்ற அனுபவங்களும் (கணித விளையாட்டுகளில் மாணவர்களிடம்) தொடர்ந்தன.

          இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ப. சண்முகநாதன் ஒரு கணித ஆசிரியர் என்று சான்றிதழ்கள் சொல்கின்றன, ஆனால் அவர் கண்காட்சி ஆசிரியராகவும் திகழ்கிறார்.  இங்கு கணிதக் கண்காட்சி நடத்துவதற்கு முன்னரே விசாலையன் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் அவர் பணியாற்றிய போது ஸ்போக்கன் இங்கிலீஷ் கண்காட்சி நடத்தியிருக்கிறாராம்.
        
           கணிதம் ஏனோ அது மனப்பாடப் பாடமாகவும் கரடுமுரடான பாதையாகவும் மாறிவிட்டது.   உள்ளபடியே  கணிதம் தேடல் எனும் வேட்கையிலும் கண்டுபிடித்தல் எனும் வெற்றியிலும் பிறந்த கலை.   தேடலும் கண்டுபிடிப்பும் தொடர்வினையானால் அது ஒரு விளையாட்டாகிவிடும். விளையாட்டுக்கள் மாணவர்களைக் கவரும். இது தான் இந்தக் கணிதக் கண்காட்சியின் அடிநாதம்

          ஒரு கணித சூத்திரத்தை வைத்து ஒரு புதிரை உருவாக்குகிறார்கள், அது தான் கதை வசனம்.  அதனைக் காட்சியாக்கும் ஒரு  எளிமையான பட விளக்கமோ (CHART) கணித வடிவமோ தான் கதாபாத்திரம். இப்படித் தான் ஒரு (EXHIBIT) காட்சிப் பொருள் உருவாகிறது. இதைப் போல் 100க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள். ஒவ்வொரு காட்சிப் பொருளையும் விளக்க பெரும்பாலும் இரண்டு மாணவர்கள்.

        அரிய கணித தத்துவங்களை எளிமையாக விளக்கும் காட்சிப் பொருட்களை எளிமையாகக் கிடைக்கக் கூடிய தெர்மாகோல் வண்ண அட்டைகள், ரிப்பன், போன்றவைகளை வைத்தும், ஒரு சிறிய கத்தி மற்றும் பெவிக்கால் பசையின் உதவியோடும் உருவாக்கியிருக்கிறார் சமூக அறிவியில் ஆசிரியர் முனீஸ்வரன்.  கணித ஆசரியைகள் திருமதி பத்மாவதி மற்றும் திருமதி சம்பூர்ண சாந்தி  மாணவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார்



        மாணவர்கள் கதை கேட்கவே ஆவலாக இருப்பார்கள்.  இந்தக் கணிதக்காட்சி அவர்களைக் கதை சொல்லிகளாக உயர்த்தியது. அந்தப் பூரிப்பை அவர்கள் முகம் பிரதிபலித்தது.

      இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தக் கணிதக் கண்காட்சியை 30, 35 கிலோ தொலைவிலுள்ள அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களையெல்லாம் அந்தந்தப் பள்ளியினரே அழைத்து வந்திருக்கிறார்கள்.  50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறார்கள்.
                                 
          
                இந்தக் கணிதக் கண்காட்சிக்காகவே வகுப்பறைகளில் இருந்த கரும்பலகைகளுக்கு பதிலாக உயர் ரக பச்சைப் பலகைகள் மாற்றப்பட்டிருக்கின்றன., கூடுதல் மின்விசிறிகள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, வரவேற்புத் தோரணங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.   கண்காட்சியைப் பார்வையிட வந்த எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் பலூன்கள், சிற்றுண்டிகள் வழங்கியிருக்கிறார்கள்.  இது ஒரு குடும்பத் திருவிழாவாகவே நடத்தியிருக்கிறார்கள்.  குடும்ப விழா என்றால் அசல் குடும்ப விழா தான் அந்த கிராமத்தையே பத்திரிக்கை வைத்து  (அச்சிட்ட அறிவிப்பு)  அழைத்திருக்கிறார்கள்,  கிராம வழக்கப்படி அருகிலுள்ள கோவிலிலும் பத்திரிக்கை வைத்து அழைத்திருக்கிறார்கள்.

          திரு சண்முக நாதன் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.  இந்த  ஐந்து மாதத்திற்குள் தான்  இவ்வளவு தயாரிப்புகளும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இந்தக் கணிதக் கண்காட்சி 13.11.2018  அன்று சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே ஆர் இராமசாமி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அ. பாலு முத்து, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் சிவகங்கைக் கல்வி மாவட்ட அலுவலர்கள் திருவாளர்கள் கு. பரமதயாளன், சாமி சத்தியமூர்த்தி மற்றும் கே.எஸ். ராஜேந்திரன் அவர்களும் சாக்கோட்டை ஒன்றியத்தின் மேனாள் பெருந்தலைவர் திரு சுப. முத்துராமலிங்கம் அவர்களும் இலுப்பைக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மேனாள் தலைவர் திரு மு. அன்பரசன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்..
                  
         திரு. ப.  சண்முகநாதனுள் உள்ள கணித ஆசிரியரும் தலைமை ஆசிரியருக்குரிய நிர்வாகத் திறனும் வழிநடத்தும் பாங்கும்,  கிராம மக்களின் ஒத்துழைப்பும் ஆசிரியர்களின் ஈடுபாடும் தான் இந்த பிரம்மாண்டமான புது மாதிரியான கண்காட்சியை ஒரு கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் அதுவும் வெறும் ஐந்து மாதங்களில் சாத்தியமாக்கியிருக்கிறது.  இதன் நீட்சியாக இன்னும் பல அதிசயங்கள் சாத்தியமாகும்.  இந்தப் பள்ளி பல கணித மேதைகளைக்கான விதையை விதைத்ததுவிட்டது.  இன்னும் பத்தே ஆண்டுகளில் பல கணித மேதைகள் உருவாகலாம்.  அந்தக் கணித மேதைகளால் இந்த இலுப்பைக்குடிப் பள்ளியின் கொடி உலகெங்கும் பட்டொளி வீசும்!

நலந்தா செம்புலிங்கம்
21.11.2018

Monday 12 November 2018

பட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்

பட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்
^^^^^   //////     ^^^^^   //////     ^^^^^   //////

        இரண்டு பட்டிமன்றங்கள்: ஒன்று முழுக்க முழுக்கக் கற்பனை, இன்னொன்று முக்கால் பகுதி பெயர்மாற்றம் செய்யப்பட்ட உண்மை

        திருக்குறளின் அடிப்படையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது.  நடுவர் தனது அறிமுகவுரை இரண்டு அணியின் நான்கு சொற்பொழிவாளர்கள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டார்.  அதற்கு மேலும் நடுவர் விட்டு வைத்த கருத்துக்களைச் சொற்பொழிவாளர்கள் தேடிக் கண்டுபிடித்துப் பேசினார்கள்.

           நடுவர் தீர்ப்பில் திருக்குறளையே தொடாமல், அவருடைய குருநாதர் எப்படி சவால்களை  கை ஆள்வாரோ அதன்படியே தீர்ப்பு வழங்குவதாகச்  சொல்லி அதன்படியே தீர்ப்பு வழங்கினார்.

            வாகனங்களை சாலையில் இடதுபுறமாகப் போக வேண்டும்.  முன் செல்லும் வாகனங்களை, பின் செல்லும் வாகனம் முந்த வேண்டுமெனில் வலது புறமாகத் தான் முந்தவேண்டும்.  

              முன் சென்ற நீல நிற வாகனம் வலதுபுறமாகவே சென்றது.   பின் வந்த மஞ்சள் நிற வாகனம் இடது புறமாக செல்ல நீல நிற வாகன ஓட்டி அனுமதிக்கிறார் என மஞ்சள் நினைத்துக் கொண்டார்.  இடது புறமாக அவரை முந்த முனைந்தார். ஆனால் நீல வாகனம் மஞ்சள் வாகனத்தை தடுத்துவிட்டது.   மஞ்சள் வாகனம் தடுமாறிவிட்டது.  இருவரும் நிதானமாக வேகத்தில் இருந்ததால் எந்த விபத்து நேரவில்லை. 

          மஞ்சள் வாகனம் சாலைவிதியை மீறியதால் விபத்து நேரும் என தான்  அதிர்ந்துவிட்டதாக நீலவாகனம் குற்றம் சாட்டியது. 

               அவர் இடது புறம் எனக்கு வழி விட்டதால் தான் நான் இடது புறம் வந்தேன் என்கிறது மஞ்சள் வாகனம்.  நான் வழி விட்டாலும் வரக் கூடாது என்கிறது நீலவாகனம்

        யார் மீது தவறு என ஒரு பட்டிமன்ற நடுவரிடம் கேட்டோம்.  

        இருவர் மீதும் பிழை இருக்கிறது, ஒருவர் மீதும் குற்றம் இல்லை.  முதலில் பிழை செய்தவர் அந்தப் பிழையைத் தவிர்த்திருந்தால் இரண்டாவது பிழை நடந்திருக்காது என நடுவர் தீர்ப்பளித்தார்.

நலந்தா செம்புலிங்கம்
12.11.2018

Tuesday 6 November 2018

வலைப் பின்னலால் சிலை வீழப் போவதில்லை!!

வலைப் பின்னலால் சிலை வீழப் போவதில்லை!!

^^^^^^   //////////     ^^^^^^   //////////     ^^^^^^   //////////   

      தொலைக்காட்சிகள் கால்பதிக்காத காலத்தில் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் ஒரு தூண் என்போம்.  பிறகு தொலைக் காட்சிகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதற்காக ஊடகங்கள் ஜனநாயத்தின் தூண் என்று விரித்துச் சொல்ல வேண்டியதாயிற்று.  அடுத்த தொழில் நுட்ப வளர்ச்சியால் சமூக வலைத் தளங்களும் ஊடகங்களுள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாயின.இது மிகச் சிறந்த முன்னேற்றம்.  சமூக வலைத் தளங்கள் தோன்றுவதற்கு முன்னர் தகவல் ரிமாற்றத்தில் நிறுவன ஊடகங்கள் மலைகளாகத் திகழ்ந்தன.  அந்த மலைகளுக்கு நிகரான வலிமையைத் தனிமனிதனுக்குத் தந்தது சமூக வலைத் தளங்கள் தாம்

            இந்த முன்னேற்றத்தால் பல நன்மைகள் கை கூடினாலும்,மற்றோருபுறம் ஒரு பக்கச் சார்புச் செய்திகள், கருத்துருவாக்கம் போன்றவை சமூக வலைத் தளங்களால் பல்கிப் பெருகியிருக்கிறது. சமூக வலைத் தளங்களுக்கே உரிய ஆங்கிலக் கலைச் சொல்லில் சொல்ல வேண்டுமெனில், இந்தப் போக்கு வைரல் ஆகிறதுஇப்பொழுது வைரலாகிக் கொண்டிருப்பது ஒற்றுமைச் சிலை என்ற பெயரில் சர்தார் படேலிற்கு எழுப்பப்பட்டிருக்கும் வரலாற்று நினைவுச் சின்னம்.

         நாட்டில் எத்தனையோ கோடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க முடியாத நிலையில் 3000 கோடிக்கு சிலை தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்சிலை வளாகத்திற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்றும் சில புகார்களை வலைத் தளங்களில் வலம் வருகின்றனஇதைப் போன்ற நியாயமான கேள்விகளின்  மேல் இந்த சிலை எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தால் அது வரவேற்கதக்கது தான்.   ஆனால் சிலை எதிர்ப்பு பிரச்சாரகர்கள் இவற்றை விரிக்கவில்லை. நில கையடப்படுத்தல் பற்றிய புகார்களை முன் வைப்பவர்கள் அது நர்மதை அணை தொடர்புடையா என்பதைத் தெளிவுபடுத்தவில்லைஅடிப்படை வசதிகள் வழங்காத அரசு இவ்வளவு பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவதா? என மைய அரசைக் குறிவைத்துக்  குற்றம் சாட்டுபவர்கள் இது மாநில அரசு மக்கள் பங்களிப்போடு தனி வாரியத்தின் மூலம் செய்யும் பணி என்பதையே சொல்லமாட்டார்கள்.
                  
            பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், "70 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த படேலுக்குச் சிலையாம், காக்கைகளுக்கு எச்சமிட வசதியாக, அதற்கு 3000 கோடி விரையம்" என  ஒருவர் பதிவு செய்கிறார், பலர் அந்தப் பதிவையே திரும்பத் திரும்ப பார்வர்டு செய்கிறார்கள்.

           குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் எழுப்பப்பட்டுள்ளது ஒற்றுமைச் சின்னம் எனும் மாபெரும் வளாகம், அருங்காட்சியகம் மலர் காட்சியகம், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட பல நோக்கு வரலாற்று நினைவுச் சின்னம்.. அதில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேல் சிலையும் ஒரு அங்கம். 3000 கோடி ரூபாய் செலவளித்தது ஒற்றைக் காட்சிப் பொருளுக்கு அல்ல.

           அதுதிடீரென  மைய அரசு 3000 கோடி ரூபாய்க்கு ஒரு காசோலை நீட்ட, அதை வைத்துக் கொண்டு ஒரே நாளில் வானிலிருந்து குதித்த சிலையும் அல்ல.  

           இது குஜராத் மாநில அரசின் முன் முயற்சியில் எழுந்த வரலாற்றுச் சின்னம்அதுவும்  நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது தொடங்கிய திட்டம்.  
              
           இந்தப் பிரம்மாண்ட சிலை எழுப்பத் தேவைப்பட்ட இரும்புக்காக ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்களது பழைய இரும்புக் கருவிகளை தங்களது பங்களிப்பாக அளித்த மாபெரும் மக்கள் இயக்கம்.

             இது திட்டமிட்ட 42 மாதங்களில் நிறைவேற்றப்பட்டப் பணி, திட்டத்தலிருந்தது காலம் பொருள் பணம் எதிலும் சிறிதும் மீறாத அசாத்தியப் பணி. திட்டமிடுதலுக்கும், திட்டச் செயலாக்கலுக்கும் முன்னுதாரணமாக பணி
             
              இச்சிலையைப் பற்றி திட்டமிட்டே அவதூறு பரப்புகிறவர்களுக்கு நரேந்திர மோடி மீது, பாரதி ஜனதாக் கட்சி மீதும் எதிர்ப்பு இருக்கலாம். ஆனால்   இந்த வலைப் பின்னலால் சிலை வீழப் போவதில்லை, இத்தகைய வலைப் பதிவர்களின் வட்டத்திற்குத் தான் இந்தச் சிலை வளாகத்தின் வரலாற்று முக்கியத்துவத்துவமும்  பொறியியல் சாதனைகளும் நேர்த்தியான திட்டமிடலும் திட்டச் செயலாக்க நிர்வாக மேலாண்மையும்
 இருட்டடிப்பு செய்யப்படுகிறது
      
         எந்த சமூக வலைத் தளங்கள் தகவல் பரிமாற்றத்தில் விடிவெள்ளியாகத் திகழ்கின்றனவோ அந்த சமூக வலைத் தளங்களிலேயே தகவல் இருட்டடிப்பு வெற்றிகரமாக  அரங்கேறுவது. நிகரில்லாத நகை முரண்.
           
        இதனை நன்றாக அறிந்த பேராசிரியர் ஒருவர், அந்த வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தின் படத்தோடு ஒரு சிலைக்கு 3000 கோடியாஎன கேள்வி எழுப்புகிறார்இது ஒரு சிலை மட்டுமல்ல என இன்னொருவர்
எதிர்வினையாற்றிய பிறகு பா.. படேலுக்கு சிலை எழுப்பும் காங்கிரஸ் நேருவிற்கு சிலை எழுப்பும் மாயாவதி யானைகளுக்கு சிலை எழுப்பினார், இங்கே சிலை அரசியல் தான் நடக்கிறது மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என விளக்கமளிக்கிறார்.

          இதைவிட பச்சையான திசைதிருப்பலை ஒரு பெரியார் தொண்டர் புலனத்தில் மேற்கொண்டார்அவருடன் நான் புலனம் வழியாகவே வாதிட்டேன்அந்த உரையாடலை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.
          இதைவிட பச்சையான திசைதிருப்பலை ஒரு பெரியார் தொண்டர் புலனத்தில் மேற்கொண்டார்அவருடன் நான் புலனம் வழியாகவே வாதிட்டேன்அந்த உரையாடலை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

  
  ஒரு  பெரியார் தொண்டர் படேல் சிலை, மல்லையா மோசடி, நிரவ் மோசடி ஆகியவற்றையும் இணைத்து மக்கள் வரிப் பணத்தில் விளையாடிய விளையாட்டு என புலனத்தில் ஒரு கருத்துப் படம் பதிவு செய்தார்.


       யார் ஆட்சியில் என்று கேட்டேன்

      கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சி என்றார்

      வெளிப்படையாகச் சொல்லலாமே எனக் கேட்டேன்

      மீண்டும் ஒரு கருத்துப்படம் அனுப்பினார்அந்தக் கருத்துப்படம் காங்கிரசு ஆட்சியில் சுதந்திரக் கிளியாக இருந்த ரிசர்வ வங்கி நீதித் துறை சி.பி. போன்ற அரசு அமைப்புகள் மோடி அரசில் கூண்டுக் கிளி ஆகிவிட்டதாக சித்தரித்தது



       இந்த சுதந்திரக் கிளி கூண்டுக்கிளி கருத்துப் படத்திற்கும் மக்கள் வரிப் பண விளையாட்டிற்கும் என்ன தொடர்பு எனக் கேட்டேன்  

       அரசுப் பணத்தில் மக்களின் வரிப் பணமும் அடங்குமே என்றார்

       யார் ஆட்சியில் மக்கள் வரிப் பண விளையாட்டு என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்கிறீர்கள் என்றேன். 

        சுதந்திரக் கிளி கூண்டுக் கிளி இதற்காக அனுப்பப்பட்ட
தல்லநீங்கள் அதற்குத்  தொடர்பு படுத்திக் கொண்டதற்கு  நான் பொறுப்பல்லபரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டது ஆண்ட கட்சிஆளும் கட்சி என அனைத்தையும் தான குறிக்கும் . மக்கள் நல அரசு என்ற பெயரில்  மக்கள் விரோத அரசைத்தான் ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  "அளவுவேண்டுமானால் வேறுபடலாமே தவிர கொள்ளைகள் குறைவதில்லைகூடு தல் தகவல் தங்களுக்குத தெரியுமானால் தெரிவிக்கலாம்ஏற்றுக் கொள்ளப்படும்.நீங்கள் அதற்குத்  தொடர்பு படுத்திக் கொண்டதற்கு  நான் பொறுப்பல்லபரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டது ஆண்ட கட்சிஆளும் கட்சி என அனைத்தையும் தான குறிக்கும் . மக்கள் நல அரசு என்ற பெயரில்  மக்கள் விரோத அரசைத்தான் ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  "அளவுவேண்டுமானால் வேறுபடலாமே தவிர கொள்ளைகள் குறைவதில்லைகூடு தல் தகவல் தங்களுக்குத தெரியுமானால் தெரிவிக்கலாம்ஏற்றுக் கொள்ளப்படும். என்றார்.

         சுதந்திரக் கிளி கூண்டுக்கிளி  படப் பதிவு இதற்காக அனுப்பப்பட்டதல்ல
 என்கிறீர்கள்.  ஆனால் நான் அந்தப் படப்பதிவின் மேற்குறிப்பாகக் கேள்வி கேட்டேன்.  என் கேள்விக்கு மேற்குறிப்பாக (தனியாக அல்ல மேற்குறிப்பாகவேஅரசுப் பணத்தில் மக்களின் வரிப்பணமும் அடங்கமே என பதிலளித்துள்ளீர்கள்.  இன்றைய மைய அரசின் மீது எனக்கு புகார் உண்டுமுக்கியமாக பெட்ரோல்  விலை.  ஆனால் ஆண்ட அரசு ஆளும் அரசு என ஒரே வகையில் வகைப்படுத்துவது பொறுத்தமற்றது.  வாரக் கடனை வசூலிப்பதில் இந்த அரசின் IBC (Indian Bankruptcy Code) சட்ட நடவடிக்கை கை மேல் பலனை அளித்து வருகிறது.  எஸ்ஸார் குழுமம் மட்டும் 54000 கோடி (இது வரை வாரக் கடனாக இருந்தகடனை திருப்பிச் செலுத்த முன் வந்ததுள்ளது.  இந்த அரசையும் மல்லையாவிற்கும் நிரவ் மோடிக்கும் கடன் வழங்கிய காங்கிரசு அரசையும் எப்படி ஒரே தராசில் வைக்கிறீர்கள்?  அதைவிடக் கொடுமை இந்த இரண்டு வாரக் கடன் மோசடிகளையும் பட்டேல் சிலையையும் ஒரு வகைப்படுத்துவது தான்.  மேலும்
அது குஜராத் மாநில அரசின் திட்டம்நரேந்திர மோடி முதல்வராகவும் மைய அரசில் காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்த போது தொடங்கிய திட்டம்.

.  அது ஒரு சிலைமட்டுமல்லஒரு வரலாற்று பெட்டகம்மிகப் பெரிய கட்டுமானம்,  அது வருவாய் ஈட்டக் கூடிய சுற்றுலாத் தலம்.  இதையும் வராக் கடன் மோசடிகளையும் ஒரே தராசில் வைப்பதில் ஒரு அணு அளவு கூட நாணயம் இல்லை என்பதோடுதாங்களும் தெரிந்தே திசைதிருப்பவது எனக்கு வருத்தமளிக்கிறது  என்றேன்


அதற்கு,அவர் படேலின் புகழைப் பாட மோடி  முன் வந்த து தான் மிகப்
பெரிய நாணயக்கேடுஏனென்றால் மோடி ஆரஎஸ்எஸ்.சின்வார்ப்பு.  அந்த இயக்கம்பற்றி சிலை நாயகர் படேலின் கருத்தையும் கீழே உள்ள பதிவில் கொடுத்துள்ளேன்மோடியின் பொருளாதாராக் கொள்கை எவ்வளவு  மோசமானது என்பதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் உட்படப் பலரும் தொடர்ந்து கண்டனக் கணைகளை வீசி வருகிறார்கள் நாடு சீரழிந்து வருவதை அச்சுதானந்தன் மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார் .  எனவே அவரவர் கருத்து அவரவருக்குகாலம் எது சரி என்பதை முடிவு செய்யும்செய்யட்டும்.!  என்றார்
இதற்கு நான்
சர்தார் படேலின் பெருமித அடையாளம் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து தான்அதற்குத் தான் ஒற்றுமையின் சின்னம் எழுப்பப்பட்டதுஇதனை ஜின்னா எழுப்பியிருந்தாலும் அது படேலின் வெற்றி தானே தவிர ஜின்னாவின் நாணயக் கேடல்லநிற்க படேல் சிலையையும் வங்கி கடன் மோசடியாளர்களையும் ஒரே தராசில் வைக்கக் கூடாது என்ற கருத்து நீங்கள் இந்தப் பதிவிலும் மறுக்கவில்லை என்று பதிலளித்தேன்
அதற்கு அவர்
படேல் சிலை வைக்கப்பட்டதில் உள்ள மோசடி பற்றியும் தான் செய்திகள் வந்து கொண்டுள்ளன!
நலந்தா செம்புலிங்கம்
06.11.2018