Wednesday 18 October 2017

தமிழ் இந்து தி.மு.க வை நேரடியாகவே ஆதரிக்கலாம்


 திராவிட இயக்க நூற்றாண்டு, திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சி, முதுபெரும் தலைவர் கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி நிறைவு ஆகிய திராவிட இயக்கத்தின் மூன்று முக்கியமான தருணங்களை தமிழ் இந்து நாளிதழ் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்" என்ற நூலை வெளியிட்டுக் கொண்டாடுகிறது.

          திராவிட இயக்கத்தின் பெரும் பங்களிப்பாக கருதப்படும் இறை மறுப்புக் கொள்கையும்  சாதி மறுப்புக் கொள்கையும்  இன்று எந்த நிலையில் உள்ளன? முன்பு கோவில்கள் மட்டும் இருந்தன, அங்கு கூட்டமும் குறைவாகவே இருந்தது.  இப்போது கோவில்களில் கூட்டம் பெருகிவிட்டது, பரிகார நேர்த்திக் கடன்கள் அதைவிடப் பெருகிவிட்டன போலிச் சாமியார்கள் ஏராளமாகிவிட்டனர்.  மந்திர மாந்திரீக வசிய குட்டிச் சாத்தான் விளம்பரங்கள் நாளிதழ்களில் மலிந்துவிட்டன.  சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு வருகிறது, சில வேளைகளில் கலவரமும் வெடிக்கிறது.      

           திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சி நிறைவில் எல்லோரும், இந்த. திராவிட இயக்கங்களால்  தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின்  ஆட்சி மீண்டும் மலராதா எனத் தவிக்கிறார்கள். 


             துக்ளக் ஆசிரியர் அமரர் சோ பாரதிய ஜனதா கட்சியால் பாரளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார்.  வெவ்வேறு காலங்களில் கலைஞரையும் ஜெயலலிதாவையும் மாறி மாறிஆதரித்திருக்கிறார். அவருடைய சாா்புத்தன்மை ஒரளவு கேள்விக்குள்ளானது, பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, 

               இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் சம  தொலைவில் விலகியிருக்கும் நடுநிலையாளர்களுக்கு   ஏதாவது ஒரு கட்சியை மட்டும் தான் விலக்க முடியும் என்ற யதார்த்த நிலை ஏற்படும் போது துக்ளக்கின் சார்பு நிலை வழிகாட்டுதலாகவே இருந்தது.  அதற்குக் காரணம் சோ அவர்களின் வெளிப்படைத்தன்மை தான்.

                  கலைஞர் அல்லது ஸ்டாலின் தலைமையிலான தி, மு, க தான் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு ஒரே வழி என தமிழ் இந்து கருதுமேயானால் அதை வெளிப்படையாகச் சொல்லாம்; தமிழ் இந்து தி.மு.க வை நேரடியாகவே ஆதரிக்கலாம்.  போயஸ் தோட்டத்தில் திரு "இந்து" ராம் பவ்வியமாக துக்கம் விசாரிப்பதை போல திருமதி சசிகலாவின் தலைமையை அங்கீகரித்தை தமிழ்நாட்டு மக்கள் பெரிதுபடுத்தமாட்டார்கள். (அன்றைய தினம் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்திடம் இவர் துக்கம் கேட்டாரா என்பது தெரியவில்லை)



No comments:

Post a Comment